அந்தமான் கொடும்
சிறையில் சாவர்க்கர் இருந்த அறைக்குச் சென்றிருக்கிறார் கங்கணா ரணாவத்.
தொலைதூர
தீவுகளில் தான் அஞ்சுபவகளை விட்டுவிடுவது வெள்ளையன் பாணி. ஆஸ்திரேலியா எனும் நாடே
அப்படித்தான் உருவாயிற்று.
இன்றும்
அமெரிக்கா அல் கொய்தா கோஷ்டிகளை அடைத்திருக்கும் குவாண்டனமாவோ தீவு மகா மர்மமானது.
அங்கு நடக்கும் சித்திரவதைகளும் கொடூரங்களும் யாருக்கும் கேட்காதவை.
அப்படி வெள்ளையன்
இந்தியாவில் தன் கொடும் ஆட்சி நடத்தும்பொழுது அந்தமானிலும் சிறைகட்டி கைதிகளை
வதைத்து கொண்டிருந்தான், மிக குறுகலான அறை, ஓயாத வேலை, கடும் அடிதடி என அவனின் கொடூரங்கள்
கொஞ்சமல்ல.
கைதிக்கு
என்னாயிற்று என யாருக்கும் தெரியாது, கேட்கவும் முடியாது, நீதிமன்றங்களும் எதுவும் தலையிடாது.
சுருக்கமாகச்
சொன்னால் சாவதும் அங்கு செல்வதும் ஒன்றே, அவ்வளவு கொடூரங்கள்.
அந்தமான்
மரவெட்டும் தொழில் முதல் கடும் தொழில்களை செய்யும் அடிமைகளாகத்தான் அந்த சிறையில்
இந்திய சுதந்திரபோரட்ட கைதிகளை வைத்திருந்தான் வெள்ளையன். கொஞ்சம் வேலை
செய்துவிட்டு சாகட்டும் எனும் நல்லெண்ணம் அன்றி வேறேதும் அவனிடமில்லை.
இந்த குறுகலான
கொடும் சிறையில்தான் சாவார்க்கர் அடைக்கப்பட்டிருந்தார், அவர் சந்தித்த ரணங்களும் வாங்கிய அடி உதைகளும் கொஞ்சமல்ல.
எந்த கைதிக்கும்
நடக்காத சித்ரவதை அவருக்கு நடந்தது, மெல்ல கொல்லும் கொலைமுயற்சி அது.
அங்கே
சாவர்க்கரின் உடல்நலம் கெட்டது, இதனாலேதான் ரத்னகிரி சிறைக்கு தன்னை
மாற்றக் கோரினார், மெல்ல மீண்டு வந்தார், தேசம் சுதந்திரம் பெற்றபொழுது விடுதலையானார், நாயினும் கீழாக காங்கிரசால் நடத்தபட்டு அபலையாய் செத்தார்.
அவர் செய்த ஒரே
தவறு காந்தி தலைமையில் போராடாமல் ஆயுதவழி இன்னும் பல வழிகளில் மக்களை திரட்டியது.
இந்திய
சுதந்திரப் போராட்டம் எனும் காலத்தை படித்தால் வெள்ளையனை கடுமையாக
எதிர்த்தவர்களெல்லாம் மிக மிருகத்தனமாக சிதைக்கபட்டிருக்கின்றார்கள். வ.உ.சி போல, சாவர்க்கர் போல மிக கொடும் சித்திரவதையெல்லாம்
அனுபவித்திருக்கின்றார்கள்.
ஆனால் யாரெல்லாம்
அவன் மனம் குளிரும்படி வலிக்காமல்
போராட்டம் எனும் பெயரில் அவனுக்கு சவரி வீசினார்களோ அவர்களின் சிறைவாசமெல்லாம்
ராஜாக்கள் போல் இருந்திருக்கின்றது.
நேரு சிறை
இருந்தது அகமதுநகர் சுல்தானின் மாளிகையில், இதனிடையே அவர் சுவிட்சர்லாந்து
செல்ல அனுமதியெல்லாம் உண்டு, இது என்ன எழவு சிறைவாசம் இதில் என்ன
கஷ்டம் என்பது தெரியவில்லை.
இந்த உல்லாச
வாழ்வில் இருந்துதான் புத்தகமாக எழுதித் தள்ளினார் நேரு.
காந்தி எர்வாடா
எனும் மாளிகையில் நிஜாமின் அரவணைப்பில் சிறை இருந்தார், கடைசிவரை அவர் ஏன் இஸ்லாமிய பாசம் கொண்டிருந்தார் என்பது
விளங்கியிருக்கலாம்.
இன்றுள்ள
தலைமுறைக்கு கொடுக்கப்பட்ட மோசமான, இழிவான, கேவலமான திரிபு வரலாறு போல் உலகில் எங்கும் பார்த்திருக்க
முடியாது.
வெள்ளையனின்
அடிவருடிகள் உல்லாசமாளிகையில் இருப்பார்கள், அவர்கள் பின்னாளைய தேசதந்தைகள்
பெரும் தலைவர்கள்.
உண்மையாக
வெள்ளையனை எதிர்த்த சாவர்க்கர் அந்தமான் தனி சிறையில் இருப்பார், கடும் சித்திரவதைகளை அனுபவித்து சாவின் விளிம்புக்கு சென்றுவருவார், அவர் புறக்கணிக்கப்படுவார்.
வெள்ளையனும் அவன்
அடிவருடி காங்கிரசும் மறைத்த உண்மைகளையெல்லாம் அந்தமான் சிறை வெளிகொண்டுவந்து
கொண்டே இருக்கும், அது அந்த தர்மத்தின் சாட்சியாக
எல்லோருக்கும் வரலாற்றை கற்று கொடுத்து கொண்டே இருக்கும்.
மோசடி வரலாறும், திரிக்கப்பட்ட பாடங்களும் சொல்லாத வரலாற்றை, சோக சரித்திரத்தை மவுனமாக வங்கக்கடல் நடுவில் நின்று
சொல்லிகொண்டிருக்கிறது அந்த செல்லுலர் சிறை.
கீழே :
சாவர்க்கர்
இருந்த சிறையும், காந்தி இருந்த சிறையும்
நன்றி இணையம்