தண்ணீரும், இயற்கையான சர்க்கரையும் நிறைந்த பழம் தர்பூசணி. வைட்டமின்கள், தாதுக்கள், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட், குறைந்த அளவு
கலோரிகள் இதில் உள்ளன. 92 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளதால், தாகத்தைத்
தணிக்கும். உடலில் உள்ள நீர்த் தன்மையைச் சரிசெய்யும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்
புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். செரிமானத்துக்கு உதவி, மலச்சிக்கலைப்
போக்குகிறது. வைட்டமின் ஏ உள்ளதால் கண், சருமத்துக்கு நல்லது. சீபம் சீராகச்
சுரக்க உதவுவதால், சருமம், கூந்தல்
ஆரோக்கியமாக இருக்கும்.
நன்றி இணையம்