நன்றி ! நன்றி ! நன்றி !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 AM | Best Blogger Tips

மனதார நன்றி 
எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான 
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
பக்தி என்பது வெளிவேஷமல்ல
என்பதை எனக்குப் பயங்கரமாய்
புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு
எப்பொழுதும் மனதார நன்றி !
நாமஜபத்தின் அற்புத மஹிமையை
எனக்குச் சரியாகப் புரியவைத்த
என்னுடைய பாபங்களுக்கு
என்றுமே மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் Kadavuluku மனதார நன்றி !
இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !
எனக்கு என்னை ஆத்மா என்று
உணர வைக்க என்னை குருவிடத்தில் சேர்ப்பித்த என்னுடைய வாழ்க்கைக்கு
என்றென்றும் மனதார நன்றி . . .
நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன் ! ! !
மனதார நன்றிகள் .
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran