அப்படி என்ன இந்துத்வா சித்தாந்தம் என்பது?

மணக்கால் அய்யம்பேட்டை | 9:46 AM | Best Blogger Tips
Image may contain: 1 person


Image may contain: one or more people


மோடியின் மீது தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் அவதூறு பிரச்சாரங்களுக்கு ஒரே காரணம், பிஜேபி ஒரு இந்துத்வா சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால்தான். ஜெயலலிதா இல்லாததால் இங்கே பிஜேபி வளர மோடியின் பிம்பம் பெரிய அளவில் பயன்படும் (திமுகவை ஏற்காதவர்களை முக்கியமாக), அதனால் முதலில் அந்த பிம்பத்தை சிதைக்கவேண்டும் என்கிற நோக்கம்தான்.. நீங்களே யோசித்துப்பாருங்கள், ஜெயலலிதா இருந்தவரை மோடிக்கு இங்கே இவ்வளவு எதிர்ப்பில்லை..
சரி.. அப்படி என்ன இந்துத்வா சித்தாந்தம் என்பது? இங்கே எல்லா மக்களும் அவரவர் வழிபாட்டுமுறையை, நம்பிக்கைகளை, மதச்சடங்குகளை கடைபிடிக்கலாம்.. ஆனால் கலாச்சார ரீதியாக நாம் எல்லோரும் இந்துக்கள்தான் (இந்து என்கிற சொல், சிந்துநதிக்கரைக்கு மறுபுறம் வாழும் மக்களை அழைக்க portuguese பயன்படுத்தியது), ஏனென்றால், இங்கே உள்ள அணைத்து மதத்தவர்க்கும் முன்னோர்கள் இந்துக்கள்தான்.. இவ்வளவுதான்.. இது உண்மையும்தானே? ஆனால் இங்கே இருக்கும் பல மத அமைப்புகள் இதை ஏற்காமல் , ஏதோ வெள்ளைக்காரர்கள் , அரபியர்கள் வழிவந்தவர்கள் போல பேசி, நம் கலாச்சார, பாரம்பரியத்தை அழித்து, அந்நாடுகளின் கலாச்சாரங்களை இங்கே புகுத்துவதை நாம் கண்கூடாக காண்கிறோமா இல்லையா?
தமிழ்நாட்டில், பல தேசவிரோத கும்பல்கள், அரசியல் கட்சிகள் இங்கே இந்துத்வா சித்தாந்தம் வளர்ந்தால், திராவிட சித்தாந்தம் சறுக்கலுக்கு உண்டாகும்.. திராவிட என்பதே சமஸ்க்ருத சொல்.. மூன்று கடல்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் வாழும் மக்களின் பெயர்.. இதை ஒரு இனமாக மாற்றியது வெள்ளைக்காரன் காலத்தில் இங்கே கிறித்தவ மதத்தை பரப்பிவந்த பாதிரியார்கள்தான்.. முக்கியமாக Robert Caldwell எனும் பாதிரியார்.. இப்படி நமக்குள் ஆரியன், திராவிடன் என்று பிரிவினையை ஏற்படுத்தினால்தான் , தாங்கள் இங்கே சுலபமாக மதமாற்றம் செய்ய முடியும் என்பதால்.. இதைதான் ஈவேரா போன்றவர்கள் கையில் பின்னால் எடுத்துக்கொண்டனர்.. பல சரித்திர , மற்றும் மரபணு ஆய்வாளர்கள் இந்த திராவிட ஆரிய கூற்று பொய் என்று பலமுறை நிரூபித்துவிட்டனர்.. இந்த கைபர் கணவாய் போன்றவைக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.. தோல் நிறத்தை வைத்து பிராமணன் ஆரியன், கருப்பாக இருப்பவர்களெல்லாம் திராவிடன் என்கிற கட்டுக்கதை.. ஆனால் பிராமணர்கள் , மற்றும் வட இந்தியர்கள் எல்லாம் வெள்ளை நிறம் இல்லை, தென்னிந்தியர்கள், மற்றும் ப்ராமணரல்லாதவர் எல்லோரும் கருப்பு நிறம் இல்லை.. நன்று யோசித்தும், படித்தும் பாருங்கள்.. மாறாக, நமது சங்க இலக்கியத்தில் 10000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் வேத மறைகள் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கிறது.. உதாரணத்திற்கு முதல் சங்கத்தை சேர்ந்த பல் யாகசாலை முடுக்குடுமி என்கிற பாண்டிய மன்னன்.. பல யாகங்கள் செய்ததால் அவனுக்கு இந்த பெயர்..
சரி.. மறுபடியும் மோடிக்கு வருவோம்.. இங்கே நமக்கு இந்து என்கிற உணர்வு வராமல் இருக்க தமிழன் என்கிற உணர்வு திணிக்கப்படுகிறது.. ஆனால் தமிழன்தான் இந்து.. பக்தி இல்லாமல் தமிழ் ஏது? தொல்காப்பியத்தில் சொல்லும் அணைத்து தமிழ் தெய்வங்களும் இந்தியா முழுவதும் கும்பிடுகிறார்களா இல்லையா , முருகன் உட்பட? முருகனை நாம் பிரியத்தால் தமிழ்க்கடவுள் என்று அழைக்கிறோம்.. ஆனால் முருகனின் 3000 வருட பழமையான கோவில் pewoha என்கிற இடத்தில, ஹரியானாவில் இன்றும் இருக்கிறது.. இது யுதிஷ்டிரன் மஹாபாரத போரின்பொழுது பூஜித்த கோவில் .. வெவ்வேறு இடத்தில முருகனை ஸ்கந்தா, கார்த்திகேயா என்று வெவ்வேறு பெயரில் அழைக்கிறார்கள்.. முருகனின் குமாரசம்பவம் எழுதிய காளிதாசர் ஒரு வட இந்தியர்.. ஏன்? தமிழிற்கு முதல் இலக்கணம் எழுதிய அகத்தியரே விந்திய மலைக்கு மறுப்புறத்திலிருந்து வந்தவர்தானே?
தமிழனுக்கும் வட நாட்டுக்காரனுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டு உங்களை குழப்புவார்கள் இந்த இத்துப்போன பெரியார்வாதிகள்.. சிவன், விஷ்ணு, முருகன் போன்ற தெய்வங்களே சம்மந்தம்.. பெரியவர்களை மதிக்கும் கலாச்சாரம், தாய் தந்தை, ஆசிரியர்களை கடவுளுக்கு மேலாக போற்றும் வழக்கம் , இருக்கைகள் கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கம் (அங்கே பிராணாம் என்று சொல்வார்கள்), இயற்க்கையை கடவுளாக போற்றி (அக்னி, வாயு, நதிகள்) வணங்கும் பழக்கம் எல்லாமே சம்மந்தம்தான்..
இதனால்தான் இவர்கள் இங்கே இந்துத்வத்தை அழிக்கவேண்டும், இல்லையென்றால் இந்த நாட்டை உடைக்க முடியாது என்று (சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் பணம் வாங்கிக்கொண்டும், அரசியலுக்காகவும்) இப்படி பேசிவருகிறார்கள்..இந்துவையும் தமிழனையும் பிரிக்க பார்க்கிறார்கள்..
சரி.. மோடி என்ன தமிழ் விரோதியா? நிச்சயம் இது பொய்.. மோடி க்கு எதிராக இங்கே பிரச்சாரம் செய்யப்பட பல திட்டங்கள் எதுவும் மோடியினால் புதிதாக கொண்டுவரபோடவை அல்ல.. அதுவும் எதுவும் தமிழ்நாட்டிற்க்கான பிரத்தியேக திட்டமும் அல்ல.. சொல்லப்போனால், மக்கள் விருப்பத்தை ஏற்று, முன்பு காங்கிரஸ் திமுக அரசால் தடை செய்யப்பட ஜல்லிக்கட்டினR. Balu:
தடையை நீக்கியது, அவர்களால் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை ரத்து செய்ததும் மோடி அரசுதான்.. ஆனால் இதயெல்லாம் கொண்டுவந்த Dmk, காங்கிரஸ் (பல ஈழத்தமிழர்களை கொன்று, பல தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையால் கொல்லப்பட்டபொழுது அமைதிகாத்து வந்தார்கள்) இங்கே இருக்கலாம், ஆனால் மோடி இங்கே இருக்கக்கூடாது, பாஜக காலூன்ற கூடாது.. இதையெல்லாம் சிந்தித்துப்பாருங்கள்.. உள்நோக்கம் புரியும்.. பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்ய கோரிக்கைவைத்து, தான் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கி ஆரம்பித்தது கீழடி ஆராய்ச்சி, மோடி ஆட்சியில்தான்.. இதை மழைக்காக கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தியதை, நிரந்தரமாக நிறுத்தியதாக வதந்தி பரப்பினார்கள் (இப்பொழுது நான்காம் கட்ட ஆராய்ச்சி நடந்துவருகிறது).. திருக்குறளை இந்தியா முழுவதும் CBSE பாடத்திட்டத்தின் மூலம் கொண்டு சேர்த்ததும் மோடிதான்.. இதற்க்கு முன் மத்திய ஆட்சியில் இருந்த தமிழ்க்காவலர்கள் ஏன் இதை செய்யவில்லை?
மோடி தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நன்மைகள் செய்தார் என்று நம் பக்கத்தில் உள்ள ஒரு முந்தைய பதிவை படியுங்கள்.. அதை முதல் கம்மெண்ட்டில் link ஆக தருகிறேன்..
ஆக, இங்கே மோடி எதிர்ப்பு என்பது இங்கே திணிக்கப்படுகிறது.. மோடி அரசின் சில முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை தராமல் இருந்திருக்கலாம் (உதாரணத்திற்கு demonetization), சில தேர்தல் வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியாமல் போய் இருக்கலாம்.. ஆனால் இதற்க்கு முன் வரலாற்றில் இல்லாத கஷ்டம் மக்களுக்கு வந்துவிட்டதை போல பேசுவதெல்லாம் அயோக்கியத்தனம்.. அரசின் முயற்சியில் நேர்மை இருக்கிறது
இந்தியாவில் பாஜக ஆளும் அணைத்து மாநிலங்களிலும் தமிழகத்தை காட்டிலும் நீர்மேலாண்மை, இயற்கைவள பாதுகாப்பு எல்லாம் நன்றாகவும் (மணல் கொள்ளை எல்லாம் இங்குபோல் எங்கும் இல்லை), ஊழல் குறைவாகவும்தான் இருக்கிறது.. ஆனால் இந்துத்வா சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதால் அவர்கள் இங்கே இருக்கக்கூடாதாம்.. இந்துத்வா சித்தாந்தம் நாட்டை நேசிக்கும் மற்ற எந்த மதத்தவர்க்கும் எதிரானது அல்ல, ஆனால் தேசத்துரோக இந்துக்களுக்கே கூட எதிரானதுதான்..
 Image may contain: 1 person
நன்றி இணையம்