பாஸ்வேர்ட் பத்திரம்... Make it Strong...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:36 | Best Blogger Tips

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் ஹேக் பண்ணுவது எளிது என்று புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களில் Abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு? உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக உள்ளதா? கீழே உள்ள பட்டியலை வைத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

6 எழுத்துக்கள்: சிறிய எழுத்துக்கள் (Lower Case) : ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும். சிறிய எழுத்து + பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம் + எண்கள் மற்றும் குறியீடுகள் என்றால் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம் + பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள் + எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள் + பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள் + எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள் + பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள் + எண்கள், குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

உங்கள் பாஸ்வேர்டை பலஹீனமாக இருந்தால் பலப்படுத்துங்கள்....

http://tamil.gizbot.com/how-to-2/how-is-your-password-hacked-by-hackers-005418.html
 
 
பெ கருணாகரன் & Via FB Aatika Ashreen