டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூளை சுருக்கம் வருமாம்: ஆய்வில் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:29 PM | Best Blogger Tips
மனிதர்களின் வயோதிக காலத்தில் மூளை எடை குறைந்து விடுகிறது. 80 வயதில் மூளையின் உண்மையான எடை அளவில் 15 சதவீதம் குறைந்து விடுகிறது. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு மூளை சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 வகை நீரிழிவில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக ‘ரிஸ்க்'தான் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஞாபகசக்தி மற்றும் அறிவுத்திறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளையின் மேடுகள்

கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1 மில்லி மோல்கள் இருந்து வந்துள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால் ‘ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின் வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சர்க்கரை இருந்தால் சுருங்கும்

சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று ஆஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின் தெரிவித்திருக்கிறார். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

டென்சன் இருந்தால் மூளை சுருக்கம்

மூளைச் சுருக்க பாதிப்பை வயதானவர்கள் மட்டுமின்றி அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் பாதிப்பிற்குக் காரணம்.

மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும். நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

ஆரோக்கிய உணவுகள்

மூளைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காத வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகள், தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மூளை சுருக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள உணவுமுறையை தொடர்ந்து உட் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மூளை ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.