திருவண்ணாமலை
நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய
குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. *சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை
ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி
முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர்
குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின்
முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. *பல்லவர்கள் ஆட்சிக்கு முன்
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய
தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக
விளங்கியது.
திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை
நகராட்சி"யாக உருவாக்கபெற்றது. *1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக
உயர்த்தப்பட்டு, 1971 இல்
முதல் நிலை நகரட்சியாக உருவானது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"யாகவும் தரம்
உயர்த்தப்பட்டது. திருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும்.
சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். பிற தலங்களில், சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும்
தலங்கள் ஆகும்.
திருவண்ணாமலையில் வருடம் முழுவதும்
திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இது தவிர ஓரு
வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக
சிறப்பானதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November)
அல்லது டிசம்பர் (December)
மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில்
பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா
ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.
பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம்
ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள்
எரியக்கூடியது.
இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள்
அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என
அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி
வருவர்.
இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும்
வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.
Via FB சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?