மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:45 PM | Best Blogger Tips

 

பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.