டைரி_குறிப்பு_இருபத்தி_மூன்று_செப்டம்பர்
மோடியும்_அமெரிக்க_ஜனாதிபதியும்
ஒரு சாதரண மனிதர் இன்று பரிபூரணராக, அதுவும் நேற்று அவர் ஹூஸ்டனின் கலக்கிய கலக்கல்.
அமெரிக்கா உலகில் பெரும் ஆளுமை செய்யும் ஒரு நாடு. அதன் ஜனாதிபதிகள் எல்லாருமே சற்று தலைக்கனம் கொண்டவர்கள் தான். நான் இப்படித் தான் செய்வேன் என்று தன் பாணியை உலகுக்குச் சொல்லி, பலரை அவர்களின் வசதிக்கேற்ப வடிவமைத்தவர்கள்.
பண பலம் படை பலம் என்று பல பலம் கொண்ட அவர்கள் மற்ற அனைவரையும் ஒரு பழமாகவே நினைத்த காலம் உண்டு.
எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து, எளிமையான வாழ்க்கையில் முன்னேறி இன்று உலகமே வியக்கும் அளவுக்கு நமது பிரதமர் மிகப்பெரிய அளவுக்கு பிரபலமான நிலை.
நேற்றைய நிகழ்ச்சியில், அவர் பங்கு கொண்டது அமெரிக்காவின் ஒரு மாநிலம்.
அங்கு அவர் பேசுகிறார்.
ஜனாதிபதி அவர்களே, சில வருடம் முன்பு உங்கள் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். இதோ இன்று என்னுடைய குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், என்று குறிப்பிட்டு, அவரை பேச அழைக்கிறார்.
அடுத்து பாலுக்கு பூனை காவல் என்பது போல இருந்த ஜனாதிபதி முன்பாகவே பாகிஸ்தானை கிழித்து தொங்க விட்டார். தீவிரவாத்த்தின் பிறப்பிடமாக இருக்கும் நாடு அது என்பதை சூசகமாக குறிப்பிட்டார்.
ஆர்ட்டிகிள்370 அதன் பிண்ணனி மற்றும் அதன் விளைவை வெகு நேர்த்தியாக பேசி பலத்த கைத்தட்டலை அள்ளிக் கொண்டார்.
ஜனாதிபதியை பாராட்ட வேண்டிய அவசியம் உணர்ந்து அனைவரையும் எழுந்து நின்று அவருக்காக கை தட்ட வைத்து, இவர் நம் நண்பர், தீவிரவாத எதிர்ப்பாளர், என்று சூசகமாக பாகிஸ்தானுக்கு பரிந்து பேசுவதை நிறுத்தி விடு, இதோ உலகம் உன்னை பார்க்கிறது, உன் ஊரிலேயே வந்து உனக்கு நான் பாடம் சொல்லிக் கொடுத்த்தை உன் மக்களும் பார்க்கின்றனர் என்று வெகு அழகாக காய் நகர்த்தினார்.
அவர் மண்ணிலே அவர் முன்பு ஹிந்தியிலேயே உரையாடினார். நீ யாராக இருந்தாலும், என் உரை என்பது என் தேச மக்களுக்காக என்பதை போல இருந்த்து அவரின் இந்த செயல்பாடு.
கடைசி கிளைமாக்ஸ், இதை ஜனாதிபதியே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
கையை கொடுத்த ஜனாதிபதியின் கையை ஒரு கணவனை போல் பற்றிக் கொண்டு, வாருங்கள் இந்த அரங்கின் உள்ளே நாம் கை கோர்த்து ஒரு வலம் வரலாம், அது ஒரு மிகப் பெரிய ஈர்ப்பு சக்தியாகும், என்று சொல்லி அவரின் கையை பிடிக்க, அவரும் அழகாக தலையை ஆட்ட, இருவரும் கை கோர்த்து வலம் வந்தனர்.
நாம் நம் ஊரில் பார்த்திருப்போம், எல்லா கட்சி தலைவரும் சேர்ந்து நிற்கும் மேடையில் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு, இதோ நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், எங்கள் கைகளில் வரும் லஞ்சம் என்பது எங்கள் எல்லா கைகளுக்கும் சரிவர பகிரப்படும் என்பதை அறிவிப்பாக நமக்குச் சொல்வதை போல , அவர்களின் கை கோர்த்தல் இருக்கும்.
ஆனால் இவர்களின் கை கோர்த்தல் தீவிரவாதம் என்ற நோய்க்கு சாவு மணி அடிப்பதை போல இருந்தது.
மேலும் அமெரிக்கா ஸ்டேட்ஸ்மென் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கு!!
சரி ஒரு வெகு சாதாரண மனிதரான மோடி , இப்படி விஸ்வரூபமெடுக்க என்ன காரணங்கள்?
ஒரு சத்ரபதி சிவாஜியின் வீரமும்
ஒரு ராஜபுத்ர்ர்களைப் போல கெளரவமும்
ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் போல துணிச்சலும்
ஒரு நேதாஜி போல திட்டமிடுதலும்
ஒரு வல்லபாய் படேலை போல சாணக்கியமும்
இவை எல்லாவற்றுடன் நேர்மை என்ற ஒரு பெரிய நல் உரத்தைக் கலந்து செய்த கலவையாக மோடி இருப்பதாலோ,
இராமாயண வாலியைப் போல அவரை எதிர்ப்பவர்களின் வலிமை பாதி இவருக்கு வந்து விடுகிறது.
இப்பவும் சொல்கிறேன்,
வாழ்க்கையில் உயிர் என்பது நேர்கோட்டில் இல்லை. மேலும் கீழும் செல்லும் வளைவான கோடுகளே உயிருக்கு அத்தாட்ச்சி இ சி ஜீயில்.
அது போல சில மேலும் கீழுமான பள்ளங்கள் இருக்கவே செய்யும்,
இதையும் தாண்டி, மோடியிடம் காணப்படும் தன்னம்பிக்கை, இந்த தேசம் சிறப்பாக உருமாற அவர் கொடுக்கும் உழைப்பு, தன் படையில் தேர்ந்தெடுத்து இருக்கும் நேர்மையான திறமையான அமைச்சர்கள் என்று, அவர் ஒவ்வொரு காயையும் வெகு சாமர்த்தியமாக நகர்த்தி,
அந்த நகர்தலுடன் நம் தேசத்தையும் பிணைத்து, நிச்சயம் பாரதம் பெரு வல்லரசாக படை பலத்துடன் மட்டுமல்லாது செல்வ வளமையுடன் ஜொலித்து திகழக்கூடிய நாட்கள் வெகு அருகில் இருக்கிறது என்ற உண்மையை நான் என் மனக் கண்ணால் பார்த்தபடியே இருக்கிறேன்.
வாழ்க பாரதம்......ஜெய்ஹிந்த்.
நன்றி...Ranga Nathan.