ஹிந்தியை திணிக்காதே என்பதுதான்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:15 | Best Blogger Tips

Image may contain: 1 person, meme, text and outdoor

ஏறத்தாழ 55 ஆண்டுகளாக தமிழர்களிடையே விதைக்கப்படுகிற #என்றும்_மாறாத_ஒரே_வசனம் திணிக்கதே திணிக்காதே ஹிந்தியை திணிக்காதே என்பதுதான்...

அன்று முதல் இன்று வரை இந்த வசனத்தை முழங்கச் சொன்னவர்கள் மிகப்பெரிய அரசியல் லாபம் பெற்று அதன் வாயிலாக மிகப்பெரிய பதவிகளையும் அடைந்தது தங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இந்தி படிக்கவும் வைத்த உள்ளார்கள்..

ஆனால்

முழங்கி முழங்கியே படிக்காமல் போனவன்கள் குடும்பங்கள் 
குண்டு சட்டிக் குதிரையென....எச்சில் இலையென.... 

வாழ்வதையும் கண்கூடாக காண்கிறோம்...

மக்களே விழிப்படையுங்கள்...

Narendran p s. என்பவரது பதிவிது:-
-------------------------------------------------------------
அடிப்படையில் நானொரு நேர்மறை எண்ணம் (optimistic) கொண்டவன். எந்தவொரு எதிர்மறை எண்ணமும் (pessimistic) அதனடிப்படையில் எழும் எத்தகைதொரு மோசமான சூழலும் மெல்ல, மெல்ல காலப்போக்கில் வழுவிழந்து அழியும் என்பதில் எனக்கு நீண்டகால நம்பிக்கை உண்டு. தமிழ்நாட்டில் இன்றைக்கு நிகழுவதனைக் காண்கையில் அந்த நம்பிக்கை தவறானதோ என்கிறதொரு எதிர்மறை எண்ணம் எனக்குள் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அவநம்பிக்கையும், கசப்பும் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

மீண்டும் தி.மு.., காங்கிரஸ், கம்யூனிஸ கட்சிகள் பெறும் தேர்தல் வெற்றிகளும், சாதாரண தமிழர்களிடையே நிலவும் அறியாமையும், தங்களின் இந்தத் தாழ்வு நிலைக்குக் காரணம் என்னவென்றே அறியாத அல்லது அறிய முயற்சிக்காமல் தரங்கெட்ட சினிமாக்களிலும், டாஸ்மாக்கிலும், ஃபேஸ்புக்கிலும் வெட்டிக்கதைகள் பேசித் திரியும் தமிழர்களைக் காணுகையில் வருத்தமே மேலோங்குகிறது.
அயோக்கியர்களால் நடத்தப்படும் சுயநல ஊடகங்கள் தமிழர்களை, அவர்களின் எண்ணங்களை தாங்கள் நினைத்தபடிக்கெல்லாம் திசை திருப்புவதில் பெருவெற்றி கண்டிருக்கிறார்கள். இன்றைய தமிழன் ஆட்டு மந்தையைப் போன்றவனாக, சுயமாக சிந்திக்கும் அறிவற்றவனாக, அடுத்தவன் சொல்வதை சீர்தூக்கிப் பார்க்கும் தெளிவில்லாதவனாக இருக்கிறான்.

பொதுவில் தமிழர்களின் சிந்தனை அத்தனையையும் சினிமாவே ஆக்கிரமித்திருக்கிறது. அவன் பேசுவதும், எழுதுவதும், சிந்திப்பதும் சினிமா, சினிமா, சினிமாதான். சுயமாகச் சிந்தித்து ஒரு மீம்ஸோ அல்லது ஃபேஸ்புக் போஸ்ட்டோ எழுதத் திராணியற்றவனாக அங்கும் எவனோ எழுதிய சினிமா வசனங்களைத் தனது கருத்தாக எழுதிக் குவிக்கிற தமிழனை நினைக்கையில் உண்மையிலேயே அவமானமாக இருக்கிறது.

உலகிலேயே இந்த அளவிற்கு சுய சிந்தனையற்றதொரு ஆட்டுமந்தைக் கூட்டம் இன்றைக்கு எங்குமில்லை. அந்த அளவிற்கு அவர்களின் அறிவு மழுங்கிப் போயிருக்கிறது. அது அமெரிக்கா வாழ் தமிழனாக இருந்தாலும் சரி, அய்யம்பேட்டை தமிழனாக இருந்தாலும் சரி. எங்கு நோக்கினும் மழுங்கிய சிந்தனையுடைய தமிழனின் அறிவு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது தமிழர்களிடையே ஒழிந்து போய்விட்ட அடிப்படை நேர்மை. ஒருவன் நேர்மையானவனாக, உண்மையானவனாக இருப்பது சாத்தியமே இல்லாததொரு விஷயம் என்பது நான் சந்திக்கிற தமிழர்களின் உறுதியான முடிவு. ஐம்பது ஆண்டுகால அயோக்கியர்களின் ஆட்சியால் விளைந்த எண்ணம் அது.

எனவே அத்தனைபேர்களும் அந்தக் கண்ணாடி வழியாகவே பார்க்கப்படுகிறார்கள். எனவே இன்றைய தமிழனின் சிந்தனையில் எவனுமே நல்லவனல்ல. அதாகப்பட்டது அவனது பிரிய சினிமா ஹீரோவைத் தவிர்த்து அத்தனைபேர்களும் அயோக்கியப்பயல்கள். அவனுக்குப் பிரியப்பட்ட சினிமா ஹீரோ மட்டுமே உலகில் சிறந்த நேர்மையாளன். அவனே அவனை ஆளப்பிறந்தவன்.

சினிமாப் பைத்தியத்தியமான, கால்காசுக்குப் பெறாத அரைவேக்காட்டு முட்டாள் சினிமா ஹீரோக்களை தனது ஆதர்சமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடும்படித்ததமிழனைப் பார்த்து உலகமே சிரிக்கிறது என்கிற உணர்வு கூட அவனிடையே இருப்பதில்லை. “எஞ்சினியரிங்படித்து அமெரிக்காவுக்கோ அல்லது ஆப்பிரிக்காவிற்கோ போய் கை நிறைய காசு சம்பாதிப்பதால் மட்டுமே ஒருத்தன் அறிவாளியாக முடியாது என்கிற அடிப்படை அறிவு கூட அற்றவன் தமிழன்.

வேலை செய்கிற இடத்தில் வெட்டி விவாதங்களிலும், இந்திய தேசத்திற்கு எதிரான மனப்பான்மை காரணமாகவும், விடுதலைப் புலிகள் போன்ற கொலைகார இயக்கங்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்துப் பேசுவதாலும், சினிமாக் கதைகளைத் தாண்டி அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தெரியாமல், இந்திய தேசத்தின் மேன்மை புரியாமல் அதனை எதிர்ப்பதாலும் வெறுக்கப்படுகிறதொரு ஜந்துவாகத் தான் மாறியிருப்பதனைபடித்ததமிழனே உணர்வதில்லை என்கையில்படிக்காத”, சன் டி.வி. பார்த்து உலகவிஷயம் அறிந்ததாகத் தன்னை நினைத்துக் கொள்கிற சாதாரண தமிழன் எப்படி உணர்வான்? ஐயகோ!

இன்றைக்குஹிந்திஎதிர்ப்பினைக் கையிலெடுத்திருக்கும் தமிழக இளைஞனுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். “தயவுசெய்து இந்தவலையில் விழுந்து உன் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதேஎன்பதுதான் அது. என் தலைமுறைக்காரர்கள் ஹிந்தி படிக்காமல், தமிழ்நாட்டை வெளியே போகமுடியாமல், படிப்பிற்கேற்ற சரியான வேலை கிடைக்காமல் அமிழ்ந்து அழிந்தார்கள். “களவும் கற்று மறஎன நமக்குச் சொல்லித் தந்தவர்கள் நமது முன்னோர்கள். ஹிந்தி என்பது வெறும் மொழி மட்டும்தான். இதனால் தமிழ் அழிந்துவிடும் என்று சொல்கிறவன் அயோக்கியன். அதனை நம்புகிறவன் அவனைவிடவும் கேடுகெட்ட மூடன்.

ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், கேரளத்திலும் ஹிந்தி படிக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களின் மொழி அழிந்தா விட்டது? மாறாக தமிழ்நாட்டில் தமிழ் இன்றைக்கு அழிந்தல்லவா போய்விட்டது? குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களாலேயே கூட ஒரு வரியைத் தவறில்லாமல் எழுத முடியவில்லை என்பதுதான் பரிதாபம். அவனிடம் படிக்கிறவன் எந்த நிலையில் படிப்பான் எனச் சொல்ல வேண்டியதில்லை.

நான் ஹிந்தி படிக்கச் சொல்வதனை நீங்கள் ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஹிந்தி தெரிந்தவன் தெற்காசியாவிலிருந்து, வளைகுடா நாடுகளிலும் எங்கு வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்வான்

வேலைவாய்ப்புகள் இந்தியா முழுமையும் உங்களுக்குத் திறந்து கிடக்கிறது. அதற்கான சாவி ஹிந்தி பேச, எழுத தெரிந்து கொள்வதுதான். படிக்க விருப்பமில்லாதவர்கள் தமிழகத்திலேயே முடங்கிக் கிடக்கலாம். அது அவரவர்களின் விருப்பம்.

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை ஆந்திரர்களும், கேரளத்தவர்களும், கர்நாடக மாநிலத்தவர்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நீங்கள் உணர வேண்டும்.

ஹிந்தி தெரியாமல் நான் பட்ட துன்பங்களை நீங்களும் அடையாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தலைமுறையில் எத்தனையோபேர்கள் இந்தத் துன்பத்தை அனுபவித்தார்கள். ஹிந்தி தெரியாத தமிழர்கள் ஒரு தனித் தீவைப் போல பிற இந்தியர்களுடன் கலந்து பழக இயலாமல் தவிப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த நிலைமை உங்களுக்கு வேண்டாம். இந்தியாவில் பெரும் பொருளாதார மாற்றங்கள் வரவிருக்கின்றன. பெரும் தொழிற்சாலைகள் இந்தியாவெங்கும் இன்னும் சில ஆண்டுகளில் துவங்கவிருக்கின்றன. எனவே உங்களுக்கான வாய்ப்பை நீங்கள் தவறவிடாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

வேலை வாய்ப்பிற்காக ஃப்ரெஞ்சும், ஜெர்மனும் இன்னபிற மொழிகளும் படிக்க நாம் தயங்குவதில்லையே. எதற்காக அடுத்தவன் பேச்சைக் கேட்டு நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும் எனச் சிந்திக்குபடி உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.

சினிமாவைத் தாண்டியும் சிறிது சிந்தியுங்கள். உங்களின் எதிர்கால நலனுக்காக இதனைச் சொல்கிறேன். கேட்பவர்கள் கேளுங்கள். கேட்காதவர்களைக் குறித்து எனக்கென்ன கவலை?
Image may contain: 1 person, close-up
Thanks to FB Siva Paramasivam