தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம் என்றால் அது மிகையாகாது. குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.
அம்மாவின் அன்பை கண்கூட பார்க்கும் நாம் தந்தையின் அன்பை அவரின் கண்டிப்பிலும், அக்கறையிலும் பார்க்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்திற்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை மட்டுமே...
அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காக, தங்கள் ஆயுள் முழுவதும் அர்ப்பணித்தவர்களில் தந்தைகளுக்கு முக்கிய இடம் உண்டு.
தந்தையர்களை பெருமைப்படுத்தும் ஒரு நாள் தான் சர்வதேச தந்தையர் தினம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தன்னை நம்பி வந்த மனைவிக்காகவும், உயிராக நேசிக்கும் குழந்தைக்காகவும் தந்தை செய்யும் தியாகங்கள் ஏராளம்
தந்தையின் அன்பு எப்போதும் ஓர் ரகசியமாகவே மறைந்துவிடுகிறது.
எவ்வளவு தான் கண்டிப்பை காட்டிலும், பிறரிடம் தன் குழந்தைகளை பற்றி எப்போதும் பெருமையாகவே பேசுவார்.
தான் படிக்காவிட்டாலும் நம் குழந்தைகள் நம்மை போல கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று கஷ்டங்களை இஷ்டமாக நினைத்து உழைப்பவர்கள் அப்பாக்கள் மட்டுமே.
குழந்தைகளுக்கு முதல் ஹீரோ எப்போதும் அப்பாதான்!! ......
குழந்தைகளுக்கு துன்பத்தில் நண்பனாகவும், அறிவுரை சொல்வதில் ஆசானாகவும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக இருப்பவர்கள் தந்தைகள்.
தன் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் தந்தைகளுக்கு, தந்தையர் தின நாளில் பரிசுகளையும், வாழ்த்துக்களையும் சொல்லி மகிழ்விப்போம
நீங்கள் உங்கள் தந்தைக்கு வாழ்த்து தெரிவியுங்கள். அவருடன் சிறிது நேரம் செலவளியுங்கள். அவரின் மனதிற்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள்
தாய் நம் உயிர் என்றால், தந்தை நம் உடல். இரண்டில் எது பிரிந்தாலும், நமக்கு வாழ்வில்லை என்பதை புரிந்துகொண்டு அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்
இனிய நாள் காலை வணக்கம்🙏🙏🙏
விடியல் பதிப்பகம் 😁😂