உடல் ஃபிட்னெஸ் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:09 | Best Blogger Tips
உடல் ஃபிட்னெஸ் பற்றிய தகவல்.

உங்கள் உடல் தகுதி, அதாவது ஃபிட்னெஸ் லெவல் (Fitness Level) எப்படி உள்ளது? என்பதை அறிய கீழ் வரும் கேள்விகளுக்கு நீங்களாகவே உண்மையான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

அ, ஆ, இ, இந்த மூன்று பதில்களில் நீங்கள் கிளிக் செய்வதைப் பொறுத்து 'அ' என்ற பதிலுக்கு 2 மதிப்பெண்கள் கொடுங்கள், 'ஆ' -விற்கு 5 மதிப்பெண்கள் கொடுங்கள், 'சி'-யிற்கு 10 மதிப்பெண்கள் கொடுங்கள். பிறகு என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

முதலி...
ல் கேள்வி-பதில்கள் இதோ:

1. 6 மாடிக் கட்டிடத்தை படிகளில் ஏறுவீர்களா?

அ) ஒரு சொட்டு வேர்வை கூட வராமல் ஏறுவேன்.
ஆ) ஏறுவேன் ஆனால் தஸ் புஸ் என்று மூச்சுத் திணறியபடியே ஏறுவேன்.
இ)ஏறுவேன் ஆனால் இடையிடையே சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன்.

2. உடற்பயிற்சி செய்யும் போது அதாவது ஜிம்மில் சென்று செய்யும்போது அல்லது வெயிட் லிப்டிங் செய்து முடிக்கும்போது உடலில் கடும் வலி ஏற்படுகிறதா?

அ) ஒரிரண்டு நாட்களுக்கு வலி இருக்கும்.
ஆ)சில நாட்களுக்கு வலி, உடல் ஊறு இருந்துகொண்டேயிருக்கும்.
இ)வெளியே சென்று பயிற்சி செய்வது கடும் பயிற்சி செய்வது என்னுடைய தசைகளை ஒருவாரத்திற்கு செயலிழக்கச்செய்யும்.

3. இரண்டு அல்லது 3 கிமீ தூரம் இடைவெளியின்றி நிறுத்தாமல் ஜாகிங் செய்வீர்களா?

அ) எந்த வித கடினமும் இல்லாமல்.
ஆ) வேண்டுமானால் முயன்று பார்க்கலாம், ஆனால் உறுதியாக கூறமுடியாது.
இ) சத்க்டியமாக முடியவே முடியாது.\

4. உங்கள் முழங்காலை மடக்காமல் உங்கள் கால் கட்டை விரலைத் தொட முடியுமா?

அ) சுலபமாக.
ஆ)முயற்சி செய்து பார்க்கிறேன்.
இ) முன்பு தொடமுடிந்தது, இப்போது முடியவில்லை.

5. மருத்துவரை எவ்வளவு முறை பார்க்கிறீர்கள்?

அ) ரெகுலர் செக்-அப்பிற்காக ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பேன்.
ஆ) உடம்பு சரியில்லாத போது மட்டும் பார்ப்பேன்.
இ) சிலவாரங்களுக்கு ஒரு முறையாவது பார்க்க நேரிடும்.

6. 100மீ தூரத்தை 15 வினாடிகளுக்குள் ஓடி முடிப்பீர்களா?

அ) ஆமாம்
ஆ) ஓட முடியலாம்.
இ) அதெல்லாம் முடியாது, நான் என்ன பைத்தியமா?

7. மராத்தான் போட்டி நடைபெறுகிறது என்றால் நீங்கள் எப்படி அதற்கு தயாராவீர்கள்?

அ) டிரெய்னிங் பயிற்சிகள் எடுத்துக் கொண்டு தயாராகச் செல்வேன்.
ஆ) சில வாரங்கள் கொடுத்தால் உடல்தகுதி பெற்று வேகத்திற்கு ஈடு கொடுப்பேன்.
இ) என்ன பாஸ்! விளையாடுறீங்களா?

8. ஓடும்போதோ, பயிற்சி செய்யும்போதோ அப்பாடா போதும்டா சாமி என்று உட்காராத அளவுக்கு உங்கள் இருதயம் எவ்வளவு நிமிடம் தாங்கும்?

அ) 20 நிமிடங்களுக்கு மேல் தாங்கும்.
ஆ) 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை தாங்கும்.
இ) 5 நிமிடத்திற்கும் குறைவே.

9. தற்போது எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை பயிற்சி செய்கிறீர்கள்?

அ) வாரத்தில் 3 தடவைகளுக்கு மேல்.
ஆ) வாரத்திற்க் ஒரு முறை அல்லது இருமுறை.
இ) நேரமே இருக்கறதில்லை பாஸ்!

இந்த 9 கேள்விகளுக்கும் பதில் கொடுத்து அதன்ற்கான மதிப்பெண்களை நீங்களே கொடுத்துக் கூட்டிப்பார்த்து எவ்வளவு வருகிறது என்று பாருங்கள்.

38 மதிப்பெண்கள் முதல் 55 மதிப்பெண்கள் வரை எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் முழு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள். நீங்கள் செய்வது, உங்கள் உணவுப்பழக்கம் எல்லாம் சரியே நீங்கள் இதுவரை செய்து வந்ததை அப்படியே தொடரலாம்.

56 மதிப்பெண்கள் முதல் 100 மதிப்பெண்கள் வரை எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் தினமும் சவரம் செய்வது போல் பயிற்சி செய்யவேண்டிய தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 3 முறை பயிற்சி செய்வது தேவை ஆனாலும் இது கட்டாயம் இல்லை. இருந்தாலும் இதில் நீங்கள் அலடியம் காட்டினால் உடல் எடை, சதை போடுதல் வெகு விரைவில் நிகழும் வாய்ப்புள்ளது.

101 முதல் 140 மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா, உங்களுக்காகத்தான் உடல் எடைக்குறைப்பு ஜிம்களும், 'குண்டாக இருக்கிறீர்களா எங்களிடம் வாருங்கள் அப்படியே 20 கிலோ குறைக்கிறோம் ரக விளம்பரங்கள் உங்களைப்போன்றவர்களுக்காகவே உருவாகியுள்ளது என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது உங்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அலட்சியம் காட்டி வருகிறீர்கள் என்று பொருள். ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை. பயிற்சியை ஒரு தினசரி நடைமுறையாக்கினால் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் பாதைக்குத் திரும்ப முடியும்.
See More