சுவாமி விவேகானந்தரும், மஹா கவி பாரதியும் !!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:30 | Best Blogger Tips
விவேகானந்தரை, பகவான் விவேகானந்தர் என்று பாரதி மட்டுமே கூறினார்.

 

 பாரதிக்கும் விவேகானந்தருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல. இருவருமே மிகப் பெரிய அறிஞர்கள். பல மொழிகள் தெரிந்தவர்கள். விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது, ஸ்பீக் இங்கிலீஷ் லைக் ஏ வெப்ஸ்டர் என்றும் வால்கிங் என்சைக்லோபீடியா என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கூறின.

இருவருமே பல்வேறு மொழிகளில் புலமை பெற்றவர்கள். இருவருமே இந்த நாட்டில் புரட்சிகளை செய்தவர்கள். இருவரும் பாரத அன்னையே தெய்வம் என்று கருதினார்கள்.

ஆங்கில வழிக்கல்வி மறுப்பு: இன்று எல்லோரும் ஆங்கில வழிக் கல்வியை நாடி ஓடுகிறார்கள் தமிழ்மொழியைப் படிப்பதில்லை. இந்தியர்களின் வரலாற்றைப் பற்றி அறிவதில்லை. அவ்வாறு அறியாவிட்டால் நாம் எவ்வாறு நம் மூதாதையர்களின் பெருமையை அறிந்துகொள்ள முடியும்?

மேலும் பாரதியார் தமது ஆங்கிலப் படிப்பு பற்றிக் கூறினார்: செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன. 100 வருடத்திற்கு முன்பே தந்தை ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. நமது பண்பாடு இக்கல்வியில் கற்றுத் தரப்படாததால் தீது பல்லாயிரம் சேர்ந்தது என்கிறார் பாரதி. சுவாமிஜி இதைத்தான், இன்றைய பள்ளிகளில் நம் பிள்ளைகளுக்கு என்ன கற்றுத் தருகிறார்கள்?

முதலாவது, உன் பாட்டனார் ஒரு பைத்தியக்காரன். அடுத்து, உன் ஆசிரியர்கள் எல்லாம் நயவஞ்சகர்கள், பிறகு, உங்களது சாஸ்திரங்கள் எல்லாம் பொய்க் குவியல்கள், இத்தகைய எதிர்மறைக்கல்வி, சாவைவிட மோசமானது என்றார்.

பிறரது துன்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்றார் சுவாமிஜி. எதற்காக? உலகில் இருக்கக்கூடிய ஒரே ஒரு கடவுளை வணங்குவதற்காக அக்கடவுள் யார்? உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களும் சேர்ந்த ஒட்டுமொத்தமான மனதகுலமே அக்கடவுள்.

சுவாமிஜி எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். உணவிற்குக்கூட வழியின்றித் தவித்தார். தான் மிகவும் கஷ்டப்படுவதாக ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சொன்னார்.

பாரதியார் வீட்டிலும் பட்டினி. என்றைக்கோ ஒரு நாள் அரிசி கிடைத்தது. அதைக் கொண்டு போய் குருவிகளுக்குப் போட்டுவிட்டு, காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினார் அவர்.

புதிய ஆத்திசூடியில் பாரதியார் எடுத்ததும் அச்சம் தவிர் என்றார், விவேகானந்தரும் அபீ: அபீ: பயமே எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணம் என்றார்.

சுவாமி விவேகானந்தரின் சீடரான மகாகவி பாரதியார். சுவாமி விவேகானந்தரும் 39 வருடம் 174 நாட்களில் மகாசமாதி அடைந்தார். இவர்கள் இருவரும் காட்டிய வழியில் இந்தியா சென்றால், நிச்சயம் ஒரு புதிய பாரதம் உருவாகும்.
  

Via FB தர்மத்தின் பாதையில்