தேவையானவை:
இளம் வாழைத்தண்டு – 2
பார்லி – 50கிராம்
மிளகுப்பொடி – 4 ஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பால் – 1/2 கப்
செய்முறை:
வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.
பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.
அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி உப்பு, எலுமிச்சம்பழச்சாறு மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.
குறிப்பு:
வாழைத்தண்டை பச்சை சாறாக அருந்த பலருக்கும் பிடிக்காது.
அதனால் இப்படிச் செய்வதால் பிடித்தமான உணவும் ஆகிவிடுகிறது!
வாழைத்தண்டு சாறு பச்சையாக அருந்தினால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சளி பிடித்துவிடும். இப்படிச் சூப்பாக அருந்தும்போது விருப்பமாகவும் இருக்கும்.
சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கு அருமையான மருந்து.
உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் குறைக்க செய்யும்.
அருமையான மருத்துவ உணவு!