இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:11 | Best Blogger Tips
இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி நிகழ்ந்த தினம் இன்று !
இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி!
-----------------------------------------------------------------

17 -ஆண்டுகளாக ஆங்கிலேயரை குலை நடுங்க வைத்த திப்பு தன் 39-வது வயதிலேயே உயிர் தியாகியாகி வீரமரணம் அடைந்தது ஒரு வரலாற்று சோகமாகும். காவிரியே கண்ணீர் சிந்தும் கனத்த நினைவுகளோடு திப்பு சுல்தானின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் சுதந்திர எரிமலையின் தீ சுவாலைகள் மட்டும் அடங்கவில்லை.

ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.

ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். திப்பு என்றால் புலி என்று அர்த்தம். ஆம்! சிங்கமும், புலியும் பிறந்த பரம்பரையில் வந்தவர்கள் சீறுவதும், பாய்ந்து தாக்குவதும் இயல்புதானே!

நாடு கடத்தல்!
---------------------
திப்பு கொல்லப்பட்ட பிறகு, அவரது பிள்ளைகள் மைசூரிலிருந்து வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அங்கேயே இருந்தால் பரம்பரை போர் தொடரும் என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால் வேலூர் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இக்கோட்டை கி.பி 1295-ல் கட்டப்பட்டது. திப்புவின் பிள்ளைகளை சிறை வைப்பதாக இருந்தாலும் கூட கோட்டையில்தான் அவர்களை சிறையிட முடிந்தது! சிறை அவர்களுக்கு அரண்மனையாய் இருந்தது.

திப்புவின் ஆட்சிக்காலம் போரிலும், போருக்கு பிந்தைய நிவாரண பணிகளிலும், அடுத்த கட்ட போருக்கான ஆயத்தப் பணிகளிலுமே கழிந்தன. இடையிடையே தன் அருமை மனைவியோடு கழித்த பேரின்ப பொழுதுகளும் உண்டு. அதன் சாட்சியாக 12 ஆண் பிள்ளைகள், 8 பெண் பிள்ளைகள் அவரது வாரிசுகளாக வாழ்ந்தனர். இவர்களில் பலர் அரச வாழ்க்கையை துறந்து, அரசியல் கைதிகளாக வேலூரில் சிறையிடப்பட்டார்கள். திப்புவின் அமைச்சரவை சகாக்கள் 24 பேர், அவர்களை சார்ந்த அலுவலர்கள், உதவியாளர்கள், தளபதிகள், உறவினர்கள் என பெரும் கூட்டமே சிறைவைக்கப் பட்டது.

கனவுக் கோட்டை
---------------------------

திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதரை மைசூரின் ஆட்சியாளராக நியமிக்க ஆங்கிலயர்களிடம் சிலர் பேசினார்கள். நெருப்பை தங்கள் தலையில் சுமக்க அவர்கள் தயாரில்லை. ஆயினும், அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்ட திப்புவின் பிள்ளைகளுக்கு ஆறுதல் தரும் பொருட்டு மாதந்தோறும் மான்யம் வழங்கப்பட்டது.

இதன் நோக்கம் புரட்சிகர சிந்தனைகள் வரக்கூடாது என்பதே. ஆனால் அமைதியாய் ஒரு புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது. திப்புவின் வாரிசுகள், அமைச்சர்கள், தளபதிகள், உதவியாளர்கள் உறவினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கோட்டையில் சிறையிலிருந்த போது, மைசூரிலிருந்து வேலூருக்கு ஏராளமானோர் குடிபெயர்ந்தனர்.

இந்த மக்களின் இடம் பெயர்வு குறித்து ஆங்கிலேயர்கள் பெரிதாக கவலைப்படவில்லை! இவர்கள் வேலூரிலும் அதனை சுற்றியும் வாழத் தொடங்கினர். இதுதான் பின்னாளில் பெரும் புரட்சிக்கு உதவியாக இருந்தது.

ராணுவ குழப்பம்
-------------------------

திப்பு கொல்லப்பட்ட ஏழாண்டுகள் அமைதியாக நகர்ந்தது. தென்னிந்தியாவையும், கிழக்கிந்தி யாவையும் ஏறத்தாழ வசப்படுத்திவிட்ட ஆங்கிலேயர்கள், வட இந்தியாவையும், மேற்கிந்தியாவையும் தங்கள் முழுமையான ஆளுகைக்குள் கொண்டு வர கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ராணுவம் இரு பிரிவுகளாக இருந்தது. ஒரு பிரிவில் ஆங்கிலேயர்கள் மட்டுமிருந்தனர். மற்றொரு பிரிவில் இந்தியர்கள் இருந்தனர். இதில் மலையாள முஸ்லிம்களும், தெலுங்கர்களும், குறைவான எண்ணிக்கையில் தமிழர்களும் இருந்தனர்.

ஆயிரம் பேர் கொண்ட இந்திய படைக்கு ஒரு ஆங்கிலேயரே தளபதியாக இருப்பார். இந்திய வீரர்கள் எவ்வளவு தான் தியாகம் செய்தாலும் பெரிய பதவிகளுக்கு வரமுடியாது. நல்ல சம்பளத்தை பெற முடியாது. இது படையினரிடையே அதிருப்தியை வளர்த்தது. இது தவிர ராணுவத்தில் புதிய விதிகளும், கட்டுப்பாடுகளும் புகுத்தப்பட்டன. இந்துக்கள் திருநீறு பூசக்கூடாது என்றும், கடுக்கண்கள் அணியக் கூடாது என்றும், முஸ்லிம்கள் தாடி வைக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது.

மத உணர்வுகளில் ஆழமான நம்பிக்கைக் கொண்ட இந்திய வீரர்கள் கொந்தளித்தனர். மேலும் மார்பில் சிலுவை போன்ற ஒரு பொருளை அணிய வேண்டுமென்றும், ஐரோப்பியர் அணிவதைப் போன்ற தொப்பிகளை போட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த புதிய கட்டளைகளை இந்திய வீரர்கள் அநேகமானோர் ஏற்க மறுத்தனர். மீறினால், சிறையிலடைப்போம் என்று ஆங்கிலேயர்கள் மிரட்டினர். இதனால் கோபமுற்ற ஒரு இந்திய வீரர், மேஜர் போஸ் என்ற அதிகாரியை தனது துப்பாக்கியால் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆனது.

வீர ஊர் வேலூர்
-----------------------
1806- ஏப்ரல், மே மாதங்களில் வேலூரி லிருந்த இந்திய வீரர்களுக்கு ஐரோப்பிய மாதிரி தொப்பிகள் வரவழைக்கப்பட்டு அனைவரும் அணியும் படி கட்டாயப்படுத்தப்பட் டனர். இவையனைத்தையும் சிறையிலிருந்த திப்புவின் வாரிசுகள் கவனித்துக் கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய சிப்பாய்கள், தொப்பிகளை அணிய மாட்டோம் என்று கூறி, தலையில் கைக்குட்டைகளை கட்டிக் கொண்டு கலகம் செய்தனர். பலர் கைது செய்யப் பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றவர்கள் அன்று மாலை ஆயுதங்களை எடுக்க மறுத்தனர். எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தாதீர்கள் என்று இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கலகத்துக்கு காரணமான ஒரு இந்து வீரருக்கும், ஒரு முஸ்லிம் வீரருக்கும் தலா 900 கசையடிகள் வழங்கப்பட்டது. மேலும் 19 பேருக்கு தலா 500 கசையடிகள் வழங்கப்பட்டது. புரட்சியின் முதல் கட்டமாக நடைபெறும் சம்பவங்களை கவனித்துக் கொண்டிருந்த திப்புவின் வாரிசுகளும், அவர்களை சார்ந்த போர் நிபுணர்களும் இதை ஒருமுகப்படுத்தும் வேலைகளை தொடங்கினர்.

1806- ஜுன் 17 அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை தொடங்குவது பற்றி யோசிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜுலை மாதம் ஒத்திவைப்பதாக முடிவு செய்து வேலைகள் தொடங்கப்பட்டன. திப்புவின் மகன்களில் மூன்றாவது மகன் மொகைதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் இப்புரட்சியில் நேரடியாக பங்கேற்றனர். மூத்தவர் பத்தே ஹைதர் தலைமை வகித்தார். வேலூரில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, சிறையிலிருந்து விடுதலையாவது அவர்களது முதல் திட்டமாக இருந்தது. அடுத்து வெளியிலிருந்து ராணுவ உதவிகளை பெற்று மீண்டும் மைசூரில் ஆட்சியை நிறுவுவது அவர்களது இலக்காக இருந்தது.

அதற்கேற்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. புரட்சியின் போது, கோட்டைக்கு வெளியே வாழும் மக்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவர்களை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டது. கோட்டைக்குள் எழுந்திருக்கும் பரபரப்புகளை மோப்பம் பிடித்து, ஆங்கிலேயர்கள் உஷாராகிவிடக் கூடாது என்பதற்காக மற்றொரு திட்டமும் வகுக்கப்பட்டது.

திப்பு சுல்தானின் பிள்ளைகளுக்கு ஆங்கிலேயர்கள் திருமணம் செய்யும் அனுமதியை வழங்கியிருந்தார்கள். அதன்படி பலர் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது அந்த அனுமதி புரட்சிக்கும் பயன்பட்டது.திப்புவின் ஏழாவது மகள் நூருன்னிஸா பேகத்திற்கு 1806- ஜுலை 10 அன்று திருமணம் என திப்பு மகன்கள் அறிவித்தனர். அதையட்டி அரச முறைப்படி திருமணம் நடைபெற வேண்டுமென்பதால், இதை ஆங்கிலேயர்களிடம் முறைப்படி தெரிவித்து சில கெடுபிடிகளை தளர்த்திக் கொண்டனர். சீர் எடுப்பது, சடங்குகள் நடப்பது என்ற போர்வையில் தூதுச் செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகள் குறைந்தன. மிக ராஜதந்திரமாக காய்கள் நகர்த்தப் பட்டன. ஆங்கிலேய அதிகாரிகள் சிறைக்குள் ரோந்து வருவதும் குறைந்ததால், எல்லாம் வசதியாய் அமைந்தது. இந்திய வீரர்கள் மட்டுமே வலம்வந்து, ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தென் தமிழகத்தின் பாளையக்காரர்களும், மராட்டியர்களும் தங்கள் தூதுவர்களை வேலூர் கோட்டைக்கு அனுப்பி புரட்சி குறித்தும், அடுத்து இணைந்து பணியாற்றுவது குறித்தும் தகவல் பரிமாறிக் கொண்டனர். புரட்சி குறித்து பிரெஞ்சுகாரர்களுக்கும் ரகசிய தகவல் அனுப்பி உதவி கோரப்பட்டது.

பக்கீர்களின் பெரும் பிரச்சாரம்
---------------------------------------------

வெளியே மக்களை திரட்டவும், புரட்சியின் நம்பிக்கைகளை ஊட்டவும் திட்டம் தீட்டப்பட்டது. ஏழ்மை நிலையிலிருந்த இஸ்லாமிய அறிவு கொண்ட பலர் திரட்டப்பட்டு, அவர்களுக்கு; அரசியல் வகுப்பு எடுக்கப்பட்டது. இவர்களுக்கு பிரச்சார நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு களத்துக்கு அனுப்பப்பட்டனர். பள்ளிவாசல்கள், திருமண இடங்கள், மக்கள் கூடுமிடங்களில் இவர்கள் பாடல்களை பாடியும், புரட்சிகர உரை நிகழ்த்தியும் மக்களை தயார் படுத்தினார்கள். இவர்கள் ஃபக்கீர்கள் என அழைக்கப்பட்டனர்.

வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பக்கீர்களின் பிரச்சார யுத்தம் அனல் கக்கியது. இது படையினரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

வெடித்தது புரட்சி
-------------------------

1806- ஜுலை 9 அன்று வேலூர் கோட்டை பரபரப்பாக இருந்தது. நாளை திப்புவின் மகளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற நினைப்பில் ஆங்கிலேயர்கள் அலட்சியமாக இருந்தனர். முதல் நாள் திருமண சிறப்பு விருந்து நடைபெற்றது.

வேலூர் புரட்சியின் தளபதிகளில் ஒருவரான ஜமேதார் ஷேக்காஸீம் என்பவர் கோட்டையின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனக்கு நம்பகமான படை வீரர்களை முக்கிய இடங்களில் அமர்த்தினார். வழக்கத்திற்கு மாறாக, திருமண ஏற்பாடுகளை காரணம் காட்டி கூடுதல் வீரர்கள் கோட்டையில் தங்கினர். கோட்டையில் இருக்கும் பள்ளிவாசலில் உறுதி மொழியை பலர் எடுத்தனர். அந்த பள்ளிவாசல் வேலூர் புரட்சிக்கு களமாக இருந்தது. இப்போது தொழுகை மறுக்கப்படும் அதே பள்ளிவாசல் தான் அப்போதும் இன்னொரு புரட்சிக்காக காத்திருக்கிறது. அடுத்த நாள் ஜுலை 10 விடிகாலையில் அனைவரும் புரட்சிக்கு தயாரானார்கள்.அனைவரும் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபடுவது போல் நடித்தனர்.

அந்த நேரத்தில் புரட்சி குறித்து விபரம் அறியாதவர்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டும் நோக்கில், புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய வீரர்களை கொல்கிறார்கள் என செய்தி பரப்பினர். இது ஏற்கெனவே போடப்பட்ட தந்திரத் திட்டங்களில் ஒன்றாகும். அது நன்றாகவே வேலை செய்தது. கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டனர். புரட்சி வெடித்தது. இறைவன் மிகப்பெரியவன் என்ற முழக்கம் கோட்டையை அதிரச் செய்தது. உறங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும், தளபதிகளும், வீரர்களும் நிலை குலைந்தனர். பலர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.

புரட்சியில் 14- ஆங்கிலேய அதிகாரிகள் உட்பட சுமார் 191- ஆங்கிலேயர்கள் கொல்லப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்களும் உண்டு. ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அதே நேரம் வேலூர் கோட்டைக்குள் இருந்த ஆங்கிலேய பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப் பட்டார்கள். புரட்சியாளர்கள் கண்ணியமாக நடந்து கொண்டனர்.

வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்புவின் புலி கொடி ஏற்றப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து வரலாறு திரும்பியது. ஆனால் நீடிக்கவில்லை!

திசை மாறிய புரட்சி
-----------------------------

வேலூர் கோட்டையை வசப்படுத்திய புரட்சி யாளர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உற் சாகத்திலும், கட்டுப்பாட்டை இழந்தனர். கோட்டைக் குள்ளிருந்த ஆங்கிலேயர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தினர். கோட்டைக்கு வெளியேயிருந்த பொதுமக்களும் உள்ளே வந்தனர். புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல், கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களை கட்டுப்படுத்த திப்புவின் பிள்ளைகள் தவறிவிட்டனர்.

அதற்குள் வேலூரிலிருந்து 16- கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஆற்காட்டிலிருந்து, புரட்சியை ஒடுக்க ஆங்கிலேயப் படை விரைந்து வந்தது. இலக்குகளை மறந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புரட்சியாளர்களை அடக்க மிக எளிதாக, இன்னொரு வாசல் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர்.
உள்ளே நுழைந்த ஆங்கிலேயப் படைகள் புரட்சி யாளர்களை தேடி, தேடி கொன்றது. எட்டு மணி நேரத்தில் வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீட்டனர். ஒரே நாளில் வேலூர் புரட்சி ஒடுக்கப்பட்டது.

திப்புவின் வாரிசுகளுக்கு பாதுகாப்பாக இருந்த புரட்சியாளர்கள் கோட்டையின் மதில் சுவரில் நிற்கவைத்து, பீரங்கிகளால் தூள், தூளாக்கப் பட்டனர். கோட்டையில் ஏற்றப்பட்ட திப்புவின் கொடி இறக்கப் பட்டு, மீண்டும் ஆங்கிலேயர் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை தொடங்கியது
--------------------------------------

வேலூர் புரட்சிக்கான காரணங்களை ஆராய, புரட்சி முடிந்த இரண்டு நாள் கழித்து, ஜுலை 12, 1806 அன்று விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை ஆகஸ்ட் 9, 1806-ல் சமர்பிக்கப்பட்டது. ஆங்கிலேயப் படையிலிருந்த இந்திய வீரர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டதுதான், புரட்சிக்கான மூலக்காரணம் என்றும், அதை திப்புவின் வாரிசுகள் புரட்சியாக மாற்றினார்கள் என்றும் விசாரணை அறிக்கை கூறியது.

புரட்சியில் ஈடுபட்ட முன்னணி வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. புரட்சியை அடக்கிய வீரர்களுக்கு சலுகைகளும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

மீண்டும் நாடுகடத்தல்
---------------------------------

திப்புவின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளும், மானியமும் குறைக்கப்பட்டது. அவர் களை தென்னிந்தியாவில் எங்கு வைத்திருந்தாலும் அது ஆபத்து என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், திப்புவின் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் வங்காளத்துக்கு நாடு கடத்தினர். அவர்களை சார்ந்த படையினர் மற்றும் ஆதரவாளர்களை திருநெல்வேலி உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு அனுப்பி, அங்கேயே தங்கவைத்து, அவர்களின் தொடர்புகளை சிதறடித்தனர்.

ஜனவரி 20, 1807 அன்று வேலூரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு திப்புவின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கொல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர். திப்புவின் அரச குடும்பத்து பெண்களில் விருப்பமுள்ளவர்கள் மைசூரிலும் மற்றவர்கள் வேலூரிலும் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

கொல்கத்தாவில் தங்க வைக்கப்பட்டவர்கள் காலப் போக்கில் அங்கேயே உயிர்துறந்து அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் வறுமையிலும் புறக்கணிப்பிலும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.

Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை