சிறுவயதிலேயே குற்றங்களை செய்துவிட்டு சிறையில் இளமைக்காலத்தை கழிக்கும் சிறார்களை கியோட்டோ பல்கலைக்கழகம் ஆராய்ந்தது. இவர்களுக்கு மனித முகபாவங்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதில் சிரமம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சிறையில் இருக்கும் இளம் குற்றவாளிகள் 26 பேர்களுக்கு மனித முகபாவங்களை படம் போட்டு காட்டினார்கள். முகத்தைப் பார்த்து அது சிரிப்பா, கோபமா, அருவெறுப்பா, கவலையா என்று கேட்டபோது அவர்கள் எல்லாரும் முகபாவத்தை அடையாளம் காண சிரமப்பட்டார்கள் என்று தெரிகிறது. பெரும்பாலும் அவர்கள் அருவெறுப்பு காட்டும் முகத்தை கோபம் என்று தவறாகவே புரிந்து கொண்டனர் என்பது தெரியவந்தது. ஒருவேளை அவர்கள் புரிந்த குற்றங்களுக்கு இந்த அறியாமைதான் காரணமோ என்று சந்தேகப் படும்படியாக இருக்கிறது.
சிறுவர்களாக இருக்கும்போதே இதுபோன்ற சோதனைகளை செய்து வைத்துக்கொள்வது எதிர்காலத்தில் குழந்தைகள் கெட்டவர்களாக மாறாமல் தடுக்க உதவும் என்று ஆய்வாளர் கருத்து தெரிவிக்கிறார்.
நன்றி-நலம், நலம் அறிய ஆவல்.