சுவாசம்..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:37 | Best Blogger Tips
Image may contain: 1 person, sky and outdoor

சுவாசத்தை ஒழுங்குபடுத்தி,பச்சை குழந்தை மாதிரி மென்மையாகவும் நெகிழ்வாகவும் உன்னால் ஆக முடியுமா??
- "தாவோ தே ஜிங்"ல்-லாவோட்சு

லாவோட்சு கேட்கிற இந்தக் கேள்வியானது ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது...

மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருப்பதற்கும் சுவாசத்திற்கும் சம்மந்தமுண்டா??

நிச்சயம் சம்மந்தமுண்டு..

மனதின் போக்கை காட்டக் கூடிய கண்ணாடி தான் சுவாசம்..
நீங்கள் அதிகமான கோபத்திலுள்ள போது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்..

தாறுமாறாய் இயங்கும் அதோடு வெளிவறும் சுவாசத்தின் அங்குலம் அதிகரிக்கும்..

அதேவேளையில்..

பெருங்கொண்டாட்டத்தில் துள்ளிக் குதிக்கக் கூடிய நிகழ்வொன்றினில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள் கிட்டதட்ட இதே போன்று சுவாசத்தின் அங்குலம் அதிகரித்துக் காணப்படும்..

ஆனால்...

சோகமின்றி அதேநேரம் பெருங்கொண்டாட்டுமுமின்றி இரண்டிற்கும் மத்திமமான ஓர் ஆழ்ந்த அமைதி நிலை அனுபவத்தில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்..

சீராகவும் வேகமான இயக்கமின்றி மென்மையாக நாசிவழி போவதும் வருவதுமாகவும் இருக்கும்..

இந்நிலையில் மனதிலும் ஆழ்ந்த அமைதி உண்டாகும்..

உடலின் எடைகூட ஒரு சுமையாய் தெரியாது...

எண்ணச் சந்தையில் நெரிசல் குறைந்திருக்கும்..

நம்முடைய செயல்பாடுகளும் மென்மையானதாய் இருக்கும்..

நடை கூட வேகமாய் இராது..

வார்த்தை உச்சரிப்பைக் கூட மனம் விரும்பாது..

பூக்களையும்,மரங்களையும் ரசித்தபடியே விழிகள் உலாவும்...

வானங்களும்,மேகங்களும் கண்களுக்கு விருந்தாகும்..

எதிர்வருவோரிடம் எல்லாம் எம்பெருமான் காட்சியளிப்பான்..

துள்ளிக்குதிக்க விரும்பாத அதேவேளையில் பேரானந்தத்துடன் அலைகள் அடங்கிய கடல் போல் மனம் அமைதியுறும்.

சுவாசத்தை கருவியாய் கொண்டுள்ள எல்லா யோக மார்க்கங்களின் இலட்சியமும் இதுவே.

ஏனெனில்,சுவாசம் மனதின் கடிவாளம்.

கடிவாளம் கைக்குள் அடங்க அடங்க மனமெனம் குதிரையின் ஓட்டம் நெறிப்படும்.

நெறிப்பட்ட மனம் நெகிழ்வினை அடையும் மென்மையில் திளைக்கும் சதா ஆனந்தத்தில் திளைக்கும் பச்சைக் குழந்தை மாதிரி.

 நன்றி 

Kiruba Haran 

இணையம்