நரேனின் பிரார்த்தனை ...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:22 PM | Best Blogger Tips
நரேனின் பிரார்த்தனை ...

http://vivekanandadasan.wordpress.com/

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

 ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. 'நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். 'நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்' என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் 'அன்னை என்ன சொன்னாள்?' என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

'ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்' என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்' என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் 'நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது' என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் ......