இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....
முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....
நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....
ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட
பரவாயில்லைனு தோணும்.....
அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்....
எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!!
காலமாற்றம்....காலச்சுழற்சி...கால நேரம்....!!!!!
பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!!!!
ஆணவம் எல்லாம்பணிவா மாறும்....!!!!
அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!!!!
மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!!!!
எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ....
அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!!!!
எதற்காக ஓடினோம்....
எதற்காக ஆசைப்பட்டோம்....
எதற்காக எதைச் செய்தோம்.....
என்ற காரணங்கள் எல்லாமே .....
காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!!!
தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து
ஆட விடுவதும் காலம்தான்...
அதன் பின் ஆட்டத்தை அடக்கி....
மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும்
அதே காலம்தான்....!!!!
வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,...
உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!!!!
வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.....
அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்....
Thanks & Copy from Web