பாரத பண்பாடு....!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 7:25 | Best Blogger Tips
மற்ற எந்த தேசத்திலும் இல்லாத அளவு தனிமனித ஒழுக்கமும், கட்டுப்பாடும் நம் பாரத பண்பாட்டிலே வற்புறுத்தி சொல்லப்பட்டுள்ளன. காலப் போக்கில் பல காரணங்களினால் அவைகள் எல்லாம் முறை தவறிப் போய் விட்டன. எங்கோ ஒரு மூலையில் ஓரிருவர் கடைபிடிக்கிறார்களே அன்றி மற்றவர்கள் அதைக் குறித்து எண்ணுவது கூட இல்லை. கலாச்சாரம் பண்பாடு எல்லாம் மாறி விட்டன. 

நான் யோசித்துப் பார்க்கிறேன். எதற்காக இது போன்ற பண்பாடு, கலாச்சாரம் போன்ற கட்டுப்பாடுகளை, விதி முறைகளை முன்னோர்கள் வகுத்து கடைபிடித்து வாழ்ந்தார்கள் ? என்று. அதாவது மிருகம் அல்லது மற்ற உயிரினங்களில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு மட்டுமே. அதனால்தான் தன்னை விட வலிமையான மிருகங்களையும் சக்திகளையும் மனிதன் அடக்கி ஆளமுடிகிறது. பரிணாமத்தில் ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது ? என்றால், தன்னிடமிருந்து கிளம்பிய ஜீவன்கள் தான் யார் என்பதை உணர்ந்து, தன்னிடம் மீண்டு வர வேண்டும் என்பதற்காக இயற்கையாகிய இறையாற்றலே தானே உருவாக்கிக் கொண்ட பரிணாம வளர்ச்ச்சியே மனிதன். சுருங்கச் சொன்னால் பரிணாமத்தின் எல்லை மனிதன். 

என்னதான் பரிணாமத்தின் எல்லையாக மனிதன் இருந்தாலும், அவன் கொண்டுள்ள முந்தைய பரிணாமத்தின் இயல்புகள் அவன் இறையாற்றலை சென்று அடைவதற்குத் தடையாகவே உள்ளன. போதாக் குறைக்கு வினைப் பதிவுகள் வேறு. தனக்குள்ளே பல தெய்வீக உணர்வுகளை, சக்திகளை மனிதன் பெற்றிருந்தாலும்
 அந்த சக்திகளை முறையாக வெளிப்படுத்த ஏற்றவாறான உடல் மற்றும் மனக் கருவிகளை அவன் பெற்றிருக்கவில்லை. அறிவை சரியாக உபயோகப்படுத்தாத மனிதன் முதலில் காட்டுமிராண்டியாக வாழ்ந்தான். அதன் பிறகு அவன் அந்த உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி, மன ஓட்டங்களைச் சீர் செய்து, நல்வழிப்படுத்தி மிருகம் என்ற காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதன் என்ற நிலைக்கும், நல்ல மனிதன் என்ற நிலைக்கும், தெய்வமனிதன் என்ற நிலைக்கும், தெய்வம் என்ற நிலைக்கும் தன்னை உயர்த்திக் கொள்ள தலைப்பட்டான். அந்த முயற்சிகளின் ஒழுங்கு படுத்தப்பட்ட தொகுப்பே நம் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம். இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிற மனிதன் மட்டுமே பிறவியின் முழுமையைக் காண முடியும். 

நம் பாரத பண்பாடு இரு பாலினருக்கும் கற்பு, தியாகம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, வாய்மை, திருடாமை, தூய்மை, திருப்தி, தவம், சரணாகதி, நன்னூல் ஓதுதல் போன்ற பல நல்ல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் கள்ளுண்ணாமை, கொல்லாமை போன்ற கொள்கைகளையும் வலியுறுத்துகிறது. சுருங்கச் சொன்னால் ஒழுக்கம், தருமம் இரண்டையும் ஒன்றாக விதிப்பது நம் பாரதப் பண்பாடு. மனிதனுக்குள் மாபெரும் சக்தி புதைந்து கிடக்கிறது. அதை அறிந்து கொள்ளாமல் ஐம்புலன்கள் மூலம் அடையும் சாதாரண இன்பங்களை அடைவதற்காகவே அதிக உயிர் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். தன்னைத் தானே நோக்காமல், வெளி உலகத்தையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் தான் உள்ளே பேரின்பம் இருப்பது அவனுக்குத் தெரிவதில்லை.இதை சரி செய்வதற்காகவே கண்களால் சாத்வீகமான பொருள்களை தரிசிப்பது, காதுகளால் தெய்வீக இராகங்களை, கதைகளைக் கேட்பது, மூக்கினால் சாத்வீகமான வாசனைகளை முகர்வது என்று பல சடங்கு சம்பிரதாயங்கள் தரப்படுகின்றன. இவற்றில் எல்லாம் ஈடுபட்டு மனதை ஒருமுகப்படுத்தி வலிமையாக்கி தன் பார்வையை தனக்குள்ளே செலுத்துகிறான் மனிதன். பாரத தேசத்தில் உள்ள எந்த மூலையில் உள்ள மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் ஆகட்டும், அவற்றின் முடிவு என்பது பரமாத்மாவிடம் கொண்டு போய் ஜீவனை சேர்ப்பதே ஆகும். 
அனுபவமும் மதி நுட்பமும் பெற்ற மனிதன் ஒருவன் இத்தனை சடங்குகளும், விழாவும், மரியாதைகளும், அன்பும் தன்னுடைய வெறும் உடலுக்கு அல்ல, உள்ளே ஆத்மாவாக விளங்கும் இறையாற்றலுக்கே என்பதை உணர்ந்து கொள்வான். பரம்பொருளைத் தேடி அடைவதற்கு இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தூண்டு கோல்களாக  அமைகின்றன என்பதையும் தெரிந்து கொள்வான்.

Via FB மௌனத்தின் நாதம்