போகிற போக்கை பார்த்தால்... அமெரிக்க தேர்தலில் நின்றால் கூட..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:55 PM | Best Blogger Tips


போகிற போக்கை பார்த்தால்...

அமெரிக்க தேர்தலில் நின்றால் கூட...

மோடி அபாரமாக வெற்றி பெறுவாரோ?

மன்மோகன்சிங் இருந்த பிரதமர் பதவியில் தான் மோடிஜியும் இருக்கிறார். அவர் எப்படி? இவர் எப்படி? நம் இந்திய தேசத்தினை தலைநிமிர செய்த தலைவன் யார்?

70 வருட சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில்... பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவு என்கிற இடியாப்ப சிக்கலை... தடைகளை உடைத்து..

இடர்களை நீக்கி.. பிரமிக்கத்தக்க சாமர்த்தியதுடன்...
மிக சிறப்பான ...கவுரவமான உயர்ந்த இடத்திற்கு நகர்த்தி சென்ற இந்திய பிரதமர் என்கிற பெருமை சந்தேகமில்லாமல் மோடிக்கு தான் உண்டு.

அதனாலேயே உலக நாடுகளின் அனைத்து தலைவர்களாலும் .. முக்கிய உலக தலைவராக பார்க்கப் படுகிறார்.

பெரும் கல்விப்பின்னணியும், குடும்ப பின்னணியும், பொருளாதார பின்னணியும் கொண்ட பல அரசியல் ஜாம்பவான்களாலும் எத்தனை முயற்சித்தும் எட்ட முடியாத சாதனை இது !!

அமெரிக்க அதிபரை கொண்டு வந்து அமரவைத்து..அவரைக் கொண்டே சில குறிப்பிட்ட வார்த்தைகளை பேச வைத்து..Democrats & Republicans இரண்டு பக்கமிருந்தும் செனட்டர்களை கலந்து கொள்ள வைத்து... 

அதன்பின்னர்..காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்ததை பற்றி பேசி...என்று awesome diplomacy !!

இத்தனைக்கும் பின்னணியில் இருக்கிற பலரின் கடும் உழைப்பும், திட்டமிடுதலும்..
பிரமிப்பு.

#HowdyModi #Houston
Banu gomes