எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, இதை நல்லெண்ணெய் என்று நமது வழக்கு மொழியில் கூறுகிறோம்.
எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும் போது ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும், பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. எள்ளில் 20% புரதமும் 50% எண்ணெய்யும் 16% மாப்பொருளும் உள்ளன.
உடல் மெலிவாக உள்ளவர்கள் எள்-ஐ உட்கொண்டால் உடல் வலுவடையும். இதைத்தான் முன்னோர்கள் சுருக்கமாக 'இளைத்தவனுக்கு எள்ளு. கொளுத்தவனுக்கு கொள்ளு' என்று கூறியுள்ளார்கள்.
தேவையானவை:
வடித்த சாதம் - அரை கப்,
எள்ளு (அரைத்த விழுது) - கால் கப்,
வெல்லம் - ஒரு கப்,
காய்ச்சிய பால் - ஒன்றரை கப், நெய் - 4 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10.
செய்முறை:
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு லேசான பாகு பதத்தில் காய்ச்சவும். இதில் பால், எள்ளு விழுது சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடித்த சாதத்தை சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
எள்ளு பாயசம்:
எள்ளை அப்படியே அரைக்காமல் லேசாக வறுத்து, ஒரு டீஸ்பூன் முந்திரி சேர்த்து அரைத்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு