சேனா பதக்கம்
சேனா பதக்கம் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | பதக்கம் | |
வழங்கப்பட்டது | இந்தியத் தரைப்படை |
இது தரைப்படையில் தீரச்செயல்கள் புரிந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும். இருப்பினும் அமைதிக் காலங்களிலும் சிறப்புமிகு சேவை புரிந்த படைவீரர்களுக்கு சேனா பதக்கம் (சிறப்புமிகு) வழங்கப்படுகிறது. இந்தியத் தரைப்படையின் பாராட்டை வெளிப்படுத்தும் ஓர் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதுக்கு மேலாக வீர சக்கரம், சௌர்யா சக்கரம், யுத் சேவா பதக்கம் ஆகியன உள்ளன. இந்தப் பதக்கம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு மேலானது.
-------------------------------------------------------------------------------------------------------------
நவ சேனா பதக்கம்
நவ சேனா பதக்கம் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | பதக்கம் | |
வழங்கப்பட்டது | இந்தியக் கடற்படை |
முகப்பு: இந்தப் பதக்கத்தின் முதன்மை விவரணங்கள் இது ஓர் உள்ளடங்கிய ஓரங்களை உடைய ஐம்முனை வெள்ளி பதக்கமாக குறிப்பிட்டாலும் இத்தகைய பதக்கம் வெளியானதாகத் (மாதிரிகள் மற்றும் குறுவடிவங்கள் தவிர்த்து ?) தெரியவில்லை. மே 1961ஆம் ஆண்டில் இதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இதன்படி கடற்படை சின்னம் முகப்பில் அமைந்த 35 மி.மீ வட்டவடிவ வெள்ளி பதக்கமாக உள்ளது. பதக்கத்தைத் தொங்கவிட ஓர் அழகிய சட்டகம் அமைக்கப்பட்டுள்ளது; இதன் ஓரத்தில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.
பின்புறம்: முதலில் ஓர் கயிறு சுற்றிய மேல்நோக்கிய திரிசூலம் பதிப்பதாக இருந்தது. 1961ஆம் ஆண்டில் இதற்கு மாற்றாக குறுக்காக ஒன்றன்மீது ஒன்று சாத்திய நங்கூரங்களைச் சுற்றி சங்கிலி வடம் அமைந்துள்ளதைப் போல வடிவமைக்கப்பட்டது. மேலே இந்தியில் "நௌ சேனா பதக்கம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
நாடா: 2 மிமீ வெள்ளை மையக்கோடுகளுடன் 32 மிமீ, கருநீலம். கருநீலம் 15 மிமீ, வெள்ளை 2 மிமீ, கருநீலம் 15 மிமீ.
-------------------------------------------------------------------------------------------------------------
வாயுசேனா பதக்கம்
வாயுசேனா பதக்கம் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | பதக்கம் | |
வழங்கப்பட்டது | இந்திய வான்படை |
இதனை 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு 1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வீரதீரச் செயல் புரிந்தோருக்கு "வாயுசேனா பதக்கம் (வீரச்செயல்)" என்றும் பிறருக்கு "வாயுசேனா பதக்கம் (சிறப்புப் பணி)" என்றும் வகைபடுத்தப்பட்டுள்ளது.
விவரணம்
முகப்பு: தாமரை மலர்வது போன்ற நான்கு கைகள் உடைய வெள்ளி நட்சத்திரம். நடுவில் தேசியச் சின்னம். ஓர் நேர் சட்டக்கத்திலிருந்து தொங்குமாறான அமைப்பு. சட்டகத்தின் ஓரங்களில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.பின்புறம்: சிறகுகள் விரித்த இமாலாயக் கழுகு. அதன் மேலும் கீழும் இந்தியில் "வாயு சேனா பதக்கம்" என்ற பொறிப்பு.
நாடா: 2 மிமீ அகலமுள்ள கருவெள்ளை மற்றும் செம்மஞ்சள் பட்டைகள் கீழிருந்து மேலாக குறுக்காகவும் மாறி மாறியும் இருக்குமாறு 30 மிமீ நாடா.
உசாத்துணை
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.