கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி
நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.
அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த
சொல்லி இருகின்றனர்
பிரசவம் ஆனா பெண்களுக்கு பொதுவாக குழந்தை
பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக்
கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். குழந்தைக்கு பால்
கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும்
அதிகமாக உண்ண வேண்டும்.
அதனால் தான் குழந்தை பிறந்த பின்பு பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவார்கள்.
பால் அதகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு .எனவே தினந்தோறும்
இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால்
பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில்
சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
சுறா
போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை
பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி
செய்யும்.தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால்
வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல்
பூண்டுக்கு உண்டு.
இதனால்தான் பிள்ளை பெற்ற பெண்களுக்கு
தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு
போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ்
செய்கின்றனர்.பூண்டிற்கு இத்தகைய மருத்துவ குணம் இருப்பதால்
பிள்ளை பெற்ற பெண்கள் பூண்டினை ஏராளமாக உணவில் சேர்த்துக்
கொள்வது நல்லது.
வாயு தொல்லை இருப்பின் பாலுடன் பூண்டை நன்கு
வேக வைத்து நக்கு மசித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கிவிடும்.நீங்க
பூண்டை பயன் படுத்த தவங்களா இருந்தால் இன்றிலிருந்து பூண்டை பயன்படுத்துங்க
Via உலக தமிழ் மக்கள் இயக்கம்
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த சொல்லி இருகின்றனர்
பிரசவம் ஆனா பெண்களுக்கு பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக உண்ண வேண்டும்.
அதனால் தான் குழந்தை பிறந்த பின்பு பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவார்கள்.
பால் அதகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு .எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும்.தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.
இதனால்தான் பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர்.பூண்டிற்கு இத்தகைய மருத்துவ குணம் இருப்பதால் பிள்ளை பெற்ற பெண்கள் பூண்டினை ஏராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
வாயு தொல்லை இருப்பின் பாலுடன் பூண்டை நன்கு வேக வைத்து நக்கு மசித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கிவிடும்.நீங்க பூண்டை பயன் படுத்த தவங்களா இருந்தால் இன்றிலிருந்து பூண்டை பயன்படுத்துங்க