‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும்
‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர்
சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக
வாழ்ந்து மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான்.
* கர்ணன் படத்தில் சிவாஜிக்கு முன்னால் எம்.ஜி.ஆரிடம்தான் நடிக்கக் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.
* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைக்கூடத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். ‘நினைத்ததை முடிப் பவன்’ படத்தி்ல சிகரெட்டை வாயில் வைப்பார், இழுக்க மாட்டார்.
* முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டபின் ஷுட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு (அவர் நடித்த கடைசிப் படமான) ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.
• நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள்.
* எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
• எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து வெற்றி பெற்ற ‘மலைக் கள்ளன்’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் அது.
* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
• எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தால். அதில் முக்கியமான இருவர் அரசியலைக் கலக்கிய துரைமுருகன், சினிமாவைக் கலக்கிய கோவை சரளா.
* கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங் கிலத்தில் அண்ணாவை வசனம் எழுதும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஆசை நிறை வேறவில்லை.
• அறிமுகம் இல்லாத புதிய நபர்களைச் சந்தித்தால் “நான் எம்.ஜி.ராமச்சந்திரன், சினிமா நடிகன்” என்று அறிமுகம் செய்து கொள்ளுமளவுக்கு எளிமையானவர் எம்.ஜி.ஆர்.
* தன் ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு சிங்கத்தையும், கரடியையும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டரையும் நியமித்திருந்தார்.
* மிகவும் நெருக்கமானவர் களை ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
* ‘அடிமைப் பெண்’ ஷுட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி அணிந்தார். அது பிடித்துப் போனதுடன், நன்றாக இருக்கிறதென்று அனைவரும் பாராட்டவே அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.
• எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கிய பெருமை உடையவர்கள் இருவர். ஒருவர் கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.
* முழுக்கை சில்க் சட்டை, லுங்கி அணிந்து தொப்பி, கண்ணாடி இல்லாமல் தானே காரை டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாத்தான் கண்டுபிடிப்பாங்க போல’’ என்பாராம்!
• தன் அன்னையான சத்யா அவர்களை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
* ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை (முதல்வராவதற்கு முந்தைய காலகட்டத்தில்) எழுதியிருக் கிறார் எம்.ஜி.ஆர்.
* எம்.ஜி.ஆர். நடத்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடல் எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்த பெருமையுடையது.
* எம்.ஜி.ஆர்.1936ல் சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராகி 1977ல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை மொத்தம் 136 படங்களில் நடித்தார்.
* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ல் எம்.ஜி.ஆரின் கமெண்ட் : “அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்ல. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.”
தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் புகழ் என்றுமே மறையாது