முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை யூஸ் பண்ணுங்க…

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:40 | Best Blogger Tips

தற்போது இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை. இவ்வாற
ெல்லாம் இருந்தால், கூந்தல் கொட்டாமலா இருக்கும். ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து செய்து பாருங்களேன்…

* நெல்லிக்காய் எண்ணெய் (amla oil)- கூந்தல் உதிர்தல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் எண்ணெய் சரியானதாக இருக்கும். ஏனெனில் இந்த எண்ணெயில் கூந்தல் நன்கு உறுதியாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த எண்ணெயில் நெல்லிக்காய் தான் முக்கியமான பொருள். இந்த பொருள் கூந்தலை எண்ணெய் பசையுடனும், கூந்தலை நன்கு வளர்ச்சியடையவும் செய்யும். ஆகவே இந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து பின்னர் தூங்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

* தேங்காய் எண்ணெய் – அனைவருக்கும் நன்கு தெரிந்த எண்ணெய் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் தான் கூந்தல் உறுதிக்கும், முடியின் வேர்கள் வலுவடைவதற்கும் சிறந்தது என்று நம் முன்னோர்கள் எல்லாம் சொல்வார்கள். அதேப்போன்றும் இந்த எண்ணெயும் உண்மையில் சிறந்தது தான். ஆகவே தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தடவி, மசாஜ் செய்து குளித்து வர வேண்டும். வேண்டுமென்றால், தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால், பொடுகு போய்விடும்.
* கடுகு எண்ணெய் – கூந்தல் உதிர்தலுக்கு கடுகு எண்ணெயுடன், மருதாணியை சேர்த்து, தேய்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படாமல் தடுக்கலாம். அது எப்படியென்றால், முதலில் கடுகு எண்ணெயுடன், சிறிது மருதாணி இலைகளை போட்டு, காய வைத்து, பின் அதில் உள்ள இலைகளை நீக்கி, ஸ்கால்ப் மற்றும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கடுகு எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3, கூந்தல் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
* ஆமணக்கெண்ணெய் – கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கெண்ணெய் தான். இந்த எண்ணெயை ஸ்கால்பிற்கு மட்டும் தடவ வேண்டும். கூந்தல் முழுவதும் தடவினால், பின் அந்த எண்ணெய் பசையை நீக்குவது என்பது கடினமாகிவிடும். ஆகவே இந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது தலைக்கு தடவி, தலைக்கு துணியைச் சுற்றி, பின் காலையில் எழுந்து குளித்துவிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், இதன் பலனை சில வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.
* மீன் எண்ணெய் – உண்மையில் மீன் எண்ணெய் கூந்தல் உதிர்வதை நிறுத்தி, முடி வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகிறது. என்ன மீன் எண்ணெய் என்று சொன்னதும் எப்படி அதைப் போய் தேய்ப்பது என்று யோசிப்பீர்களே! மீன் எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் நாற்றத்தை தாங்க முடியாது தான். ஆகவே அதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாம். இதனால் கூந்தல் உதிராமல், ஆரோக்கியமாக வளரும்.
ஆகவே மேற்கூறியவற்றில், ஏதேனும் ஒன்றை செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, அடர்த்தியாக வளரும்.

கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால் :-

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கூந்தலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்கின்றனர். தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் போல தேங்காய் பால் கூந்தலை பாதுகாக்க உதவுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு உதிராமல் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், பொட்டாசியம், போலேட் போன்றவை காணப்படுகின்றன.

தேங்காய் பால் ஊட்டச்சத்து
தலைமுடிக்கு ஏற்றவாறு தேங்காயை எடுத்து (ஒரு மூடி) சிறிது வெந்நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும்.
தலையை சுத்தமாக அலசி காயவைத்து பின்னர் தேங்காய் பாலை மெதுவாக வேர்கால்களில் படுமாறு அப்ளை செய்யவேண்டும். தண்ணீர் போல இருப்பதால் பூசிய உடன் நன்கு கவர் போட்டு கூந்தலை கட்டிவிட வேண்டும்.
இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் தலையில் தங்கிவிடும். இரண்டு நாள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
கூந்தலை பாதுகாக்கிறது
தேங்காய் பால் தேய்த்து குளிப்பதால் தலையில் இருந்து அதிக அளவில் முடி கொட்டுவது கட்டுப்படும். தலையில் புதிய முடிகள் உருவாகும். நீளமான கூந்தல் கிடைக்கும். மென்மையாகவும், பளபளப்பாகவும் கூந்தல் மாறும்.
வாரம் ஒருமுறை தேங்காய்பாலில் தலை குளிப்பதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதனால் அழகான, ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே தேங்காய் பால் கூந்தல் அழகை மட்டுமல்லாது உடல் அழகையும் சீராக பராமரிக்கிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.