தாழ்த்தப்பட்ட
மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டங்கள்
பெரியார் நடத்தி
தாழ்த்தப்பட்ட
மக்களை
கோயிலுக்குள் அழைத்து சென்று உரிமை வாங்க கொடுத்தவர் பெரியார் என்ற பொய்
பித்தலாட்டங்களுக்கு இதோ ஆதாரம்!
# திராவிடம் வரலாற்று பொய்களும் தெரிந்து கொள்ளலாம்.
பசும்பொன் முத்து
ராமலிங்க தேவர் அவர்கள். நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்.
மதுரை மீனாட்சி
அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு
செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச
நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது.
ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர்.
சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின்
ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "என் சகோதரர்களான
தாழ்த்தப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சிக்கோயிலில்
ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள்
தருவார்கள். அன்னையை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை
அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த
ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர், அரிசனங்களை அழைத்து வரும்போது
அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த ரவுடிக்கும்பலை
சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம், தேவர் அவர்களின்
அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு
திரு கக்கன்ஜி, முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும் சேர்ந்து வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து இதற்கு முழுவதும் பொறுப்பு திரு வைத்தியநாத ஐயர். திரு கக்கன்ஜி ஐயா தேவரும் தான்.
இந்த வரலாற்று
வெற்றியை ஈவேராவுக்கு சூடப்பார்ப்பது ஏன்?
இந்த நிகழ்வில் ஈவேரா வெறும் மிச்சர் மாமா தான்.
# தமிழகம் மற்றும் கேரளா. கர்நாடகா.
ஆந்திரா பகுதியிலும்
தாழ்த்தப்பட்ட
மக்கள கோயிலுக்குள் அழைத்து சென்றதில் பெரியாரின் பங்கு சிறிது கூட இல்லை!
ஆங்கில அரசில்
இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் போக மறுப்பு சட்டத்தின் படி
தாழ்த்தப்பட்ட
மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி
கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும்
தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலை இருந்தது. அதை அறிந்த #இராஜாஜி, அன்றைய ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின்
அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச்
செய்தார்.
ஆதன்படி
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள்
முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது. அதற்குப் பிறகு
தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை
நிலைநாட்டப்பட்டது.
மதுரை
மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆடு ஜூலை 8-ஆம் நாள் திரு வைத்தியநாத
ஐயர் தலைமையில். திரு கக்கன்ஜி. எல்.என். கோபாலசாமி, முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர்.
பூவலிங்கம் முதலிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும், விருதுநகர் எஸ்.எஸ். சண்முக நாடார்
என்ற நாடார் பிரமுகரும் கோவிலில் நுழைந்து வழிபட்டனர். கக்கன்ஜி அரசியல் வாழ்வில்
இந்த நிகழ்ச்சி வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. கக்கன்ஜி மக்களிடையே
பிரபலமடைந்தார். இந்த கோவில் நுழைவுப் போராட்டத்தை இராஜாஜி ‘இரத்தம் சிந்தாப்
புரட்சி’ எனக் கூறி
வைத்தியநாத ஐயரையும், கக்கனையும் புகழ்ந்து பாராட்டினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தை அடுத்து, மதுரையிலுள்ள
கள்ளழகர், கூடல் அழகர்
கோவில்களும் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி முதலிய
இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமைப் போராட்டங்கள்
வெற்றிகரமாக நடைபெற்றன.
கோவில் நுழைவுச்
சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னும் கூட, கேரளாவின் மலபாரிலும், தமிழகத்திலும்
கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமை முழுதாக
வழங்கப்படவில்லை. ஆங்காங்கே சாதி ஆதிக்கம் கொண்டவர்களும் எதிர்ப்பாகச்
செயல்பட்டனர்.
அரிசன சேவாத்
தொண்டர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவின் மலபாருக்குச் சென்றனர். கக்கன் தலைமையில்
அரிசன சேவாத் தொண்டர்கள் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள பவண மீனாட்சி
கோவிலுக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டினர்.
இதில் ஈவேரா
பங்கு எங்கே...? !
# பெரியாரின் பங்கு எதுவுமே இல்லை!
இப்படியிருக்கே
வரலாற்றை எப்படி
எல்லாம் திரித்து பாடங்களாக மாற்றி யிருக்கிறார் திராவிட பொய்யர்கள்.