விவேகானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவாமி விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 AM | Best Blogger Tips

உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத்
தன் சொற்பொழிவால் நிலை நிறுத்தியவர்
சுவாமி விவேகானந்தர்.
அன்று 1893 லே சிகாகோவில் சகோதர சகோதரிகளே என
பேச தொடங்கி உலக சமய தலைவர்களை தன்பால்
ஈர்த்தார்.
சொற்பொழிவு முடிந்த மறுநாள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இவர் உருவ படங்கள் ஆங்காங்கே வைக்கபட்டிருந்தன.அதை அமெரிக்க மக்கள் தலை சாய்த்து வணங்கி சென்ற படி இருந்தனர்.
இந்தியா முழுமைக்கும் சுற்றுபயணம்
செய்து நல்ல கருத்துக்களை இளைஞர்களிடம்
பரப்பினார்.
உலகம் முழுவதும்
சுற்றுபயணத்தை முடித்துவிட்டு 1897 ல் பாம்பன்
வந்தார்,அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
"ஆன்மீக சிந்தனைகளை முழுவதும்
அறிந்து அதன்படி நடக்க வேண்டும்,அவ்வாறு இல்லாதவர்
நாத்திகராக இருப்பதே மேல் "என்று கூறினார்,
மேலும்
நான் சிகாகோ செல்ல உதவிய ராமநாதபுரம் மன்னர்
சேதுபதி அவர்களுக்கு நானும் இந்து சமயமும்
கடமைபட்டுள்ளது என கூறி முடித்தார்.
நன்றி:::மறைக்கப்பட்ட உண்மைகள்'
சினிமா பைத்தியம் தலைக்கேறிய காலகட்டத்தில் இந்திய இளைஞா்களின் ஹீரோவை பற்றி இங்கே கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

 நன்றி இணையம்

"உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்."

மணக்கால் அய்யம்பேட்டை | 2:16 PM | Best Blogger Tips
"உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்."

-சுவாமி விவேகானந்தர்.

மன உறுதியின் உச்சத்தை தொட்டவர்களில் இவரும் ஒருவர். இவரது வாழ்க்கையில் நடந்த அற்புதச் சம்பவங்களில் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்..

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

"சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

மனிதன் - வெற்றிகளைப் பெறு வதற்கு சில வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:28 AM | | Best Blogger Tips
ஒரு மனிதன் எடுத்த‍ எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறு வதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று வீரத்துறவி விவேகானந்தர் போதித்துள்ளார். அந்த‌ வழிகளை இங்குபார்ப்போம்.
 
* பட்டினி கிடக்காதீர்கள். 
 
* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள். 
 
* சோம்பலை துரத்தி அடியுங்கள். 
 
* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள். 
 
* அதிக நேரம் உறங்காதீர்கள். 
 
* மிக குறைவாகவும் உறங்காதீர்கள். 
 
* பொறாமை அறவே இருக்கக் கூடாது. 
 
* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள். 
 
* பேராசை படாதீர்கள். 
 
* மகிழ்ச்சியாக இருங்கள். 
 
* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு. 
 
* தைரியமாக இருங்கள். 
 
* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

 இனிய காலைவணக்கம் !

இனிய வணக்கம் !
 
Via FB சர்வம் சிவமயம்
 
சுவாமி விவேகானந்தரை சந்யாசி என்ற

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 PM | Best Blogger Tips
சுவாமி விவேகானந்தரை சந்யாசி என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் வரையறுக்க முடியாது. அவர் துறவியை விடப் பல மடங்கு சிறந்தவர். பன்முக ஆளுமை கொண்ட ஒரு சிந்தனையாளர்; சீர்திருத்தவாதி; தேசியவாதி; மனிதநேயவாதி; சிறந்த இயக்க அமைப்பாளர்; மாபெரும் ஊக்க சக்தியாளர்; பெரும் இயக்கத்தின் தலைவர்;
அனைத்திற்கும் மேல் அவர் ஓர் உலகக் குடிமகன்.

ஒரு மனிதனின் மேன்மை என்பது,

1. அவருக்கு அமையும் குருவின் தன்மை,
2. அவர் பெறும் ஞானத்தின் சிறப்பு,
3. அவர் வாழும் காலகட்டம்,
4. பல துறைகள் பற்றிய அறிவைப் பெறும் வாய்ப்பு,
5. அவரிடமுள்ள சமுதாய உணர்வு – இவற்றை அடிப்படையாகக் கொண்டது.

சுவாமிஜி இவற்றைப் பெருமளவில் பெற்றவர். அவரது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ணரைவிடச் சிறந்த ஆசானை நினைத்தாவது பார்க்க முடியுமா?
ஞானத்தில் சுவாமிஜி இமயம். அவர் வாழ்ந்த காலகட்டம், இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமானது. இந்தியா தன் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலம். அறிவியலும், தொழில்நுட்பமும் உலகில் பெரும் சக்திகளாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலம்.
சுவாமிஜி பல வெளிநாடுகளைக் காணும் வாய்ப்பு பெற்றவர். சமுதாயத்தைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் அக்கறையும் ஒருங்கே கொண்டிருந்தார். குறிப்பாக நலிந்தவர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும் அவர் மனம் உருகியது. ஒரு சுனாமி என்பது ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு போல் 1000 குண்டுகளுக்குச் சமம் என்கிறார்கள். விவேகானந்தரோ 1000 சுனாமி சக்திகளுக்கு இணையானவர். ஆனால் இந்த சுனாமி சக்தி அழிக்கும் சக்தியல்ல. உலக நாகரிகம் உதயமான காலம் முதல் இன்றுவரை மனித இனம் காணாத மாபெரும் ஆக்க சக்தியின் சொரூபம் அவர். அவர் இந்தியாவின் நிலை பற்றி ஆழ்ந்த கவலையும் கவனமும் கொண்டிருந்தார். மகத்தான பாரம்பரியமும் சீரும் சிறப்பும் பெற்றிருந்த ஒரு தேசம், அதன் மக்களின் அறியாமையால் தன் பெருமைகளை எல்லாம் இழந்து நிற்பது அவருக்குப் பெரும் வேதனையை அளித்தது.

‘இந்தியாவில் படித்தவரிடையே அதிக பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாமரர்களின் அறியாமையை நீக்க வேண்டும். விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் ஒருங்கே எந்தச் சமுதாயத்தில் இருக்கிறதோ, அச்சமுதாயம் மட்டுமே மேலோங்கி நிற்கும்’ என சுவாமிஜி கூறுகிறார்.
சுவாமிஜி எதிலும் நல்லதையே அன்றி தீமையைக் காணாதவர். ‘அமர பாரதத்தின் மேற்பரப்பில் சற்றே தூசு படிந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அத்தூசினை நீக்க வேண்டியது மட்டுமே. பாரதத்தின் அமரத்துவம் மாறவில்லை’. இது சுவாமிஜி அடிக்கடி கூறும் கருத்து.

இந்தியா மீதான அவரது அளவற்ற அன்பு, நம்பிக்கை எப்போதும் பூரணமானது. விவேக தேவதை உலகின் வேறெந்தப் பகுதிக்கும் செல்வதற்கு முன் இந்தியாவைத் தன் நிரந்தர இருப்பிடமாகக் கொண்டாள் என்று அவர் கூறி வந்ததற்கு, அன்பும், நம்பிக்கையுமே காரணமாகும். தமது மகத்தான புண்ணியத் தாய்நாட்டைக் கண்டு அவர் வியந்தார்.
மதம் என்பதற்கு நாம் கூறும் சாதாரணக் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட சிந்தனையை அவர் கொண்டிருந்தார்.
‘சமயம் என்பது அனுபூதி’ (Religion is Realisation) என்பது அவர் கருத்து. சமயம் என்ற பெயரில் உள்ள சிந்தாந்தங்களும் கொள்கைகளும் அவரை ஈர்க்கவில்லை. சமயமானது வழிபாட்டுத் தலங்களிலிருந்து வெளிவந்து மனிதனை நெறிப்படுத்தக்கூடிய சக்தியாக மாற வேண்டும் என அவர் விரும்பினார்.கடவுளை மையமாகக் கொள்வதைவிட மனிதனை மையமாகக் கொள்வதே சமயம் என்பது அவரது பரந்து விரிந்த கருந்து. ‘அறிவிலி, யாரை மனிதன் என அழைக்கிறானோ, அவனையே நான் இறைவன் என வழிபடுகிறேன்’ என்றார் அவர். இவ்வளவு துணிவுடன் ஒரு அரசியல் தலைவரோ, சமுதாயத் தலைவரோகூட கூறியதில்லை.

‘துறவும் தொண்டுமே இந்தியாவின் லட்சியங்கள்’ என்பது அவரது கருத்து. இந்தியாவில் ஏழ்மையும் அறியாமையும் இல்லாத நிலை பற்றி அவர் கனவு கண்டார். நாட்டின் மீது எல்லையற்ற அன்பு கொண்டிருந்தாலும் அவர் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையும் கொண்டு விளங்கினார். அதனால் தான் அவர், ‘உன் சமயத்தை விரும்புவதற்காக நீ வேறெந்த சமயத்தையும் வெறுக்க வேண்டியதில்லை. எல்லா மதங்களையும் உன்னால் நேசிக்க முடியும்; போற்றி மதிக்க முடியும்’ என்றார்.
‘எனது மதம் பிற மதங்களைச் சகித்துக் கொள்வதோடு, மற்ற மதங்களும் உண்மை என ஏற்றுக் கொள்ளவும் கற்பித்துள்ளது’ என்று சர்வ சமய மாநாட்டில் அவர் கூறினார். இதற்கு முன் இத்தகைய கருத்தை எவரும் கூறியதில்லை.

இந்தியாவின் பலவித கலாச்சாரங்களை அன்புடன் ஏற்றார் சுவாமிஜி, ‘ஆன்மிகமே நம் நாட்டின் எல்லா கலாச்சாரங்களையும் இணைக்கும் சக்தி’ என்றார். சுவாமி விவேகானந்தரின் மற்றொரு முற்போக்கான சிந்தனை அறிவியல் சார்ந்த மனப்பான்மை ஆகும். ‘சமயம் என்பதை வெறும் நம்பிக்கையாகப் பார்க்கக் கூடாது, தர்க்கத்திற்குத் தாக்குப் பிடிக்காத மதம் தேவையில்லை; அது இருக்கத் தகுதியற்றது’ என்பது அவர் கூறியது.
தன்னம்பிக்கை, துணிவு போன்றவற்றின் ஊற்றுக்கண் சுவாமிஜி. அவர் இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார்.

இந்திய வரலாற்றிலேயே சாமானிய குடிமகனைக் குறித்து தியானம் செய்த ஒரே சந்யாசி அவர்தான். கன்னியாகுமரிக்குச் சென்று அவர் தியானித்தது நாட்டின் பாமரக் குடிமகனின் மேம்பாட்டிற்காகத் தான்.சுவாமிஜி கடவுளிடம் இந்தியாவை மேம்படுத்தும்படியும், நாட்டிலிருந்து ஏழ்மை, எழுத்தறிவின்மை, பசி, பட்டினி போன்றவற்றை ஒழித்தருளவும் பிரார்த்தித்தார். இந்த இன்னல்கள் அனைத்திற்கும் நம் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கும் அறியாமையே உண்மையான காரணம் என்று அவர் கருதினார்.
பக்தி பற்றியும் அவரது கருத்து நவீனமானது. ‘பக்தி என்பது மனதை மேலானவற்றில் ஒருமுகப்படுத்தி ஆழ்மனதில் பயணிப்பது; இடையில் வரும் தடங்கல்களை ஒதுக்கி, அவற்றை வென்று கடவுளையே இலக்காகக் கொண்டு அவனை அடைவது’ என்கிறார்.

மூடநம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்குகளையும் அவர் அறவே வெறுத்தார். அவர் ஜாதிப்பிரிவினைகளைச் சற்றும் மதிக்காதவர். அடக்கி ஒடுக்கப்படுவதிலிருந்து பெண்களை விடுவிக்க, பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் இந்தியப் பெண்களைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா? சுவாமிஜி ஒருமுறை, ‘நான் உலகின் மகா காவியங்களை எல்லாம் படித்துள்ளேன். ஆனால் ராமாயண சீதையைப் போன்ற இன்னொரு சீதையை நான் எங்கும் காணவில்லை’ என்றார். பெண்கள் எந்த அளவுக்கு விடுதலை அடைந்தாலும், பெண்களின் லட்சியமாக விளங்குபவர் சீதையே என்றார் அவர்.
இந்தியாவை இந்தியர்களுக்குப் புதிதாக அறிமுகப்படுத்த விரும்பினார் சுவாமிஜி. இன்று சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆன பிறகும், எத்தனையோ மருத்துவர்கள், பொறியாளர்கள் தோன்றிவிட்ட நிலையிலும் நம் இளைஞர்களுக்கு நாட்டைப் பற்றிய உண்மை ஞானம் இல்லை. இது ஒரு வேதனை தரும் நிலை.

அடுத்து, கல்வி என்ற பெயரில் மூளையில் செய்திகளைத் திணிப்பது விவேகானந்தரைப் பொறுத்தளவில் கல்வியே அல்ல. ‘எது மனிதனை விடுவித்து, நிலையான சிறந்த பணியைச் செய்ய அறிவையும் திறமையையும் அளிக்குமோ, அதுவே உண்மையான கல்வி’ என்கிறார் அவர்,
எனவேதான் சுவாமிஜி ‘மனிதனை உருவாக்கும் கல்வியே தேவை’ என்று உறுதியாக இருந்தார். அவரைப் பொருத்த வரை கல்வியே மனிதனை உருவாக்குகிறது. ‘மனிதர்கள்; மனிதர்கள்; மனிதர்களே இன்று முக்கியம். மற்றவையெல்லாம் தன்னாலே நடக்கும்’ என்றார் அவர்.

சுவாமிஜி நம் இளைஞர்களிடம் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள இளைஞர்களுக்கு இந்திய இளைஞர்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று அவர் கருதினார். எனவே தான், ‘எனக்கு நூறு இளைஞர்களைத் தாருங்கள். நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார் சுவாமிஜி,
சுவாமிஜியைப் பொருத்த வரை, மதமும் கல்வியும் மனிதவள மேம்பாட்டிற்காகத் தான். இவ்வுண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவரிடமும் ஏராளமான ஆற்றல் புதைந்துள்ளது என்று அவர் நம்பினார். இளைஞர்கள் உணர்ந்து அதை வெளிக் கொணர, கல்வியும் மதமுமே சாதனங்களாகும்.
கல்வியைப் பற்றி சுவாமிஜியின் கருத்து இதுவே:
‘உங்களது உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளுங்கள்; ஒவ்வொருவருக்கும் அதைப் புரிய வையுங்கள். உறங்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்று காணுங்கள், உறங்கும் ஆன்மா தன்னுணர்வுடன் செயல்படும் நிலைக்கு உயரும்போது சக்தி வரும்; புகழ் வரும், நல்ல குணம் வரும், சிறந்தவை அனைத்தும் வரும்’.
கல்வியையும் சமயத்தையும் பற்றி இவ்வளவு அழகாக எவரும் கூறியதில்லை. சுவாமிஜியின் இந்த வாக்குகளை ஒவ்வொரு பள்ளியிலும் எழுதிவைக்க வேண்டும்,

பண்டித நேரு சுவாமிஜியை ‘சூறாவளித் துறவி’ என்று வர்ணித்தார். தன் மோட்சத்தை மட்டும் தேடும் சாதாரண சந்யாசி அல்ல அவர். அவர் ஒரு பெரும் புயற்காற்று, ஒருமுறை அமெரிக்காவில் சுவாமிஜியிடம் ஒருவர், ‘உங்கள் நாட்டில் மட்டும் எப்படி ஒவ்வொருவரும் மதத்தில் ஆழ்ந்து, அமைதியாக உள்ளார்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு சுவாமிஜி, ‘அது தான் எனக்கும் கவலை. எங்கள் மக்கள் அவ்வாறு இருக்கக் கூடாது. அவர்கள் அநீதிக்கு எதிராகப் பொங்கி எழ வேண்டும். வெளியிலிருந்து வந்த எவரோ போடும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து அவர்கள் நடக்கக் கூடாது. நாடு விழித்தெழுந்து அநீதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்பதே என் விருப்பம்’ என்றார்.

சுவாமிஜி ஒரு பெரும் உந்துசக்தி ஆவார். மனம் சற்றே தளர்ச்சியுறும்போது சுவாமிஜியின் நூல்களிலிருந்து ஒரு பக்கம், ஒரு பத்தி மட்டும் படித்தாலே போதும். புது ஊக்கம் பெறுவீர்கள்.
‘நீங்கள் அழியாதப் பேரானந்தத்தின் சொரூபங்கள்; படைப்புகளிலே நீங்கள் பெருமையை உடையவர்கள்; உங்கள் விதியை நிர்ணயிப்பவர்கள் நீங்களே! நீங்கள் எதுவாக விரும்பினாலும் உங்களால் முடியும்; உங்களைத் தடுப்பவர் எவரும் இல்லை!’
இவ்வாறு சுவாமிஜியைத் தவிர, வேறு யார் நம்மை ஊக்கப்படுத்துவார்கள்?
நவீன அறிவியலை சுவாமிஜி வரவேற்றார். அதன் நன்மை, தீமைகளையும் அவர் அறிந்திருந்தார். நவீன அறிவியலே இந்தியாவை முன்னேற்றும் என்று திடமாக எண்ணிய அவரே ‘அறிவியலின் பின் பைத்தியமாக அலையாதீர்’ என்று எச்சரிக்கையும் செய்தார்.
அவரது வார்த்தைகளைக் கேட்டு நடக்கத் தவறியதே நம் இன்றைய துன்பங்களுக்குக் காரணம்.
சுவாமிஜி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காந்திஜி முதல் கடைநிலை சத்தியாகிரகி வரையில் அனைவரும் சுவாமிஜியின் பேருரைகளைக் கேட்டும் படித்துமே தேசிய உணர்வையும், எழுச்சியும் பெற்றனர் என்பது சரித்திர உண்மை.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பே ‘இன்றிலிருந்து மற்ற எல்லாக் கடவுளையும் வழிபடுவதை நிறுத்தி, இந்தியத் தாயை மட்டுமே வழிபடுங்கள். அடுத்த 50 வருடங்களில் இந்தியா சுதந்திரம் பெறும்’ என்றார் சுவாமிஜி.
அது அப்படியே நடந்தது.
இப்படிப்பட்ட உன்னதத் துறவி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும்போது நாம் எதற்கும் மனம் கலங்கத் தேவையில்லை. நம் நாடு வழி தவறிப்போக முடியாது.
இந்தியாவில் சுனாமி ஏற்பட்டபோது நமது பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘உதவி ஏதாவது வேண்டுமா?’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கேட்டார்.அதற்கு நமது பிரதமர், ‘எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம். வேறெந்த நாட்டுக்காவது தேவைப்பட்டால் சொல்லுங்கள். நாங்கள் உதவி புரிவோம்’ என்றார்.
நம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ’2020-ல் இந்தியா வல்லரசாகும்’ என்று பறைசாற்றுகிறார். இவ்வாறு விவேகானந்தரின் தீர்க்க தரிசனம் மெய்யாகிவருகிறது,
‘ பழம்பெருமையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கொண்டு, இன்றைய சவால்களைச் சந்திப்பதற்குத் தேவையான துணிவையும் தன்னம்பிக்கையையும் தெளிவையும் பெற்று இந்தியா முன்னேற வேண்டும்’ என்று சுவாமிஜி கூறியுள்ளார்.
இது சுவாமி விவேகானந்தர் நமக்கு அளித்துச் சென்ற தீர்மானமான ஓர் அறிவுரை: ‘ஆன்மிகத்தால் மட்டுமே இந்தியா வல்லரசாக முடியும்’.
தகவல் தொடர்புத் துறையின் சிறந்த காலகட்டத்தில் நாம் உள்ளோம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரியதோர் அறிவுப் புரட்சி இங்கு தோன்றியது. அதன் வெளிப்பாடே வேதாந்தம். இன்றைய புரட்சியின் விளைவுகளை மேம்படுத்த நாம் அன்றைய வேதாந்தப் புரட்சியைக் கைக்கொள்ள வேண்டும்.
ஒரு சரியான வழிகாட்டி தான் இன்றைய இளைஞர்களின் அவசர, அவசியத் தேவை.
அதற்கு சுவாமிஜியைத் தவிர வேறு யார் உளர்? அவரை ஒவ்வோர் இளைஞனுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கான பாடத்திட்டத்தில் ஒவ்வோர் இளைஞனும் விவேகானந்தருக்கு அறிமுகமாகும் நாள் வரவேண்டும் என்பதே என் ஒரே கனவு.
அத்தகைய நாளில் தான் இந்தியாவின் உண்மையான கலாச்சார மறுமலர்ச்சி ஏற்படும். வீரியம் பொருந்திய அவரது வாக்கு ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையானது.

ஒருமுறை நான் கிரிக்கெட் வீரர் கபில்தேவைச் சந்தித்தேன். அவர் ‘இன்று நான் நானாக இருப்பதற்குக் காரணம் சுவாமி விவேகானந்தர் தான்’ என்றார்.
நமது நாட்டுப் பெரும் அறிவியல் அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் அனைவருமே, சுவாமிஜியின் அரிய செய்திகளை அறிந்திருந்ததால் தான் சிறப்படைந்துள்ளார்கள்.
இன்று இளைஞர்கள் விரும்பிப் படிப்பது சுவாமிஜியின் செய்தியைத் தான். காரணம், அவரே இன்றைய இளைஞனின் மனநிலைக்கு ஏற்பப் பேசியவர்.நாம் புரிந்து கொண்டுள்ள மதம் இன்றைய இளைஞனிடம் இனி எடுபடாது. நவீனமான, அறிவியல் பார்வை கொண்ட ஒரு சமயத்தையே அவன் தேடுகிறான். அதை உருவாக்கி அளித்தவர் சுவாமிஜியே.
 
Via Fb விஜய பாரதம்
 
கடவுளை பற்றிய கருத்து ----- சுவாமி விவேகானந்தர்....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips
கடவுள் ஒருவர் இருக்கிறார் , அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே , எங்கும் நிறைத்திருக்கிறார் பற்றி உங்கள் கருத்து என்ன ?சற்று கண்களை மூடிக்கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்கு கூறுங்கள். உங்கள் சிந்தனையில் விரிவதுதான் என்ன ? ஏற்கனவே நீங்கள் கண்ட பரந்த கடல் அல்லது விரிந்த நீல வானம் , அல்லது அகன்ற புல்வெளி அல்லது இவைபோன்ற வேறு எதோ ஒன்று , அப்படிதானே ? இதுதான் எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நீங்கள் சொல்லும் பொருளானால் அது பயனற்றது, நீங்கள் அதன் பொருளை உணரவே இல்லை. இறைவனின் மற்ற குணங்களும் அப்படிதான். அவர் எல்லாம் வல்லவர் , எல்லாம் அறிந்தவர் என்று கூறும் பொது நாம் என்ன புரிந்துகொள்கிறோம் ? எதுவும் இல்லை . மதம் என்பது அநுபூதி. இறைவனை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் அனுபூதியில் அறியும்போதுதான் நீங்கள் இறைவனை வழிபடுகிரிகள் என்று கூறுவேன். அதை அடையாதவரை , நீங்கள் அந்தச் சொற்களிலுள்ள எழுத்துக்களை எழுத்துகுட்டி படிக்க தெரிந்தவர்கள் அவ்வளதான்.

இந்த அனுபூதி நிலையை அடைய , நாம் கண்ணுக்கு புலனாகின்றவை வாயிலாக செல்ல வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கை கற்கும் போது முதலில் புறபொருட்களின் மூலம் தான் ஆரம்பிக்கிறது , பிறகு தான் மனத்தாலேயே செய்ய கற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தையிடம் 5 * 2 = 10 என்று கூறினால் அதருக்கு ஏதும் புரியாது. ஆனால் பத்து பொருட்களை கொடுத்து , அது எப்படி என்பதை காட்டி விளக்கினால் புரிந்து கொள்ளும். இது நிதானமான நீண்ட பாதை இங்கு நாம் எல்லாரும் குழந்தைகள். நாம் வயது முதிந்தவர்கள் இருக்கலாம் , உலகிலுள்ள எல்லாம் நூல்களை படித்திருக்கலாம்; ஆனால் ஆன்மிக துறையில் நாம் எல்லாரும் குழந்தைகளே. கொள்கைகள் , தத்துவங்கள் , அற கோட்பாடுகள் எல்லாவற்றையும் எவ்வளவுதான் உங்கள் மூளைக்குள் திணித்தாலும் அவற்றால் பெரிதாக பலன் ஒன்றும் இல்லை. நீங்கள் யார் , அனுபூதியில் என்ன உணர்திருகிரிகள் ? இவைதான் பயனுள்ளவை , சாரமனவை. ஆனால் நாம் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிதிருக்கிறோம் , அனுபூதியில் எதையும் உணரவில்லை .

---
சுவாமி விவேகானந்தர்.....

நரேனின் பிரார்த்தனை ...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:22 PM | Best Blogger Tips
நரேனின் பிரார்த்தனை ...

http://vivekanandadasan.wordpress.com/

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

 ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. 'நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். 'நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்' என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் 'அன்னை என்ன சொன்னாள்?' என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

'ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்' என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்' என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் 'நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது' என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் ......

இன்று சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம்.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips
சுவாமி விவேகானந்தர்  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

இளமைப்பருவம்
=============

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

ஆன்மீகத்தில் ஆர்வமும் எழுச்சியும்
===========================

கருவிலேயே திருவுறுதல் என்பார்களே அந்த மாதிரி ஆன்மீக உணர்வு நரேந்திரருடைய இரத்தத்திலேயே கலந்திருந்தது போலும். நினைத்த நேரத்தில் மனத்தை ஒருமுகப்படத்தும் பேராற்றல் இளமையிலேயே அவரிடம் அமைந்திருந்தது. எவ்வளவு திரளான கூட்டமாக இருந்தாலும் திடீரென அவர் தன்னை மறந்த லயம் தன்னில் ஆழ்ந்து விடுவார். பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் செவியில் விழுவதில்லை. அவரைப் பிடித்து உலுக்கினால்கூட அசைவற்று அமர்ந்திருப்பார். தியானம் செய்வது அவருடைய உணர்வோடு ஒட்டிய ஒன்றாக இருந்தது. யார் உந்துதலும் இல்லாமல் அதிகாலையிலேயே விழித்தேழந்து நீராடி, உதயசூரியனை நோக்கி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். சில சமயம் தியானம் மணிக்கணக்கில கூட நீடிப்பதுண்டு.

முதலில் இது ஒரு குழந்தை விளையாட்டு என எண்ணிய பெற்றோர் நரேந்திரன் நினைத்த நேரமெல்லாம் தியானத்தில் அமர்ந்துவிடுவது கண்டு குழப்பமும், திகைப்பும் அடைந்தனர். நாளடைவில் நிலைமை சரியாகி விடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

வீட்டிற்கு அருகாமையில் பழங்காலக் கோயில் ஒன்று இருந்தது. கவனிப்பின்றி கிடந்த அந்த கோயில் சிறுவர்கள் விளையாடும் இடமாக ஆகியிருந்தது. நரேந்திரரும் அவரது நண்பர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விளையாடுவது வழக்கம்.

சிறுவர் நரேந்திரர் ஒரு நாள் விளையாடும் நோக்கத்தில் கோயில் பக்கம் வந்தார். நண்பர்கள் கூட்டம் இன்னும் வந்த சேரவில்லை. நரேந்திரர் கோயிலுக்குள் நுழைந்து கதவை மூடித் தாளிட்டுக் கொண்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் கூட்டம் வந்து சேர்ந்தது. நண்பர்கள் நரேந்திரரைத் தேடினர். அவரைக் காண முடியவில்லை. நரேந்திரரின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் விசாரித்தனர். நரேந்திரர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார் என்று எண்ணியிருந்த பெற்றோர் நண்பர்களே வந்து மகனை விசாரித்தது கவலையை அளித்தது. நண்பர்களுடன் சேர்ந்து நரேந்திரரைக் தேடினார்கள். நரேந்திரர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுவர்களில் ஒருவன் ஒடிவந்து கோயிலின் கதவு உட்புறம் தாளிடப்பட்டிருக்கும் செய்தியைச் சொன்னான். எல்லோரும் கோயிலை முற்றுகையிட்டுக் கதவைத் தட்டினர் கதவு திறக்கப்படவில்லை. கோயிலுக்குள்ளிருந்து பதிலும் கிடைக்கவில்லை.

கோயிலின் கதவை உடைத்து எல்லோரும் உள்ளே சென்றனர். அங்கே நரேந்திரர் ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். தியானத்தைக் கலைத்து அவரை எழுப்புவதற்கு பெரும்பாடு படவேண்டியிருந்தது.

இனம்புரியாத பரவசநிலைக்கு நரேந்திரர் அடிக்கடி ஆளாகிவிடுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய தெய்வீக பரவச நிலைக்கு உள்ளாவதை பல தடவை அவரே உணர்ந்திருந்தார்.

கடவுளுடன் பேசுவது முடியுமா ?
========================

ஓரு நாள் மின்னல் வெட்டியது போல அவன் மனத்தில் திடீரென ஐய வினாவென்று எழுந்தது. சூறாவளி போல சுழன்றடித்தது. கடவுள் இருக்கிறார் என்பது உணமையானால் கடவுளைச் சந்தித்து உரையாடியவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பது உண்மையானால் கடவுளை நேரடியாகத் தரிசனம் செய்த மகான்கள் யாராவது இருக்கிறார்களா ? அவருடன் நேருக்கு நேர் உரையாடியவர் உண்டா ? அல்லது கடவுளைச் சந்தித்து உரையாடவது சாத்தியமாகக் கூடியதா ?

இந்த வினாக்களுக்கு விடை காண சுவாமி விவேகானந்தர் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள், மகரிஷிகள் போன்று மக்களின் மத்திலே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆன்மீகப் பெரியோர்  அணுகித் தமது சிந்தைக்குள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த ஐய வினாக்களை அவர்களிடம் எழுப்பி ஐயந்தீர்க்குமாறு கேட்டுக் கொண்டார்,  ஆனால் விவேகானந்தரின் ஐய வினாவுக்கு யாராலும் விடையளிக்க முடியவில்லை..

அந்தச் சமயத்தில் பகவான் இராமகிருஷ்ணரின் ஆன்மீகச் கருத்துக்களும், சாதனைகளும் வங்காள மெங்கும் பரவிக்கொண்டிருந்தன. திரளான மக்கள் அவருடைய தரிசனத்துக்காக அன்றாடம் சென்று வந்தனர்.

பகவான் இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் தமது ஐயத்திற்கு ஒரு வேளை விடை கிடைக்கக் கூடும் என்று நரேந்திரருக்குத் தோன்றியது. பகவான் இராமகிருஷ்ணருடன் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு நரேந்திரருக்கு வலிய வந்து அமைந்தது.

 சுரேந்திர நாத மித்ரா என்ற ஒரு பக்தரின் இல்லத்தில் ஆன்மீக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பகவான் இராமகிருஷ்ணர் பங்கு ஆற்றுகிறார் என்பது சிறப்பான அம்சமாக இருந்தது. விழாவில் கலந்து கொள்ள வருமாறு நரேந்திரருக்கும் அழைப்பு வந்திருந்தது.

நரேந்திரர் இனிமையாகப் பாடக் கூடியவர். அதிலும் ஆன்மீகம் தொடர்புடைய பாடல்களை அற்புதமாகப் பாடுவார். அதனால் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடும் பொறுப்பு நரேந்திரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மெய்யுருக இறைவணக்கப் பாடல்களை இனிமையாக பாடிய நரேந்திரரை பகவான் இராமகிருஷ்ணர் கூர்ந்து கவனித்தார். அவர் பாடி முடித்ததும் ஸ்ரீ இராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தம்மருகே அழைத்து அமரச் செய்து அவருடைய விழிகளைக் கூர்ந்து நோக்கினார். அவருடைய சிரசை வருடிக் கொடுத்தவாறு, குழந்தாய் நீ இறைவனுக்கு மிகவும் அருகாமையிலிருக்கிறாய் ஒரு தடவை தட்சிணேசுவரம் வந்து செல்லேன் என அன்பழைப்பு விடுத்தார்.

நரேந்திரர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக 1881-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அது நிகழந்தது. சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை தம்முடன் அழைத்துக் கொண்டு தட்சிணேசுவரம் சென்றிருந்தார். பகவான் இராமகிருஷ்ணர் தரையில் ஒரு பாயில் அமர்ந்து கண்களை மூடியவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை ஸ்ரீஇராமகிருஷ்ணரின் முன்னிலையில் விட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டார்.

கண்விழித்துப் பார்த்த ஸ்ரீ இராமகிருஷ்ணர் வியப்பு தோன்ற பார்த்தார். தம்மருகே அமருமாறு கண்ஜாடையால் பணித்தார். நரேந்திரர் அமர்ந்ததும் மெல்லிய குரலில் ஏதாவது பாடு என்றார். நரேந்திரர் சில பக்திப் பாடல்களைப் பாடினார். அவர் பாடுவதை மெய்மறந்து கண்களை மூடியவாறு ரசித்துக் கொண்டிருந்த பரமஹம்சர் திடீரென எழுந்து, என் பின்னால் வா என்று கூறிவட்டு நடந்தார் பரமஹம்சர். வராந்தாவில் உள்ள ஒர் அறைக்குள் பரமஹம்சர் பிரேவசித்தார். நரேந்திரர் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றார்.

பகவான் இராமகிருஷ்ணர் அறைக்கதவை மூடிக் தாளிட்டார்.

அறைக்குள் என்ன நடந்தது ?

நரேந்திரர் கூறுவதை அவருடைய வாய்மொழியாகவே கேட்போமா.....!

குருதேவர் என் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்து வந்தார். பிறகு கதவை மூடிவிட்டார். அவர் எனக்கு ஏதோ உபதேசம் செய்யப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னதும், செய்ததும் கற்பனைக்கு எட்டாதது. நான் சற்றும் எதிர்பாரவகையில் அவர் என் கைகளை பிடித்துக் கொண்டு அளவற்ற மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே என்னை நன்றாக அறிந்தவர் போல பேசினார். இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே, இது நியாயமா ? நான் உனக்காக் காத்திருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா ? உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியே தேம்பித் தேம்பி அழுதபடி அவர் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவது போல வணங்கியபடி என்னைப் பாரத்து, பிரபோ, நாராயணனின் அவதாரமாகிய நர முனிவரே தாங்கள் என்பதை நான் அறிவேன். மனித குலத்தின் துயர் நீக்கவே இப்பொழுது அவதாரமெடுத்து உள்ளீர் என்பதையும் நான் அறிவேன் என்றார்.

அவருடைய பேச்சுக்களையும், நடத்தையையும் கண்டு ஆச்சரியம் அடைந்த நான் அவரைப் பைத்தியம் என்று தான் எண்ணினேன். அப்படியில்லாவிடில் விசுவநாத தத்தரின் மகனாகிய என்னைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுவாரா என்றும் எண்ணினேன். இருப்பினும் நான் பேசாமல் மௌனமாக இருந்தேன். அந்த அதிசயமான பைத்தியக்கார மனிதர் விருப்பம் போல பேசிக் கொண்டேயிருந்தார். அடுத்த நிமிடம் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு வேறு அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்து வெண்ணெய், கற்கண்டு, இனிப்பு முதலியன கொண்டு வந்த தன் கையால் என் வாயில் ஊட்டத் தொடங்கினார். பிறகு என் கைகளை பிடித்துக் கொண்டு, கூடிய விரைவில் நீ மட்டும் தனியாக என்னிடம் வருவதாக சத்தியம் செய் என்று கூறினார். அவருடைய உண்மை வேண்டுகோளை மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறினேன். பின்பு இருவரும் அறைக்கு திரும்பினோம். நான் அவரை விட்டுச் சற்று விலகி என் நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.

அவர் மற்றவர்களிடம் பேசும் பேச்சையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கலானேன். பைத்தியத்தின் சிறிய சாயல் கூட அவரிடம் தென்படவில்லை. அவருடைய ஆன்மீக பேச்சிலிருந்தும் ஆனந்தப் பரவச நிலையிலிருந்தும் அவர் உண்மையான துறவி என்பதையும், இறைவனுக்காக  உலக இன்பங்கள் அனைத்தையும் துறந்தவர் என்பதையும் அவருடைய பேச்சுக்கும், நடத்தைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதையும் புரிந்து கொண்டான். கடவுளைக் காண முடியும், கடவுளுடன் பேசவும் முடியும் நான் உன்னைப் பார்த்து உன்னோடு பேசுவது போல அவரைப் பார்க்கவும், அவரோடு பேசவும் முடியும், ஆனால் யார் கடவுளைப் பாரக்கவும், பேசவும் விரும்பிகிறார்கள் ? மனிதர்கள் தங்கள் மனைவி அல்லது குழந்தைகள் இறந்து விட்டால் குடம் குடமாகக் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பணத்திற்காகவும், மனைவி, மக்களுக்காகவும் அழுது புலம்புகின்றனர். ஆனால் யாராவது இறையனுபூதி பெற முடியவில்லையே என்று கண்ணீர் சிந்துகிறார்களா ? ஒருவன் இறைவனைக் காண வேண்டும் என்று உண்மையாக ஏங்கி இறைவனை அழைத்தால் அவர் தன்னை அவருக்குக் காட்டிக் கொள்கிறார் என ஸ்ரீ இராமகிருஷ்ணர் கூறினார்.

அவருடைய இந்தப் பேச்சுகளை கேட்டதும் என்னால் அவரை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அது சாதாரணமான சமயச் சொற்பொழிவாளரின் கற்பனையாகவோ அன்றிக் கவிதையாகவோ அல்லது சொல் அலங்காரமாகவோ இருக்கவில்லை. அவருடைய சொற்கள் அவருடைய ஆழத்தில் இருந்து பாய்ந்து வந்தன. இறைவனை அடைவதற்காக அனைத்தையும் துறந்து இறைவனை முழு மனத்துடன் அழைத்தால் அந்த இறையனுபவம் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

அவருடைய இந்தப் பேச்சுடன் என்னிடம் சிறது நேரத்துக்கு முன் நடந்து கொண்ட நடத்தையை இணைத்துப் பார்க்கும் பொழுது அபக் ரோம்பி போன்ற ஆங்கில தத்துவவாதிகள் கூறியுள்ள ஒன்றையே நினைத்துக் கொண்டிருக்கம் பித்தர்களின் ஞாபகந்தான் வந்தது. ஸ்ரீ இராமகிருஷ்ணர் இவ்வகையைச் சார்ந்தவர் என்ற திடமான முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வந்தாலும் அவருடைய அதிசயிக்கத் தக்க துறவு மனப்பான்மையை என்னால் மறக்க முடியவில்லை, அவர் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அபூர்வமானவர்களே அவரைப் போல இறைவனுக்காக உலகத்தை துறக்க முடியும், அவர் பைத்தியந்தான். ஆனால் எவ்வளவு தூய்மை வாய்ந்தவர் எப்படிப்பட்ட துறவு. அதற்காக மட்டுமே மனித சமுதாயம் முழுவதும் அவரை மதித்துப் போற்றி வணங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் இவ்வாறு நினைத்துக் கொண்டே அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கல்கத்தா திரும்பினேன்.

துறவியான பெருந்தகை
==================

நரேந்திரர் அது நாள் வரை பகவான் இராமகிருஷ்ணரின் சீடர் என்ற அளவுக்குத்தான் தம்மைத் தயார் செய்து வைத்திருந்தார். இராமகிருஷ்ணரை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டிருந்தாரா என்பது கூட ஐயப்பாடே. இராமகிருஷ்ணரின் சில நோக்கங்களில் நரேந்திரருக்கு பிடிப்பு ஏற்படவில்லை. பகவான் இராமகிருஷ்ணர் தமது வழிபாட்டு முறைகளில் விக்கிரக ஆராதனைக்கும் இடமளித்திருந்தார். விக்கிரகங்களைக் கடவுள் என நம்ப நரேந்திரரின் பகுத்தறிவு மனப்பான்மை இடந்தரவில்லை. விக்கிரகங்கள் எல்லாம் கடவுள்களே என்பது இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தும் அல்ல. இறைவனைப் பற்றிய எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவே விக்கிரகம் திகழ்கிறது என்று பரமஹம்சர் கூறவதை நரேந்திரரால் சற்றும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. கடவுளை யாரும் கண்டுணராதபோது - கடவுளின் தோற்றம் எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் ஏதோ ஒரு உருவத்தை கட்டிக் காண்பித்து, இதைக் கடவுளாக நினைத்து வழிபடு என்று எதற்காக் கூறவேண்டும் என்பது நரேந்திரரின் வாதம்.

வெகு விரைவிலேயே புரட்சிகரமான மனமாற்றம் பெற்று பகவான் இராமகிருஷ்ணரின் எண்ணங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை நரேந்திரருக்கு ஏற்பட்டது.

நரேந்திரரின் வாழக்கையில் 1884-ஆம் ஆண்டில் பலவிதமான சோதனைகள் ஏற்பட்டன. அவருடைய தந்தையார் விசுவநாத தத்தர் திடீரென மரணமடைந்தார். அப்போது தான் நரேந்திரர் பி.ஏ.தேர்வு எழுதியிருந்தார்.

விசுவநாத தத்தர் நன்றாகச் சம்பாதித்தார். ஆனால் அவருக்கே உரித்தான கருணை உள்ளம் - தாராள மனப்பான்மை காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கினார். அதனால் அவர் மறைவெய்திய போது பொருளாதரார நிலையில் குடும்பம் மிகத் தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது. கடன் சுமை அதிகமாக இருந்தது. வீட்டுக்குத் தலைமகனான நரேந்திரருக்கு தாங்க இயலாத குடும்பச் சுமையைத் தாங்கியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. ஐந்து அல்லது ஆறு பேர் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி அலைந்தார். ஆனால் வேலை கிடைப்பதாக இல்லை.

நரேந்திரரின் குடும்பம் வளமாக இருந்த காலத்தில் அவருடன் கூட்டுறவு வைத்திருந்த நண்பர்கள் பலர் ஒதுங்கி சென்றுவிட்டனர். குடும்பத்தில் ஏற்பட்ட துயரநிகழச்சிகள் காரணமாக மனங் குழம்பிக் கிடந்த நரேந்திரர் குருதேவரைச் சந்திப்பதையே தவிர்த்திருந்தார்.

ஸ்ரீ இராமகிருஷ்ணரைத் தரிசிக்க செல்லும் சிலர் நரேந்திரர் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி குருதேவரிடம் கூறினார். அந்த வதந்திகளுக்கு குருதேவர் எந்த முக்கியத்துவமும் தரவில்லை.

நரேந்திரன் எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். அவன் சேற்றில் இறங்கமாட்டன். சூழ்நிலை காரணமாக சேறு அவன் மீது தெறித்திருந்தால் அது அவன் குற்றமாக இருக்காது. அந்தக் குறையை எளிதாகக் கழுவித் துடைத்தெறிந்துவிட முடியும் என்று பதிலளித்து புகார் கூறுவோர் வாயை அடைத்து விடுவார்.

நரேந்திரர் உலகப்பற்றை அறுத்துவிட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுவது என்ற தீர்மானத்துக்கு வந்தார்.

குருதேவரைச் சந்தித்து தம்முடைய துறவு நோக்கத்தைச் சொன்னபோது குருதேவர் கொஞ்சங்கூட ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை.

அம்பிகையின் பணியை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொள் உன்னால் சாமானியர்களைப் போல லௌகீக வாழ்க்கை வாழ முடியாது என்று குருதேவர் நரேந்திரின் கைகளை அன்போடு பற்றியவாறு சொன்னார் பிறகு நான் சொல்வதை மனத்தில் வைத்துக் கொள் நான் உயிருடன் இருக்கம் வரை உன் குடும்பத்துடனேயே இரு என்றார்.

நரேந்திரரின் குடும்பப் பிச்சினையில் தொடர்ந்து சிக்கல் நிடித்துக் கொண்டோயிருந்தது. நிரந்தரமான வருமானத்துக்கு எந்த வழி வகைகளும் ஏற்படவில்லை. குடும்பக் கஷ்டத்தைச் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதும் குருதேவரின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

கஷ்டங்கள் அகலவேண்டும் என்று தம்மை நாடி வருபவர்களுக்காக குருதேவர் தாம் வழிபடும் தெய்வம்மான அகிலாண்டநாயகியான காளிமாதவிடம் பிரார்த்தனை செய்வது வழக்கம். குருதேவரின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அகிலாண்டேஸ்வரி அருள்புரிந்து மக்களின் குறைகளை களைவதாகவும் மக்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதை நரேந்திரர் அறிவார். தமது கஷ்டங்கள் தீர தமக்காக அகிலாண்ட நாயகியிடம் பிரார்த்தனை செய்யுமாறு நரேந்திரர் குருதேவரை வேண்டினார்.

அவருடைய கோரிக்கையை குருதேவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சாமானியா மக்களுக்காக அகிலாண்டநாயகியிடம் நான் பிரார்த்தனை செய்து தேவியின் அருளைப் பெற்றுத் தருவது வேறு விஷயம் நீ தெய்வ அருளைப் பெற்ற ஒரு துறவி நீ நேரடியாக அகிலாண்டநாயகியிடம் பிரார்த்தனை செய்தால் தான் தேவியின் அருள் தடையின்றி உனக்கு கிடைக்கும் என்று குருதேவர் ஒதுங்கி கொண்டார்.

வழக்கமான வைராக்கியம் நரேந்திரரின் மனதைக் குழப்பியது விக்கிர ஆராதனை செய்தாக வேண்டிய கட்டாயநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

நரேந்திரரின் தயக்கத்துக்கான காரணம் குருதேவருக்கு தெளிவாகவே விளங்கியது சற்று கண்டிபான குரலில் அவர் நரேந்திரரை நோக்கி இன்று செவ்வாய்கிழமை அன்னைக்கு விருப்பமான நாள் இன்று இரவு காளி மாதாவின் கோயிலுக்குச் சென்று அன்னையின் முன் வீழ்ந்து பணிந்து உனக்கு விருப்பமானவற்றைக் கேள் நீ கேட்கும் வரத்தை அவள் நிச்சயம் தருவாள் என்னுடைய அன்பு தாய் பிரம்ம சக்தி மேருணர்வே வடிவெடுத்தவள். அவளால் முடியாத காரியம் ஒன்று உண்டா ? என்று கூறினார்.

இரவு ஒன்பது மணிக்கு குருதேவரின் கட்டளையைத் தட்டமுடியாமல் காளிகோயிலை நோக்கி நடந்தார் மனம் தடுமாறியது கால்கள் தயக்கம் காட்டின.

இனி நரேந்திரர் கூறுவதைக் காது கொடுத்து கேட்போமா .. .. ..

கோயிலுக்குள் நுழைந்தேன் அங்கே அன்னை காளி உண்மையின் சின்னமாக அழகும், அன்பும் வற்றாது பெருக்கெடுத்தோடும் தெய்வீகத்துடன் இருப்பதைக் கண்டேன் பொங்கிப் பாய்ந்த பக்தியில் சிக்கி பேரானந்தத்தை அனுபவித்தேன் அன்னையின் திருவடிவில் மறுபடியும் மறுபடியும் வணங்கி அவளிடம் தாயே எனக்கு விவேகத்தைக் கொடு, ஞானத்தையும், வைராக்கியத்தையும் கொடு, உன்னை எப்பொழுதும் இடைவிடாது பார்த்துக் கொண்டே இருக்கும் வரத்தைக் கொடு என்று பிரார்த்தனை செய்தேன். விவரிக்க இயலாத அமைதி என் மனத்தில் நிலைத்தது .. .. ..

என் நோக்கத்துக்காக காளி தேவியைப் பிரார்த்தனை செய்ய நரேந்திர் சென்றாரோ, அதை அடியோடு மறந்துவிட்டார், தமது சொந்தக் கஷ்டங்கள் அகன்று வாழ்வில் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்யவில்லை.

திரும்பி வந்த நரேந்திரரை நோக்கிக் குருதேவர், உன் கஷ்டங்கள் நீங்க தேவியிடம் வரம் கேட்டாயா ? என வினவினார்.

நரேந்திரர் நடந்ததைச் சொன்னார்.

மறுபடியும் காளிமாதவைச் சந்தித்து, உன் சொந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் அகல வேண்டும் எனப் பிரார்த்தனை செய் எனக் கூறி குருதேவர் மீண்டும் காளி கோயிலுக்கே அனுப்பினார். நரேந்திரரோ இந்தத் தடவையும் தன் உலகாயத வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாமலே திரும்பிவிட்டார். மூன்றாவது முறையும் குருதேவர் நரேந்திரரை காளி கோயிலுக்கு அனுப்பினார். பழைய கதைதான்.

நரேந்திரர் உலகில் சுகபோக வாழ்கையில் ஆழ்ந்து வீண் காலம் கழிப்பதற்காகப் பிறக்கவில்லை என்ற உண்மையை அவர் மனத்தில் படிய வைப்பதுதான் குருதேவரின் நோக்கம். குருதேவர் வெற்றி பெற்று விட்டார்.

நரேந்திரர் விவேகானந்தர் ஆனார்
=========================

1889-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள் இராமகிருஷ்ணர் மண்ணுலகை நீத்து அமரத்துவம் எய்தினார்.

குருதேவர் மறைவுக்குப் பிறகு அவரைச் சூழ்ந்திருந்த சீடர்களில் பெரும் பகுதியினர் சிதறிச் சென்றுவிட்டனர். குருதேவரின் புனித அஸ்தியை வைத்து வழிபாடு நடத்த ஒரு ஆலயம் போன்ற அமைப்பினை உருவாக்க நரேந்திரர் விரும்பினார். இதற்கென கங்கை நதிக்கரையில் ஒரு சிறிய இடத்தை வாங்கவும் திட்டமிட்டார். ஆனால் அவருடைய முயற்சிகளுக்குத் துணை நிற்க சீடர்களைத் தேட வேண்டியிருந்தது. நரேந்திரர் பெரிதும் ஏமாற்ற அடைந்தார். தற்காலிகமாக தம்முடைய முயற்சியை நிறுத்திவிட்டு பகவான் குருதேவரின் ஆன்மீகச் சிந்தனைகளை உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் மேலை நாடுகளுக்குப் பயணமானார்.

தம்முடைய அந்த இலட்சிய நோக்கத்தில் வெற்றி கொடி நாட்டிவிட்டுத் திரும்பிய நரேந்திரர் குருநாதருக்காக ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியினைத் தொடங்கினார்.

பாரா நகரில் இருந்த ஒரு பாழடைந்த வீடு அவரின் முயற்சியின் தொடக்க இடமாக அமைந்தது. குருநாதரின் சீடர்களில் பழைய ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருந்த சில இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்த்தார்.

அப்போது நரேந்திரர் மேற்கொண்ட அந்த முயற்சியின் தொடக்கந்தான் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக பாரதத்திலும் உலக நாடுகளிலும் செழித்துப் பரவியிருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மடமாகும்.

பகவான் இராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு காவி உடைகளை வழங்கி துறவிகளுக்கான தீட்சையை அளித்திருந்தார். நரேந்திரர் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு சாஸ்த்திரப்படி விரஜா ஹோமம் புரிந்து முறைப்படி சந்நியாச தீட்சை பெறச் செய்து துறவு வாழ்க்கையில் புதிய தகுதியை அளித்தார்.

நரேந்திரர் முழுமையான சந்தியாச வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு தமக்கு பெற்றோர் வைத்த பெயரைக் களைந்துவிட்டு சந்நியாச தர்மப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டியது அவசியம் என உணர்ந்தார்.

நரேந்திரர் விவிதி சானந்தரஞ் என்ற பெயரை ஏற்றுக் கொள்வது என்று முதலில் எண்ணினார். தம்மை எந்த வகையிலும் வெளிக் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் தம்மைப் பல்வேற பெயர்களால் அழைத்துக் கொண்டார். எனினும் அமெரிக்காவுக்குப் புறப்படுவது என்று தீர்மானித்த பிறகு விவேகானந்தர் என்ற பெயரைத் தமக்காக நிரந்தரமாகச் சூட்டிக் கொண்டார்.

அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்

==========================================

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும் செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில் எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு தேவையான பண  உதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.

சுவாமி விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

கன்னியாகுமரிலிருந்து சென்னை சென்ற சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத் திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம் திரட்டி அளித்தனர்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து 1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?

சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.

சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் புரிந்துக் கொண்டார்.

மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில் பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.

பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.

மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும் சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என சொல்லித்துத்தான் பேச்சைத் துவக்குவது வழக்கம்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.

சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக, சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத் தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் தமது சொற்பொழிவைத் தொடர்ந்தார்.
=============================================

உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தினார்.

அமெரிக்காவில் தமது பணிகளை முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம் பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.

பாம்பனிலிருந்து இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச் சொற்பொழிவுகளாற்றினார்.

சென்னை நகரத்தில் தான் சுவாமிஜிக்கு நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் அமரத்துவம் அடையும் வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ, தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.

தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம் அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால் மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீர்வு  காண அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே உதவி செய்ய முடியும்.

Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை