ஜஸ்ட் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜர் -இந்திய மாணவியின் கண்டுபிடிப்பு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:41 | Best Blogger Tips
ஜஸ்ட் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜர் -இந்திய மாணவியின் கண்டுபிடிப்பு!

கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஈஷா காரே. இவர் வெறும் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்து ஃபினிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். அந்த லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு 50,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றுள்ளது.

சூப்பர் கெப்பாசிட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சார்ஜர், அளவில் மிகச்சிறியதாக உள்ளது. அதே சமயம் மற்ற வழக்கமான பேட்டரிகளை விட 10,000 தடவைக்கும் அதிகமாக மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்டது இந்த மொபைல் சார்ஜர்.

நானோ கெமிஸ்ட்ரி மாணவியான காரேவுக்கு, இந்த பேட்டரியை கண்டுபிடிக்க எது உந்து சக்தியாக இருந்தது எனக் கேட்டபோது, தமது செல்போன் பேட்டரி அடிக்கடி டவுன் ஆகிப்போனதால், மிகவும் வெறுத்துப்போய்விட்டதாகவும், ஒரு கட்டத்தில் நாமே ஏன் அதனை தயாரிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, அதன்பின்னரே தாம் இந்த முயற்சியில் இறங்கியதாகவும் தெரிவிக்கிறார். மாணவி காரே விரைவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர இருப்பது குறிப்பிடத்தக்கது.

LIKE-► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஈஷா காரே. இவர் வெறும் 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்து ஃபினிக்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்தார். அந்த லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு 50,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றுள்ளது.

சூப்பர் கெப்பாசிட்டரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சார்ஜர், அளவில் மிகச்சிறியதாக உள்ளது. அதே சமயம் மற்ற வழக்கமான பேட்டரிகளை விட 10,000 தடவைக்கும் அதிகமாக மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்டது இந்த மொபைல் சார்ஜர்.

நானோ கெமிஸ்ட்ரி மாணவியான காரேவுக்கு, இந்த பேட்டரியை கண்டுபிடிக்க எது உந்து சக்தியாக இருந்தது எனக் கேட்டபோது, தமது செல்போன் பேட்டரி அடிக்கடி டவுன் ஆகிப்போனதால், மிகவும் வெறுத்துப்போய்விட்டதாகவும், ஒரு கட்டத்தில் நாமே ஏன் அதனை தயாரிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, அதன்பின்னரே தாம் இந்த முயற்சியில் இறங்கியதாகவும் தெரிவிக்கிறார். மாணவி காரே விரைவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி  தமிழால் இணைவோம்