உயிர் காக்கும் செயற்கை இரத்தம் - சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:51 | Best Blogger Tips
உயிர் காக்கும் செயற்கை இரத்தம் - சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சாதனை............!!

உலக நாடுகளை விட இன்று அதிக அளவில் சாலை விபத்துக்களை சந்திக்கும் நாடு இந்தியா,

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது, ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை போக்க சென்னை ஐ.ஐ.டி ஆய்வு வழி கண்டு பிடித்து, சென்னை ஐ.ஐ.டி, விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தனர், இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தேவையான நிதியை வழங்கியது. டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர்,

வெற்றியான ஆய்வை குறித்து டாக்டர் சோமா கூறும் போது: அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் . ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும்,

இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடியின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது. இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் எய்ட்ஸ் போன்ற நோய் கிருமிகள் தொற்று இல்லாததாகவும் இருக்கும்.

அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும். இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக உயிர் காக்கும் விதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்...
உலக நாடுகளை விட இன்று அதிக அளவில் சாலை விபத்துக்களை சந்திக்கும் நாடு இந்தியா,

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது, ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை போக்க சென்னை ..டி ஆய்வு வழி கண்டு பிடித்து, சென்னை ..டி, விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

மூன்றாண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தனர், இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தேவையான நிதியை வழங்கியது. டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியடைந்துள்ளனர்,

வெற்றியான ஆய்வை குறித்து டாக்டர் சோமா கூறும் போது: அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் . ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும்,

இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐஐடியின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது. இதுவரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் எய்ட்ஸ் போன்ற நோய் கிருமிகள் தொற்று இல்லாததாகவும் இருக்கும்.

அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும். இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக உயிர் காக்கும் விதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்...
 நன்றி இரத்த சேவை மையம் (Blood donors)