"நான் உங்களை நோக்கி சகோதர சகோதரிகளே
என சொன்னதும் கைதட்டுகின்றீர்கள்
எங்கம் மதம்
எங்களுக்கு இதைத்தான் போதிக்கின்றது, பெற்றோரும். குருவும் மனைவியும்
தவிர ஒருவனுக்கு எல்லா உறவும் சகோதர உறவே
அதுவும் இந்து
சன்னியாசிக்கு எல்லோரும் சகோதரர்களே எனும் சொல்லும் தர்மத்தின் வழியில் இருந்து
வந்திருக்கின்றேன்
உங்கள் நாட்டில்
பெண்களை அம்மா என அழைத்தேன் என்னை கோபமாக பார்த்தார்கள், எனக்கு வயதாயிற்றா? என சீறினார்கள்.
அம்மா என
அழைத்தால் மூதாட்டி என நினைத்தாயோ என திரும்ப கேட்கின்றார்கள்
நான் பொறுமையாக
சொன்னேன், உங்கள் நாட்டில் இந்த கிறிஸ்தவ
சன்னியாசிகள் உண்டல்லவா? அப்படி இந்து சன்னியாசி நான்
எங்கள் நாட்டில்
சன்னியாசிகள் எல்லா பெண்களையும் தாயே என்றுதான் அழைப்போம், அது வயதான பெண் என்றாலும் சரி, சின்னஞ்சிறிய மகவு என்றாலும் சரி
எல்லா பெண்களும் எங்களுக்கு தாயே..
பெண்களை அம்மா
எனவும் தாயே எனவும் அழைக்கும் மிகபெரிய தர்மம் எங்கள் தர்மம், அந்த மாபெரும் சிறப்புமிக்க பூமியில் இருந்து வந்திருக்கின்றேன்
துறவு என்பது
விஞ்ஞானமல்ல அதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் விஞ்ஞானியும் துறவி அல்ல, ஆன்மீகம் என்பது அனுபவித்து உணரவேண்டியது, தெய்வத்தை உணர வைப்பவனே துறவி என சொல்லும் அந்த மதத்தில் இருந்து
வந்திருக்கின்றேன்
கண்
தெரியாதவனுக்கு உலகை காணமுடியாது, அகங்காரம் கொண்டவனுக்கு ஆண்டவனை காண
முடியாது
எங்கள் நாட்டு
சன்னியாசிகள் அழுக்கானவர்கள் என்பார்கள், கந்தலாடை அணிந்தவர்கள் என்றெல்லாம்
சொல்வார்கள், ஆம் அழியபோகும் உடலுக்கு ஏன் அழகு
என குறிப்பால் சொல்வது எம் தர்மம்
எங்கள் தர்மம்
உலகில் எந்த மதமும் சொல்லா தியானத்தை போதிக்கின்றது, தன்னை வெல்வதே மாபெரும் வெற்றி என்பதை சொல்கின்றது
குளத்து ஆமை கடல்
குளத்தைவிட பெரிதாக இருக்கமுடியாது என மடதனமாக நம்புவதை போல் அது நம்ப சொல்லவில்லை, விரிந்து பரந்த கடவுளை மனதின் மிகபெரிய இடத்தில் இருந்து நோக்கி
அதன் பிரமாண்டத்தை உணர சொல்கின்றது
கடவுள்
என்பவருக்கு கைகாட்டும் தர்மம் அல்ல இது, மனதால் தியானித்து அககண்ணால் அவனை
தன்னுள்ளே காண செய்யும் அற்புதமான தர்மம் இது
அம்மதம் யாரையும்
வெறுக்கவுமில்லை, மிரட்டி பணியவைக்கவுமில்லை. அந்த
ஜோதி தன்னை உணர்ந்தவனை ஏற்றுகொள்கின்றது, தன்னை உணராமல் செல்பவனை நோக்கி
பரிதாபபடுகின்றது
அது
சுதந்திரமானது, யார்மேலும் அதிகாரத்தையோ
கட்டுபாட்டையோ திணிக்காதது, அதற்கு ஒரே தலைவன் என்றோ மிகபெரிய
கட்டுபாடு என்றோ எதுவுமில்லை
கடலில் மீன்கள்
சுதந்திரமாக உலாவது போல், வானத்து பறவைகள் பறப்பது போல் ஒரு
இந்து தன் சமூகத்தில் சுதந்திரமாக உலாவ முடியும், அவர்களை ஆடு மாடுகளை போல் ஒருவன் கண்காணிக்கும் அவசியமே இல்லை
அது ஆயிரமாயிரம்
வழியினை தன் பக்தர்களுக்கு சொல்கின்றது, பல பிரிவுகள் அதில் உண்டு ஆனால்
எல்லா நதியும் கடலுக்கு செல்வது போல் அதன் எல்லா கிளையும் இறைவனை நோக்கியே பக்தனை
இழுத்து செல்கின்றது
இந்த உலகம்
போர்களால் நிறைந்துள்ளது, இந்த போர்களுக்கு பின்னால் பேராசை
நிறைந்துள்ளது, அந்த பேராசைக்கு காரணம் அவரவர்
மதங்கள் அரசியலாகிவிட்டன, மானிட மனங்களை அவற்றால்
செம்மைபடுத்தமுடியவில்லை
எங்கள் தர்மம்
மனதோடு பேசுகின்றது, அது மனதுக்கு அமைதியும் நிம்மதியும்
கொடுக்கின்றது, மனம் செம்மையானால் அன்பும்
சகோதரத்துவமும் அமைதியும் செழிக்கும், அங்கே போருக்கும் சண்டைக்கும் வழி
இல்லை
எம்மதம்
எம்தேசத்தில் அந்த அற்புதத்தை செய்கின்றது, சில கண்டங்கள் இனம் மதம் மொழி என
அடித்து கொண்டிருக்கும் நிலையில் எம் துணைகண்டம் இனம், மொழி என பிரிந்திருந்தாலும் ஒரே நாடாய் அமைதியாய் நிற்கின்றது
சாத்வீர்கமான
இந்துமதத்தின் பெருமை அதுதான், அதுதான் மொழி இனம் என பிரிந்த
மக்களை பாரத மக்களாக நிறுத்தி வைத்திருக்கின்றது, அதிகார வர்க்கங்கள் அஞ்சுவதும் ஆச்சரியமாக பார்ப்பதையும் அதைத்தான்
உலகுக்கே
ஒற்றுமையும் அன்பையும் உண்மையான ஆன்மீக தத்துவங்களையும் மானிடரை மானிடராக
வாழவைக்கும் அற்புத ஞான களஞ்சியங்களையும் கொண்டிருக்கும் மகா உயர்ந்த ஹிந்து
தர்மத்தின் சாட்சியாக உங்கள் முன் நிற்கின்றேன்
இந்துவாக இருந்த
ஒரே காரணத்தால் இந்த வாய்ப்பினை கொடுத்த இந்துமதத்தை மனதார வணங்கி உரையினை
தொடங்குகின்றேன்"
: 1893ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் தேதி சிகாகோ உரையில் சுவாமி
விவேகானந்தர்
நன்றி இணையம்