கரும்புச்சாறு பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:00 PM | Best Blogger Tips
கரும்புச்சாறு பற்றிய தகவல்.

தித்திக்கும் கரும்பு தெருவெங்கும் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கிறது.நா ஊற வைக்கும் கரும்பையும்,கரும்புச்சாறையும் இப்பருவத்தில் சுவைத்து அதன் முழு பயனையும் அடைய வேண்டும்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பருகும் கரும்புச்சாறு சக்தி நிறைந்த[Energy drink], ஒரு சிறந்த ஆரோக்கியமான,ஊட்டச்சத்து நிரம்பிய பானம்,[Health drink].கரும்புச்சாறு எந்தளவுக்கு சக்தி கொடுக்கிறதோ அந்தளவுக்கு கலோ...
ரியையும் கொடுக்கும் என நினைப்பது தவறு.100 மிலி கரும்புச்சாறிலிருந்து 36 கலோரி தான் கிடைக்கிறது.இது பிற குளிர்பானங்கள்,மற்றும் பழச்சாறிலிருந்து கிடைக்கும் கலோரிகளைவிட குறைவு தான்.இது ஒரு லோ கலோரி பானம்[low calorie drink].அதனால் இதனை யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் பருகலாம்.சக்க்கரை நோயாளிகள் கூட எவ்வித டென்சனும் இல்லாமல் பருகலாம்.ஏனெனில் இதில் உள்ள சர்க்கரையின் வடிவமைப்பு சாதாரணமானது.

மருத்துவ குணங்கள்:

*கரும்புச்சாறில் நம் உடம்பிற்கு தேவையான பலவிதமான vitamins,minerals அதிகளவில் இருக்கிறது.

*பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.[dental health].

*சிறுநீரகத்தின் சீரிய பயன்பாட்டுக்கு நல்லது.[beneficial for the functioning of the kidneys].

*செரிமான சக்தியை தூண்டக்கூடியது.

*உடம்பில் தண்ணீர் சத்தை தக்கவைக்கிறது[prevents dehydration].

*இருமல்,ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

*இதில் இருக்கும் காரத்தன்மை[basicity]மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்[antioxidants] மார்பக புற்று நோய்[breast cancer],prostrate cancer-ரை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

*மஞ்சல்காமாலையின் பொழுது கரும்புச்சாறு பருகினால் ஈரலுக்கு நல்லது.[strengthens liver during jaundice].

*கரும்புச்சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு,தேங்காய்த்தண்ணீர் கலந்து பருகினால் வயிற்றெரிச்சலுக்கு [acidity related problems] சிறந்த மருந்து.
See More