சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:11 PM | Best Blogger Tips
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் பற்றிய தகவல்.


* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்...
கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது நல்லது.

பல்வேறு காரணங்களினால் சிறுநீரகங்களில் பிரச்னைகள் தோன்றலாம், அது வேலைநிறுத்தம் வரை சென்றுவிடலாம் என்றாலும் முக்கியக் காரணம் உயர்ரத்த அழுத்தமாக இருக்கும்.
See More