காயத்திரி மந்திரம் உருவான விதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

காயத்ரி மந்திரம் விஷ்வாமித்திரர் தான் படைத்தார் மேலும் அவர் சத்திரிய குலத்தை சேர்ந்தவர்.
கௌசிகன் என்ற மன்னனுடைய நாட்டில் பஞ்சம் வந்தது. இதை போக்க கௌசிக மன்னன் வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனுவின் தங்கையான நந்தினி பசுவை கேட்கிறான், வசிஷ்டர் தர மறுக்கிறார். இதனால் கோபம் அடைந்த கௌசிகன் போர்தொடுத்து தோல்வி அடைகிறான். மேலும் பிரம்மரிஷிக்கு மட்டுமே காமதேனு ,நந்தினி போன்றவை கட்டுப்படும் என்பதால் தவம் இயற்றுகிறான்.சத்திரியானால் பிரம்மரிஷி பட்டம் வாங்கமுடியாது என்று வசிஷிடர் கூறுகிறார். இதை வாங்கி காட்டுவதாக சவால் விடுகிறார்.இதனால் கள்ளி செடியின் மேல் தவம் புரிகிறார் இதை கண்ட அன்னை பார்வதி கௌசிகன் முன் தோன்றி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சமுக விளக்கை ஏற்றினால் உன் கவலைகள் தீரும் என்று கூறி மறைந்து விடுகிறார். பின் அங்கிருந்து ஏகாம்பரேஸ்வரர் கோவில் வந்து பஞ்சமுக விளக்கேற்ற திரி கேட்கிறார் ஆனால் திரி தர மறுத்து விட்டன பூதகனங்கள்.உடனே அங்கிருந்த விளக்கில் ஏறி தனது உடலை தலை ,கை ,கால் என ஐந்து முகத்திலும் ஏற்றி விளக்கு எரிய வைக்கிறான் இதை கண்ட அப்பனும் அம்மையும் அவன் முன்தோன்றி பிரம்மரிஷி பட்டத்தை கொடுகிறார்கள்.இதன் மகிழ்ச்சியின் விளைவாக கௌசிகன் புது மந்திரம் ஓதுகிறான்.அந்த மந்திரத்துக்கு, உடம்பை (காயத்தை )திரியாக்கி கூறியதால் அது காயத்திரி மந்திரம் என்ற பட்டமும் அன்னை கொடுக்கிறாள், மேலும் சத்திரியன் கூறிய இந்த மந்திரத்தை இனி வேதியர்கள் கூறட்டும் என்று வரமும் அளிக்கிறார்கள்.
பிரம்மரிஷி பட்டம் வென்ற கௌசிகன் யாருக்கும் தலை வணங்குவதில்லை என்று கூறுகிறார். இதனால் வசிட்டர் கோபம்கொண்டு நீ ப்ரம்மரிஷி அல்ல என்று ஒதுக்குகிறார்.இதனால் மறுபடியும் கோபம் அடைந்து தவம் இயற்ற செல்கிறார் அவர் போகும் வழியில் ஒரு குழந்தையையும் பெண்ணையும் பார்க்கிறார். பின் அது தன் மகள் சகுந்தலா என்று உணர்ந்து, அவள் அரசனிடம் மோசம் போயிருப்பதை உணர்ந்து அவரிடம் பெண் கேட்க செல்கிறார்.அங்கு பல சோதனைகள் நடக்கிறது இறுதியாக யாருக்கும் தலை வணங்காத கௌசிகன் அங்கு சிரம் தாழ்த்தி, தன் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அங்கு அவர் ஆணவமும் தலை வணங்கியதால் அவர் ரிஷிகளுக்கெல்லாம் ரிஷியான ராஜரிஷி பட்டமும் பெறுகிறார்.அவர்தான் விஸ்வமித்திரர், மக்களுக்காக தவம் இயற்றியதால் விஸ்வமித்திரர் என்று அழைக்கப்பட்டார் விஸ்வம் என்றால் உலகம் என்றும் மித்திரர் என்றால் நண்பர் என்றும் பொருள் படும்.
நன்றி இணையம்