வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவில்....!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 PM | Best Blogger Tips

The last Somawara ceremony at Karthikai in the public audiyaar temple at  Barakalakottai | பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி  சோமவார விழா

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவில்.

பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும்.  
பொங்கலுக்கு பகலில் திறக்கப்படும்; திங்கட்கிழமை இரவில் திறக்கப்படும்;  பரக்கலகோட்டை பொது ஆவுடையார் அதிசயம்! | parakkalakottai koil - hindutamil.in
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளால மரத்தில் அருள் பாலித்து வருகிறார்.
pothuavudayar kovil fest | பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவார திருவிழா  ஆடு, கோழி, நவதானியங்களை காணிக்கையாக வழங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கோவிலின் வரலாறு :  
வாங்கோபர்  மகரகோபர் என்ற முனிவர்களுக்கு இல்லறம் சிறந்ததா  துறவறம் சிறந்ததா என்ற சந்தேகம் எழுந்தது.  தங்களுக்கு பதில் சொல்லும்படி இருவரும் சிதம்பரம் நடராஜரிடம் வேண்டினர்.  அவர்களை பரக்கலக்கோட்டைக்கு சென்று காத்திருக்கும்படியும் அங்கு வந்து அவர்களது சந்தேகத்திற்கு பதிலளிப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி இத்தலம் வந்த அந்த இரு முனிவர்களும் ஒரு புளியமரத்தின் கீழ் அமர்ந்தனர்.  ஒரு கார்த்திகை சோமவாரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்தபிறகு நடராஜர் அவர்களுக்கு காட்சியளித்தார். ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக இல்லறமோ துறவறமோ அது நல்லறமாக இருந்தால் சிறப்பு. என்று பதிலளித்து அந்த மரத்திற்குள் ஐக்கியமானார்.  நடு நிலையான பதில் சொன்ன சிவன் என்ற காரணத்தால் இவருக்கு பொது ஆவுடையார் என்றும் மத்தியபுரீஸ்வரர் என்றும் பெயர் சூட்டப்பட்டது.
Sakthi Vikatan - 29 January 2010 - பொங்கலன்று மட்டுமே நடை திறக்கும் பொது  ஆவுடையார் கோயில்! | - VikatanSakthi Vikatan - 29 January 2010 - பொங்கலன்று மட்டுமே நடை திறக்கும் பொது  ஆவுடையார் கோயில்! | - Vikatan
முனிவர்கள் ஈசனிடம் இங்குள்ள பக்தர்களுக்கு தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிவபெருமானும் அங்குள்ள வெள்ளால மரத்திலே ஐக்கியமானார்.

கோவிலில் சிறப்பு :  இங்குள்ள வெள்ளால மரத்தின் இலை பிரசாதமாக பத்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இலைகளை பறித்துச் சென்று பூஜை அறை மற்றும் பண பெட்டிகளில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள ஆலமரத்திற்கு தொட்டில் கட்டி வழிபட்டால் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

DD EPI 1000 ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் - YouTube

முனிவர்களுக்கு சிவபெருமான் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று காட்சியளித்ததால் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதுவும் சிதம்பரத்தில் அர்த்த சாம பூஜை நடந்து முடிந்ததும் இரவு 10 மணிக்கு மேல் இங்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.

இக்கோவில் திறக்கப்பட்ட பின் மரத்தின் பகுதியை வெண்ணிற துணியால் மறைத்து முன்பக்கம் சிவலிங்கமாக அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்த முடித்த பின்பு சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்தப்படுகிறது. 

ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா

தைப்பொங்கல் அன்று மட்டும் அதிகாலை முதல் மாலை 7 மணி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இறைவனின் மேனியில்  சூரிய ஒளி படுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

இது தவிர சிவராத்திரி, திருக்கார்த்திகை, அண்ணா அபிஷேகம் போன்ற எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை.

இங்கு நடை அடைத்திருக்கும் போது அங்குள்ள கதவுக்கு பூஜை நடத்தப்படுகிறது பக்தர்கள் கதவையே சிவனாக பாவித்து மாலை சாத்தி தரிசித்து செல்கிறார்கள்.

எனவே ஒருமுறை திங்கள் அன்று பொது ஆவுடையார் கோவிலுக்கு வந்து தரிசித்து ஈசனின் அருளை பெற்று செல்லுங்கள். 

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹