குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறார்களா? இதற்கு உணவு வகைகள்
பலவற்றை சம்பந்தப்படுத்தி தீர்வுகளாக கூறப்படும் வதந்திகளை
கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பிரச்சனையை சரிசெய்ய சில உணவு முறையை
மாற்றி அமைத்தால் போதுமானது. பொதுவாக
குழந்தைகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் பானங்கள் மற்றும் தண்ணீர் அதிகம்
பருகுவதை குறைத்து கொள்ள வேண்டும். மேலும் ஆரஞ்சு சாறு மற்றும் காரமான
உணவையும் தவிர்க்கவும்.
குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த, அனைத்து வழிகளையும் கடைபிடிக்கும் ஆவல் நிச்சயம் அனைத்து பெற்றோருக்கும் இருக்கும். ஆனால் அவற்றைப் பின்பற்றும் முன், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனால், குழந்தையின் உடல்நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும்.
எனவே தான் தூக்கத்தில் சிறுநீர் கழித்தலுக்கு குறிப்பிட்ட சில உணவுகளை சுட்டிக்காட்ட மருத்துவர்கள் தயங்குவார்கள். ஏனென்றால் அதற்கு தகுந்த ஆதாரங்களோ சான்றுகளோ கிடையாது. இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
கார உணவுகள் - கட்டுக்கதை
கார உணவுகளை சாப்பிடுவதால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க நேரிடும் என்று நம்பப்படுகிறதா? அப்படியானால் அந்த நம்பிக்கையை உடைத்தெறியும் நேரம் வந்துவிட்டது. ஏனெனில் கார உணவுகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க தூண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கார உணவுகள் சிலரின் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சிறுநீர் கழிவதை உணர முடியாத வியாதி உள்ளவர்களை, கார உணவை தவிர்க்க சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் கார உணவுக்கும், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று ஆராய்ச்சிகள் பல கூறுகிறது.
சிட்ரஸ் பழங்கள்- கட்டுக்கதை
கார உணவுகளைப் போல் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் உணவுகளும், அதன் அமிலத்தன்மையால் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் குழந்தைக்கு ஆரஞ்சு சாறு மற்றும் எலுமிச்சை பானம் கொடுக்காமல் தடுத்து, அவர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணி தப்பு கணக்கு போட வேண்டாம். ஏனென்றால், சிட்ரஸ் உணவிற்கும், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு சான்றும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
காப்ஃபைன்- நிஜம்
உணவு அல்லது பானம் எதுவாக இருந்தாலும் சரி, அதில் காப்ஃபைன் கலந்திருந்தால், அது சிறுநீர்ப் பெருக்கியாக விளங்கும். அதனால் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வல்லுனர்கள் கூறும் ஒரு தீர்வு, மதியம் அல்லது மாலை நேரத்திற்கு பின் காப்ஃபைன் கலந்த பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதாகும்.
குழந்தைகள் குடிக்கும் காபி, தேநீர், கோலா போன்ற பானங்களில் காப்ஃபைன் கலந்திருக்கும். மேலும் அனைத்து குழந்தைகளும் விரும்பும் சாக்லெட்களில் கலந்திருக்கும் ரசாயனத்தில் ஒன்று காப்ஃபைன். எனவே காப்ஃபைன் கலந்த உணவை உண்ணும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பானங்கள்- நிஜம்
தூங்கும் முன்பு குழந்தைக்கு குடிக்க சிறிதளவு மட்டும் தண்ணீர் கொடுத்தால், அவர்களுடைய சிறுநீர்ப்பை நிறைவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் குழந்தையும் படுக்கையை நனைக்க அதிக நேரம் ஆகும். இவ்வாறு நேரம் அதிகமாக இருப்பதா, குழந்தை படுக்கையை நனைக்கும் முன் விழிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை தூண்டும் உணவுகளை கண்டுப்பிடிப்பதற்கான ஒரு ஸ்மார்டான டிப்ஸ். வல்லுனர்கள் இதற்காக ஒரு குறிப்பேட்டை உபயோகிக்க சொல்லுகிறார்கள். இதில் தினமும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நிகழ்வை குறிக்க வேண்டும். அதை வைத்து இந்த நிகழ்வுக்கும் உணவுக்கும் ஏதாவது அமைப்பு முறை இருக்கிறதா என்பதை அடையாளம் காணலாம்.
குழந்தைகள்
சில குழந்தைகள் ஒரு திட்ட அமைப்பு தீட்டி, எந்த வகை உணவு உட்கொண்டால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதை கண்டறிய ஆவல் கொண்டிருப்பார்கள். இது குழந்தைகளுக்கு இரண்டு வகையில் பயன் அளிக்கும்:
1. தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதில் ஒரு கட்டுப்பாடு வரத் தொடங்கும். இதை சரிசெய்ய அவர்களே பொறுப்பையும் சுமப்பர்.
2. சில உணவால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று அவர்கள் நினைத்து, அதை உண்ணாமல் தவிர்ப்பதால், அந்த நம்பிக்கையே இந்த பழக்கத்தை மாற்ற உதவி புரியும்.
அணுகுமுறை
படுக்கையை நனைக்கும் பல குழந்தைகள், முக்கியமாக வயதில் பெரிய குழந்தைகள், இந்த பழக்கத்தினால் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இதனால் பெற்றோர்கள் அதிகமாக எரிச்சலும் கோபமும் அடைந்து, குழந்தையின் தவிப்பை மேலும் அதிகரிப்பதால், மனரீதியாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அது இந்த பழக்கத்தை அதிகமாக்கச் செய்யுமே தவிர குறைக்க வழி வகுக்காது.
அதனால் பெற்றோர்கள் முயற்சிக்கும் அணுகுமுறை யாவும், இந்த பழக்கத்தை மாற்றவே என்பதை குழந்தைகள் உணருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு