பொதுவாக ஹோமியோபதியில் நோயாளிகளிடத்தில் தோன்றும் பொதுக்குறிகளையும் தனித்துவபடுத்தும் தனிக்குறிகளையும் சேர்த்து, அதே ஒத்த குறிகளை உடைய மருந்தை தேர்வு செய்து கொடுக்கும் பொழுதுதான் நோயாளி நோய்குறிகள் முற்றிலும் நீங்கி பூரண நலம் பெறுகிறான். இதுவே ஹோமியோபதியின் தனிசிறப்பு.
ஆனால் Epidemic என்று சொல்லக்கூடிய பரவலாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெரும்பாலான மக்களை நோய் தாக்கும் பொழுது, அந்த பாதிக்கப்பட்ட மக்களினிடத்தில் தோன்றும் பெரும்பாலான பொதுக்குறிகளை தேர்ந்தெடுத்து, அதே ஒத்த குறிகளைக் கொண்ட ஹோமியோபதி மருந்தை தேர்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை துயரத்தில் இருந்து மீட்டு காப்பாற்றலாம். இந்த ஹோமியோபதி மருந்திற்கு “Genus Epidemics” என்று ஹோமியோபதியில் கூறுகிறோம். இந்த “Genus Epidemics” மருந்து பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நோயினால் பாதிக்கப்படாமல் இருக்கும் மக்களுக்கு கொடுக்கும் பொழுது அந்த பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நோய்க்குறிகள் தோன்றா வண்ணம், நம் உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. அதாவது Secondary curative actionயை உருவாக்குகிறது.
இன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்படும் பன்றிக் காய்ச்சலுக்கும் ஹோமியோ பதியில் “Genus Epidemics” உள்ளன. ஹோமியோபதி யில் குணப்படுத்த இயலாத நோய்களே இல்லை.
பன்றிக் காய்ச்சலில் ஏற்படும் குறிகள் சென்னைக்கும், புனேக்கும் சற்று வித்தியாசப்பட்டுள்ளது. வீரியத்தில் பயன்படுத்துவது நல்லது.
பன்றிக்காய்ச்சலுக்கு பயன்படும் மருந்துகள் பற்றி பார்ப்போம்.
Ars alb:
தும்மல், மூக்கிலிருந்து எரிச்சலுடன் கூடிய நீர் ஒழுகுதல், மூக்கு புண்ணாகுதல், பகலில் நீர் ஒழுகுதல், இரவில் மூக்கடைப்பு, மூச்சு காற்று சூடாக படுதல், அதிக உடற்சோர்வு (நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம்). இடைவிடாத இருமல் அதிகமாக இரவு 12 மணிக்கு மேல், வாந்தி (தண்ணீர் குடித்தால் கூட), உணவு அருந்த விரும்பாமை, எதைக் கண்டாலும் வெறுப்பு, அதிக சகிக்கமுடியாத நாற்றத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, அடிக்கடி ஏற்படுதல், அதிக காய்ச்சல் (கை தொட்டால், தொட்டவர் கை சுடும்).
மூச்சு விட சிரமபடுதல், அதிகமாக உடலில் வியர்வை உண்டாகு தல், சூடாக பானம் சிறிதுசிறிதாக குடிப்பது. உடல்சோர்வின் காரணமாக எழுந்து நடமாட முடியாமை.
நோயைப் பற்றிய தீவிர பயம், மரணத்தை நினைத்து பயப் படுதல், தங்கியிருக்கும் அறை மற்றும் உடுத்தும் ஆடை பொருட்களை சுத்தமாக வைத்திருக்க சொல்லுதல், எதிலும் நிலைத்தன்மையில்லாமல் ஒருவித மனக்கவலை மற்றும் பயத்துடனே எப்பொழுதும் இருத்தல்.
Gelsemium:
திடீரென ஏற்படும் மூக்கில் நீர் ஒழுகுதல், தும்மல், அதிக தலைக் கனம், கண்ணை விழித்து மேலே பார்ப்பதற்கு மிக சிரமம். கண்ணின் மேல் இமை கனமாக தோன்றுதல், தலைவலி, தலைவலி - சிறுநீர் கழித்தவுடன் குறைதல், குளிர்நடுக்கத்துடனே கூடிய காய்ச்சல், உடல், கை, கால் வலி, தொண்டை புண் போல வலித்தல், வறட்டு இருமல், தண்ணீர் தாகமின்மை, உணவு உண்ண வெறுப்புணர்வு.
நோய் வருவதற்கு முன் அதிக பயம், எதிலும் ஒரு எச்சரிக்கை உணர்வு (முக கவசம் அணிவார்கள் நோய்வருமுன்). நோய் வந்த பின் எழுந்து நடமாட முடியாமை, அதிக ஓய்வு, தன் தாய் அல்லது தந்தையை, அல்லது சிலர் டாக்டரை ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டே பயத்துடன் இருப்பார்கள்.
Baptisia:
தலை கனமாக இருத்தல், பார்ப்பதற்கு நோய்வாய்ப்பட்ட முகம், மூக்கிலிருந்து வரும் நீர் துர்நாற்றம் வீசுதல், இருமலினால் வரும் சளி துர்நாற்றம் வீசுதல், உடல் வியர்வை, கழிவுகள் அனைத்தும் அதிக சகிக்கமுடியாத நாற்றம் அடித்தல், உடல், கை, கால் தாங்க முடியாத வலி, வலியினால் படுக்கும் இடத்தை அடிக்கடி மாற்றுதல்.
Influen Zinium:
தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல், தலைவலி, ஒவ்வொருமுறை தும்மல் வரும்பொழுது தலை வெடித்து விடுவது போன்ற உணர்வு, உடல், கை கால் வலி, தொண்டை கரகரப்பு, அடிக்கடி உமிழ்நீரை துப்புதல், உடல் சோர்வு, சளி பிடித்ததும் இறந்துவிடுவோம் என்ற பய உணர்வு மேலோங்கி நிற்றல். அதிகம் சூடான பானம் குடிக்க விரும்புதல்.
Sarcolactic Acid:
Arsenic Album remedy திருப்திகரமாகப் பலன் அளிக்காவிட்டால் Sarcolactic acid பயன்படுத்தினால் எந்த வைரஸ் கிருமிகளாலும் உண்டாகும் நோய்க்குறிகள் உடல்சோர்வு முழுவதும் குறைந்து விடும். இந்த மருந்தின் Materia Medicaவிலேயே அதிக உடல்சோர்வு, உடம்பு, கை கால் வலி இருக்கும். நீடித்த தலைவலியுடன் கூடிய தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல் இருக்கும்.
Streptococinum :
இந்த ஹோமியோ மருந்து எந்த காய்ச்சலையும் குறைத்துவிடும். தொண்டை வலி, காதுவலி, விடாது இருமல், எலும்பு மூட்டுகளில் வலி பிரதானமாக இருக்கும். இருமலின் பொழுது அடிக்கடி வாந்தியுடன் கூடிய மயக்கம் உண்டாகும்.
Pyrogen:
இது நீடித்த குறையாத காய்ச்சலுக்கு பயன்படும். கடுமையான உடல்வலி, நாடித்துடிப்பு அடிக்கடி அதிகமாக துடித்து காணப்படும். இது காய்ச்சலுக்கு அழ்ள்ஹப்க்ஷ, Gelsemiumமருந்துகள் நலமாக்கல் குறையும் பொழுது கொடுக்க பூரண நலம் கிட்டும்.
Rhustox:
இது மழைக்காலத்தில் உண்டாகும் பெரும்பாலான காய்ச்சலுடன் கூடிய சளி, தலைவலி, உடல், கை கால் வலி நன்கு கேட்கும். இந்த மருந்து முழங்கால் வலி அதிகம், எழுந்து நடக்க சிரமம், தொண்டை வலி ஒவ்வொரு முறை இருமும் பொழுது உடல், கை கால் வலி நடப்பதால் சிறிது குறையும். அதிகம் உடல் உழைத்தது போல் கடுமையான வலி திடீர் காய்ச்சலில் உண்டாகும்.
திடீர் காய்ச்சல், உடல்வலியினால் வியாதியை நினைத்து பயம், (ஏற்கனவே பாதிக்கப்பட்ட வியாதியை நினைத்து).
இது தவிர Eupatorium, Bell, Bryonia மற்றும் Nuxvomica போன்ற மருந்துகளும் பல நிலைகளில் பயன்படும். அந்தந்த பகுதியில் ஏற்படும் நோய்க்குறிகளை பொருத்து Genus Epidemics தேர்வு செய்யவும். (மருத்துவ இதழில் வெளியானது)