நவகிரகங்கள் - 9. கேது !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:39 PM | Best Blogger Tips
Picture


9. கேது 
கேது சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.இராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். பாட்டியார்,மாந்தரீகம்,ஞானம்,மோட்சம்.,விநாயகர் வழிபாடு,விரக்தியடைதல்,விபசாரம் செய்தல்,தற்கொலை செய்யும் எண்ணம்,புண்ணிய ஸ்தல யாத்திரை.சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார். இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும்,  மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும்  காரகத்துவம் உள்ளது கேது. எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும்  கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது.  கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம்.
                                          கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை  என்பது ஜோதிட பழமொழி. விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம்,  விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை  வழங்குபவர். ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான். விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம். கேது தோஷமுள்ளவர்கள் கீழ்ப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வழிபடலாம். செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டை மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். கேது பகவானுக்குரிய தோத்திரம் பாடி வழிபட்டு வர எல்லா நலன்களும் பெறலாம்.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
மூலவர்:நாகநாதர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்:சவுந்தர்யநாயகி
தல விருட்சம்:மூங்கில்
தீர்த்தம்:நாகதீர்த்தம்
ஆகமம்/பூஜை:காமிகம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் ஊர்:கீழப்பெரும்பள்ளம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
                                           சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனியில் வாசுகி உற்சவம். நவக்கிரகங்களில் இத்தலம் கேதுவுக்கு உரியது. காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழ்ப்பெரும்பள்ளம் - 609 105. தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். இத்தலவிநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கேதுபகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார். படிப்பில் முன்னேற, குடும்பவிருத்தி பெற இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம். நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேதுபகவானையும் வழிபடலாம். ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்மநட்சத்திரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடலாம். கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, பலவர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள். 
தலபெருமை: எமகண்டகால வழிபாடு: இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள். இதற்கு ரூ.75 கட்டணம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம். அபிஷேகத்திற்கு ரூ.450, தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கு ரூ.3,500 கட்டணமாக வசூலிக்கின்றனர். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்னை, விபத்து, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக்கொள்ளலாம். பங்குனியில் வாசுகி உற்சவம் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளில் கேதுவிற்கு, சிவன் காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கும். வருடத்தில் இவ்விழாவின்போதும், கேது பெயர்ச்சியின்போது மட்டுமே, கேது வீதியுலா செல்வார்.
விசேஷ ஹோமம்: ராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. அர்ச்சகர்களே இதை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே, 16 வித பூஜை செய்து, 7 லட்சம் ஜபமந்திரம் சொல்லி, பின்பு கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயசம், சூர்ணம், வடை, சாதம், பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் பலனடையலாம். அன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்குரிய பொருட்களையும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்னதாகவே கொடுக்கலாம்.
இரட்டை சூரியன்: கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.  
தல வரலாறு: தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது. வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்' என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.
நிறம்-சிவப்பு மலர்-செவ்வல்லி
தானியம்-கொள்
திசை-வடமேற்கு
காரகம்-ஞானம்,மோட்சம்
உச்சம்-விருச்சகம்
நட்சத்திரங்கள்-அசுவனி,மகம்,முலம்
பால்-அலி
நட்பு-சனி,சுக்கிரன்
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
சமம்-புதன்,குரு
திசைகாலம்-7 ஆண்டுகள்
கோசரகாலம்-1 1/2 வருடம்
 சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை,
பிரம்மன் பிரத்யதி தேவதை.
வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை.
வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம்.
கேது 1 ஆம் வீட்டில்  இருந்தால் எதிரிகளால் பிரச்சினை உண்டாகும். தொழில் திறமை இருக்கும் உடம்பில் பிரச்சினை உருவாகும். சனியின் வீடுகளான மகரம் கும்பம் வீடுகளில் கேது தங்கியிருந்தால் இந்த நாட்டையை ஆளலாம். செவ்வாய் வீடான விருச்சகத்தில் தங்கி இருந்தாலும் அந்த யோகம் கிடைக்கும் பிற வீடுகளில் இருந்தால் அந்தளவுக்கு இருக்காது கஷ்டத்தில் தான் வாழ்க்கை வாழவேண்டிருக்கும். நான் பார்த்த வரையில் சனியின் வீடுகளில் அல்லது சனியுடன் கேது இருந்தால் அந்த ஜாதகன் பணக்காரகனாகத்தான் இருப்பார்.
கேது 2 ஆம் வீட்டில்  இருந்தால் தன பிரச்சினை உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். படிப்பில் அந்தளவுக்கு விருப்பம் இருக்காது. குடும்பத்தில் செய்வினை கோளாறுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறைந்து இருக்கும். திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் முடிந்தவுடன் குழந்தை பேறும் தடை ஏற்படும்.
கேது 3 ஆம் வீட்டில்  இருந்தால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள் இவர்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் பிரச்சினை தான். கல்வியில் விருப்பம் இருக்காது. காமத்தின் மீது தீவிர ஈடுபாடு இருக்கும். நல்ல துணிவுடன் இருப்பார் எந்த காரியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். பரிகாரம் ராமேஸ்வரம் தான்.
கேது 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாய் நலம் கிடைக்கும். தாயாரின் வழியில் பிரச்சினை தான். தாயாரின் உடன் பிறந்தவர்களில் யாராவது ஒருவர் திருமண வாழ்வில் பிரச்சினையில் இருப்பார்கள். தீய எண்ணங்களில் மனது செல்லும். பிறரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டார்கள். வாகனங்கள் வாங்குவதற்க்கு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வானங்களால் பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். வீடு கோவிலுக்கு அருகில் இருக்கும் அதுவும் பிள்ளையார் கோவிலாக இருக்குகூடும்.
கேது 5 ஆம் வீட்டில்  இருந்தால் கெட்ட குணம் இருக்கும். புத்தி கூர்மை இருக்காது. வயிற்று வலி ஏற்படும். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். அப்படியே குழந்தைகள் இருந்தாலும் அந்த குழந்தைகளால் இவர்களுக்கு ஒன்றும் நன்மை நடைபெறாது. விநாயகரை வழிபாட்டு மூலம் இன்பம் காணலாம்.
கேது 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். இளமை காலத்தில் பிரச்சினை இருக்கும். உறவினர் மூலம் நல்ல மரியாதை இருக்கும். நல்ல சுகபோகமான வாழ்க்கை வாழலாம் கடக ராசியாக இருந்தால் மதுபானம் மீது கடுமையான ஈடுபாடு இருக்கும். ஜலதோஷம் அடிக்கடி ஏற்படும். தண்ணீரில் கண்டம் ஏற்படலாம் எச்சரிகை தேவை.
கேது 7 ஆம் வீட்டில்  இருந்தால் களத்திரதோஷம் ஏற்படும். திருமணத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளமை கால வாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவி அல்லாத பெண்களுடன் தொடர்பு ஏற்படும். திருமண வாழ்க்கையை நினைத்து மனக்கவலை அடையும். உடம்பில் நோய் ஏற்படும்.
கேது 8 ஆம் வீட்டில்  இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சினை. ஆயுள் பலம் குறையும். உடம்பில் நோய் தோன்றி புண் வரும். முறை தவறி நடக்ககூடும். தற்கொலை எண்ணம் தோன்றும். பொதுவாக கேது இந்த வீட்டில் இருந்தால் நோய்களை தருவார்.
கேது 9 ஆம் வீட்டில்  இருந்தால் பித்ரு தோஷம் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்படும். தந்தையுடன் எல்லா நேரங்களிலும் சண்டை தான் போடுவார். தெய்வ பக்தி இருக்காது. நண்பர்கள் உதவி செய்வார்கள். மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. பிற மதத்தவர் உதவி செய்வார்கள்.
கேது 10 ஆம் வீட்டில்  இருந்தால் கலைகளில் ஈடுபாட்டுடன் இருந்து கலைஞராக இருப்பார். பிறர் மனதை நோகடிக்கமாட்டார். இரக்கமனம் இருக்கும். நல்ல தன்னம்பிக்கையுடன் தொழில் செய்து வெற்றிக்கொள்வார். மதங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார். தந்தை நலமுடன் இருக்கமுடியாது . தந்தை பணத்திற்க்காக கஷ்டபடுவார்.
கேது 11 ஆம் வீட்டில்  இருந்தால் சொத்துக்கள் சேரும் செல்வநிலையில் நன்றாக வாழ்வார் நண்பர்களின் உதவி இருக்கும். சுகபோகங்களுக்கு குறை இருக்காது. நல்ல பணவரவு இருக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்புடனும் பெயருடனும் இருப்பார்கள். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை இருக்கும்.
கேது 12 ஆம் வீட்டில்  இருந்தால் இதுதான் ஜாதகரின் கடைசி பிறவியாக இருக்ககூடும். புண்ணிய தலங்களுக்க அடிக்கடி செல்வார். பணசேமிப்பு இருக்காது அனைத்தும் புண்ணிய காரியங்களுக்கு செலவாகும். இல்லற சுகபோகங்களில் ஈடுபாடு இருக்காது. பாதங்களில் நோய் ஏற்படக்கூடும். நல்ல திறமையாக வாதங்களில் ஈடுபட்டு வெற்றிக்கொள்வார்.
 
கேது (துஷ்ட சக்திகளை விரட்டிட)
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்


Via  (சித்தர்கள்) angelinmery