மோகன்லால் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:51 | Best Blogger Tips
மோகன்லால் கேரளத்திலுள்ள பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற இடத்தில், வழக்கறிஞரும் அரசு ஊழியருமான விஸ்வநாதன் நாயர் - சாந்தகுமாரி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். பிறகு இவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்திலுள்ள முடவன்முகள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய தாயாரின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தது. முடவன்முகளில் 'LP' பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார், அதற்குப்பின் திருவனந்தபுரத்தில் உள்ள மாடல் ஸ்கூலில் , தனது படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிக்கூட படிப்பில் சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார், அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்கஆரம்பித்தது; பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார் மேலும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவர் நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது. ] அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர், அவர்களில் ப்ரியதர்ஷன் , M.G.ஸ்ரீகுமார் மற்றும் மணியன்பிள்ளராஜு போன்றவர்கள் மிகவும் பிரபலமான இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் உருவெடுத்தார்கள்.

மோகன்லால் முதன் முதலில்"திறநோட்டம்" (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்ட்) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும் வெளியானது . 1980 ஆம் ஆண்டில் இவர் ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' என்ற மாபெரும் வெற்றிபடத்தின் மூலம் ஒரு முரண்பட்டகதாப்பாத்திரத்தில் நடித்து சாதனைப் படைத்தார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இவர் படிப்படியாக தனக்குமுக்கியத்துவம் நிறைந்த பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1983 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்தார். அந்த காலக் கட்டத்தில் பிரபலமான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதி ஐ.வி சசி இயக்கிய படமான உயரங்களில் என்ற படத்தில் நடித்தார், அதன் கதை ஏமாற்றுவது மற்றும் துரோகம் இழைத்தலை கருத்தாகக் கொண்டது, இது அவருடைய சிறப்பை உயர்த்திக்காட்டிது. அதற்குப்பிறகு அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர் ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான பூச்சைக்கு ஒரு மூக்குத்தி என்ற படத்தில் நகைச்சுவைவேடத்தில் நடித்தார்.

1986 ஆம் ஆண்டு முதல் 1995 வரையிலான கால கட்டம் பரவலாக மலையாளத் திரைப்பட உலகின் பொன்னான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் விரிவான திரைக்கதைகள், தெளிவான விவரணம் மற்றும் அருமையான நோக்கங்கள் நிறைந்த படங்களாக சிறப்பித்தன. கலை ரீதியிலான படங்களுக்கும், வணிக ரீதியில் எடுத்த படங்களுக்கும் இடையிலேயான இடைவெளியை மிகவும் குறுக்கியது. .படிப்படியாக உயர்ந்து வரும் இளம் கலைஞர்களில் ஒருவரான திறமை வாய்ந்த மோகன்லால், பல தரப்பட்ட உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தக்கூடிய அழகான பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றதோடல்லாமல், இவர் மலையாளத் திரை உலகில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுடனும் இயக்குனர்களுடனும் நல்லுறவை மேம்படுத்திக் கொண்டார்.

1986 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக விளங்கியது. சத்யன் அந்திக்காடு அவர்களின் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுத்தந்தது. இவர் நிழலுலக தாதாவாக நடித்த ராஜாவின்டே மகன் என்ற படம் மலையாளத் திரையுலகில் மோகன்லால் ஒருசூப்பர் ஸ்டாராக வெளிப்படுவதை உறுதிசெய்தது. அதே வருடத்தில் இவர், தாளவட்டம் என்ற படத்தில் காப்பிடத்தில் இருக்கும் மனநிலை குன்றியவராக நடித்திருக்கிறார், சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் படத்தில் பெரும் தொல்லைகள் கொடுக்கும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்திலும் , எம்.டி. வாசுதேவன் நாயரின் பஞ்சாக்னியில் பத்திரிகையாளர் வேடத்திலும், நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் படத்தில் காதல் வசப்பட்ட பண்ணையாளராகவும், காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் படத்தில் வேலையில்லாது தவிக்கும் இளைஞன் கூர்காவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை சித்தரிக்கும் கதப்பாதிரமாக, என பல்வேறுவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும் , ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். மேலும் ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார், இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் காலோனல் பதவியை வழங்கியது, இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே. மேலும் காலடிஎன்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் வழங்கி கௌரவித்தது . . தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார்.