சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 AM | Best Blogger Tips
சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்
========================

“பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்மானிப்பது பிறப்புதான், மதமாற்றம் அல்ல. ஆகவே மதம் மாறுகிற ஒருவர் தன் சமூக நிலையை இழந்துவிடுகிறார். முந்தைய மதத்தில் தனக்குக் கிடைத்த சாதி சார்ந்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளைப் புதிய மதத்தில் அவர் கோர முடியாது...”

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. சுப்பிரமணியன் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். நீதிமன்றம் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பட்டியல் சாதிகளையும் சேர்ந்தவர்கள் பிற மதங்களுக்கு மாறுகிறபோது, கல்வியிலும் அரசுப் பணியிலும் தங்களுக்குரிய இட ஒதுக்கீடு உரிமையைக் கோர முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

சாதி நிலை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது, மதமாற்றத்தால் அல்ல என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அப்படியானால் ஒருவர் எந்த மதத்திற்கு மாறினாலும், மதம் என்கிற இழவே வேண்டாம் என்று உதறினாலும், பிறப்பின் அடிப்படையிலான அவரது சாதி அடையாளம் மாறாது என்பதுதானே அர்த்தம்? அப்படியானால் அதற்குரிய சட்ட உரிமைகள் தொடரும் என்றுதானே அர்த்தம்?

“இந்து மதத்திலிருந்து, சாதியை அங்கீகரிக்காத கிறிஸ்துவத்திற்கோ வேறு மதத்திற்கோ ஒருவர் மாறுகிறபோது அவரது சாதி நிலை இழக்கப்படுவதாகவே பொருள்” என்று முன்பு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதாம். சென்னை உயர்நீதிமன்றமே கூட 1952ல் “மதம் மாறுகிறவர் எந்த சாதியையும் சேராதவராகிறார்” என்று தீர்ப்பளித்திருக்கிறதாம். நீதிபதி இந்த இரண்டு தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

. வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்துவ நாடார் குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்டவர். சென்ற ஆண்டில் தமிழக அரசின் 4ம் நிலை பணியிடங்களுக்கான தேர்வு எழுதிய அவர் தன் சாதி அடிப்படையிலான உரிமையைக் கோரியபோது, மதம் மாறிவிட்டதால் அந்தச் சலுகை இல்லை என்று கலந்தாய்வின்போது சொல்லப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில்தான் நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார்!“பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்மானிப்பது பிறப்புதான், மதமாற்றம் அல்ல. ஆகவே மதம் மாறுகிற ஒருவர் தன் சமூக நிலையை இழந்துவிடுகிறார். முந்தைய மதத்தில் தனக்குக் கிடைத்த சாதி சார்ந்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளைப் புதிய மதத்தில் அவர் கோர முடியாது...”

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. சுப்பிரமணியன் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். நீதிமன்றம் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பட்டியல் சாதிகளையும் சேர்ந்தவர்கள் பிற மதங்களுக்கு மாறுகிறபோது, கல்வியிலும் அரசுப் பணியிலும் தங்களுக்குரிய இட ஒதுக்கீடு உரிமையைக் கோர முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

சாதி நிலை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது, மதமாற்றத்தால் அல்ல என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அப்படியானால் ஒருவர் எந்த மதத்திற்கு மாறினாலும், மதம் என்கிற இழவே வேண்டாம் என்று உதறினாலும், பிறப்பின் அடிப்படையிலான அவரது சாதி அடையாளம் மாறாது என்பதுதானே அர்த்தம்? அப்படியானால் அதற்குரிய சட்ட உரிமைகள் தொடரும் என்றுதானே அர்த்தம்?

“இந்து மதத்திலிருந்து, சாதியை அங்கீகரிக்காத கிறிஸ்துவத்திற்கோ வேறு மதத்திற்கோ ஒருவர் மாறுகிறபோது அவரது சாதி நிலை இழக்கப்படுவதாகவே பொருள்” என்று முன்பு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதாம். சென்னை உயர்நீதிமன்றமே கூட 1952ல் “மதம் மாறுகிறவர் எந்த சாதியையும் சேராதவராகிறார்” என்று தீர்ப்பளித்திருக்கிறதாம். நீதிபதி இந்த இரண்டு தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

. வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்துவ நாடார் குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்டவர். சென்ற ஆண்டில் தமிழக அரசின் 4ம் நிலை பணியிடங்களுக்கான தேர்வு எழுதிய அவர் தன் சாதி அடிப்படையிலான உரிமையைக் கோரியபோது, மதம் மாறிவிட்டதால் அந்தச் சலுகை இல்லை என்று கலந்தாய்வின்போது சொல்லப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில்தான் நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார்!