தமிழில் தம்பிக்குருவி என அழைக்கப்படும் இப்பறவை மூளைக்காய்ச்சல் பறவை எனவும், பாப்பிஹா எனவும் அழைக்கப்படுகிறது.
இவை மனித குடியிருப்பிற்கு அருகிலுள்ள முந்திரி, மா, பலா, புளி
முதலிய மரங்களில் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களின் அடர்த்தி
குறைந்த காடுகளிலும் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களில் மறைந்து
வாழும், வெட்கப்படும் பறவையே. ஆனால், குயிலை விட அதிகம் மறைந்து வாழும்
பறவை. ஒப்பிட்டுப் பார்க்கும்போது குயிலை பார்ப்பதும் படமெடுப்பதும் எளிது.
தம்பிக்குருவியைப் பார்ப்பதே கடினம். காலை, பகல் முழுவதும், மாலை மற்றும்
இரவில் குயில்கள் அமர்ந்திருக்கும் அதே மரத்தில் தங்கி, குயிலோடு இணைந்து
பாடும். ஆனால், இப்பறவையின் பாடல் கேட்க சகிக்காது. பகலில் ஆகாயத்தில்
அலைந்து பாடித்திரியும்.
பறவையியலார் குறிப்பிடும் இதன் இயல்புகள் முதுகுபுறம் அடர்ந்த சாம்பல்
நிறமும், வயிறு பிரவுண் பட்டைகளுடைய வெள்ளை நிறமும் கொண்டது. இதன் வாலும்
பட்டைகளுடையது.
உரோமங்களுடைய கம்பளி புளுக்கள், பெரிய வகைப்
பழங்கள், கிளை நுனிகள் போன்றவை இதன் உணவுகளாகும். குயிலைப்போன்று இதுவும்
பிற பறவைகள் கூட்டில் முட்டையிட்டு அப்பறவைகளைக் கொண்டே அடைக்காத்து குஞ்சு
பொரிக்கும் ப்ரூட் பாரசைட்டாகும்.
தமிழில் தம்பிக்குருவி என அழைக்கப்படும் இப்பறவை மூளைக்காய்ச்சல் பறவை எனவும், பாப்பிஹா எனவும் அழைக்கப்படுகிறது.
இவை மனித குடியிருப்பிற்கு அருகிலுள்ள முந்திரி, மா, பலா, புளி முதலிய மரங்களில் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களின் அடர்த்தி குறைந்த காடுகளிலும் வாழ்கின்றன. குயில் போன்று இதுவும் மரங்களில் மறைந்து வாழும், வெட்கப்படும் பறவையே. ஆனால், குயிலை விட அதிகம் மறைந்து வாழும் பறவை. ஒப்பிட்டுப் பார்க்கும்போது குயிலை பார்ப்பதும் படமெடுப்பதும் எளிது. தம்பிக்குருவியைப் பார்ப்பதே கடினம். காலை, பகல் முழுவதும், மாலை மற்றும் இரவில் குயில்கள் அமர்ந்திருக்கும் அதே மரத்தில் தங்கி, குயிலோடு இணைந்து பாடும். ஆனால், இப்பறவையின் பாடல் கேட்க சகிக்காது. பகலில் ஆகாயத்தில் அலைந்து பாடித்திரியும்.
பறவையியலார் குறிப்பிடும் இதன் இயல்புகள் முதுகுபுறம் அடர்ந்த சாம்பல் நிறமும், வயிறு பிரவுண் பட்டைகளுடைய வெள்ளை நிறமும் கொண்டது. இதன் வாலும் பட்டைகளுடையது.
உரோமங்களுடைய கம்பளி புளுக்கள், பெரிய வகைப் பழங்கள், கிளை நுனிகள் போன்றவை இதன் உணவுகளாகும். குயிலைப்போன்று இதுவும் பிற பறவைகள் கூட்டில் முட்டையிட்டு அப்பறவைகளைக் கொண்டே அடைக்காத்து குஞ்சு பொரிக்கும் ப்ரூட் பாரசைட்டாகும்.