வைகாசி வளர்பிறை சஷ்டி ...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:34 AM | Best Blogger Tips



வைகாசி வளர்பிறை சஷ்டி
🙏

மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு அடுத்த படியாக முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சஷ்டி திதியும், விசாகம் நட்சத்திரமும் முருகனின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாட்களாகும்.

அனைத்து மாதங்களிலும் வரும் சஷ்டி திதி, முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்றாலும் முருகப் பெருமானுக்குரிய வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி திதி, அதிலும் வளர்பிறை சஷ்டி திதி வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்ததாகும்.

திதிகளில் ஆறாவது திதியாக வருவது சஷ்டி திதியாகும். அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பிறகு ஆறாவது திதியாக வருவது சஷ்டி. இதனால் இது ஆறுமுகனை வழிபட ஏற்ற திதி ஆயிற்று. முருகப் பெருமான், நரசிம்மர், திருஞானசம்பந்தர், திருக்கோட்டியூர் நம்பிகள், காஞ்சி மகா பெரியவா போன்ற தெய்வீக அவதாரங்கள் நிகழ்ந்த மாதம் வைகாசி மாதமாகும்.
Vaikasi Sashti,வைகாசி வளர்பிறை சஷ்டி 25 மே 2023..வளமான வாழ்வு  தரும்..விரதம்எப்படி இருக்கலாம் ? - vaikasi valarpirai sashti viratham :  rules and benefits - Samayam Tamil
வைகாசி சஷ்டி விரதம் :

வைகாசி மாதத்தில் சிவபெருமானுக்கு கடைபிடிக்கப்படும் ரிஷ விரதம் எப்படி சிறப்பு வாய்ந்தோ அதே போல் முருகனுக்கு வளர்பிறை சஷ்டி விரதம் சிறப்பானது. இந்த மாதத்தில் எந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டாலும் முந்தைய பிறவிகளிலும், இந்த பிறவியிலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, வளமான வாழ்வு பெற முடியும்.

விரதம் இருக்கும் முறை :

வைகாசி வளர்பிறை சஷ்டி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, வீட்டிலுள்ள முருகப் பெருமானின் படத்திற்கு செவ்வரளி மலர்கள் சூட்டி, விளக்கேற்றி வழிபட வேண்டும், நைவேத்தியமாக கேசரி அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து படைத்து, முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சரவண கவசம் போன்றவற்றை பாடி விரதத்தை துவக்க வேண்டும். அன்று காலையும் மாலையும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய வேண்டும்.
வைகாசி மாத வளர்பிறை சஷ்டி விரதம்..துன்பங்கள் நீங்க முருகனை வழிபடுங்கள் –  News18 தமிழ்
பகல் முழுவதும் உபவாசமாக இருந்து, முக்கண்ணன் மைந்தனின் நாமத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும். இந்த நாளில் மெளன விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். மாலையில் வீட்டிலும், கோவிலும் விளக்கேற்றி முருகனை வழிபட வேண்டும். மாலையில் முருகனுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

​பலன்கள் :

வைகாசி வளர்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்த எதிர்ப்புக்கள் நீங்கும். வழக்குகள் தீரும். திருஷ்டி தோஷங்கள் நீங்கும். நீறண்ட நாட்களாக வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் தள்ளிப் போகிறவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். முருகனுக்குரிய சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு கேட்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும். மனதில் உள்ள பயம் அனைத்தும் விலகும், எடுத்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி தேவி வரும்.

சஷ்டி திதி அன்று, "ஓம் சரவண பவாய நம" எந்த மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரித்தபடி இருப்பது ஆயுள், ஆரோக்கியம், புகழ், செல்வம் என அனைத்து நலங்களையும் அள்ளித் தரும். இந்த ஆறெழுத்து மந்திரம் நம்மை எப்போதும் கவசம் போல் இருந்து அனைத்து தீமைகளில் இருந்தும் காக்கும்.

 May be an image of 3 people, people smiling and temple

நன்றி
 வணக்கம்
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 

Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005