இராமேஸ்வரத்தில் பதஞ்சலி முனிவர் அருள்கிறார். இங்கிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது. இங்குள்ள தலவிருட்சம் இலந்தை மரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சமாதியும் மற்றும் திருக்கழுக்குன்ற ஆலயத்தில், உச்சியில் ஸ்ரீ கோரக்கரும், காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர், காளங்கிநாதர் மற்றும் பல சித்தர்களும் இருந்து ஞானச் செல்வத்தை வாரி வழங்குகின்றனர்.
திருவாரூரில் கமலமுனி, சுந்தரானந்தர், இடைக்காடரும், திருவண்ணாமலையில் தேரையர், இடைக்காடர், கௌத மகரிஷி, நந்தீஸ்வரர், சுப்ரமணியர், அகப்பேய்ச்சித்தர் மச்சமுனி, குகை நமச்சிவாயர் மற்றும் எண்ணிடலங்கா சித்தர்களும் ஜீவ சமாதியில் இருந்து அருள்புரின்றனர்.
திருவண்ணாமலைக் கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று உள்ளன்போடு சென்றால், மானிட வடிவில் வந்து இன்றும் சித்தர்கள் காட்சி கொடுத்துக் காத்து இரட்சிக்கின்றனர். சத்குருநாதர் ஸ்ரீ காகபுஜண்டரின் ஜீவ சமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.
சேலம், நாமக்கல் (வழி சேந்தமங்கலம்) சாலைக்கு அருகில் கொல்லிமலை என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. தென்காசிக்கு அருகில் திருக்குற்றாலமலை அமைந்துள்ளது. பாபநாசத்திற்கு அருகில் பொதிகைமலை அமைந்துள்ளது. மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைக்கு அருகில் (தானிப்பாறை வழி) சுந்தரமகாலிங்கம் என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. பக்தியோடு, உள்ளுணர்வோடு இம்மலைகளுக்குச் சென்று தங்கி வந்தால் சித்தர்களின் அருளையும், சிவனருளையும் முழுமையாகப் பெறலாம்.
கொல்லிமலையில் ஸ்ரீ அறைப்பள்ளீஸ்வரர் ஆலயம் (குகையில் குடிகொண்ட ஈசன்), பெரியண்ணசாமி ஆலயம், சோரமடையான் ஆலயம், எட்டுக்கை அம்மன் ஆலயம் முதலிய ஆலயங்களும், காகபுஜண்டர் குகை, அகத்தியர் குகை, பாம்பாட்டிச் சித்தர், புலிப்பாணி குகை, காளங்கிநாதர் குகை, கன்னிமார் குகை, கோரக்கர் குன்றம் முதலிய இடங்கள் சித்தர்கள் வழி செல்லும். நாமும் தரிசித்து தங்கியிருந்து அருள்பெற வேண்டிய இடங்களாகும்.
குற்றாலமலையில் அருள்மிகு செண்பகாதேவி ஆலயமும், வாலைக்குகை என்று வழங்கும் தெட்சிணாமூர்த்தி குகை, (பொதிகையில்) அகத்தியர் குகை, ஔவையார் குகை, கோரக்கர் குகை, புஜண்டர் குகை (தேனருவியில் உட்புறத்தில் உள்ளது), பரதேசிப்பாறை முதலியவை தரிசித்துத் தங்கி அருள்பெற வேண்டிய இடங்களாகும்..
நன்றி-நா.சோமசுந்தரம் & Sathishkumar Jothidar