ஆண்மை அதிகரிக்கும் லேகியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:03 PM | Best Blogger Tips


திப்பிலி, ஜாதிக்காய், பூனைக்காலி விதை, நிலப்பனைக்கிழங்கை மற்றும் கசகசாவை ஆகியவற்றை முறைப்படி நிழலில் உலர்த்தி சலித்து பசும்பாலை ஊற்றி இளஞ்சூட்டில் தேனை ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்றி இளகல் பதத்தில் எடுத்து ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருள்கள்:


திப்பிலி = 200 கிராம்
ஜாதிக்காய் = 50 கிராம்
பூனைக்காலி விதை = 100 கிராம்
நிலப்பனைக்கிழங்கு = 100 கிராம்
கசகசா = 50 கிராம்
தேன் = 500 கிராம்
நெய் = 500 கிராம்
பசும்பால்.
இளநீர்.

செய்முறை:

திப்பிலியை சுத்தம் செய்து கொள்ளவும். ஜாதிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தவும்.

பூனைக்காலி விதைகளை குறிப்பிட்டுள்ள எடைக்கு மூன்று மடங்கு கூடுதலாக எடுத்து ஓடுகளை நீக்கி விதைகளை ஒன்றிரண்டாக உடைத்து பாத்திரத்தில் போட்டு 300 மி.லி பசும்பாலையும், 150 மி.லி இளநீரையும் ஊற்றி 6 மணி நேரம் மூடி வைத்திருந்து எடுத்து நிழலில் உலர்த்தவும்.

நிலப்பனைக்கிழங்கை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு முதன் முறை களைந்த பச்சரிசி கழுநீரை 500 மி.லி ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.

கசகசாவை மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி இளநீரை ஊற்றி 6 மணி நேரம் மூடி வைத்திருந்து கசகசாவை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்றாக இடித்து சலித்து கொள்ளவும். ஒரு மண் பானையை அடுப்பில் வைத்து 100 மி.லி பசும்பாலை ஊற்றி இளஞ்சூட்டில் தேனை ஊற்றி சிறிது சூடேற்றி இடித்து சலித்து வைத்த மூலிகைகளையும் போட்டு கிளறி இளகல் நிலையில் நெய்யை ஊற்றி கிண்டி இளகல் பதத்தில் எடுத்து ஆற விட்டு பாத்திரத்தின் வாயை சலவை துணியால் கட்டி மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

உபயோகிக்கும் முறை:

இந்த இளகலை காலை உணவு சாப்பிட்டு முடிந்த பிறகு 1 தேக்கரண்டி அளவும், இரவு உணவு சாப்பிட்டு முடிந்த பிறகு 1 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு சிறிது பால் அல்லது வெந்நீர் குடித்து வரவும். இவ்வாறு 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறையும்.




நன்றி ஆரோக்கியமான வாழ்வு