தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள்.
உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள்.
இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.
வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.
நம்முடைய வெற்றி,தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள்.
நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை,செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.
👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
நன்றி 👤✍ *பெ.சுகுமார்*