அன்னாச்சி பழம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:31 AM | Best Blogger Tips
http://www.dinakaran.com/Healthnew/H_image/ht1655.jpg
இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் , பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.


நன்றி Gnanayohi Yohi