
🌴 சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்
பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
🌴சூரியன் மேஷ
ராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது.
🌴ஆகவே இந்த
ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக
தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
🌴அசுவதி
தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில்
உள்ளன.
🌴அசுவதி
மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது
உறுதிப்படுகிறது.
🌴தமிழ்
வருடப் பிறப்பை ஒட்டி முதல் நாளே வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும்.
🌴கோலமிட்டு
அழகுபடுத்த வேண்டும்.வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத்
தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும்.
🌴வாயிற்படி
நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது
நம்பிக்கையாகும்.
🌴மஞ்சள், குங்குமம்
ஆகிய இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல்
தடுக்கும் சக்திகளாகும்.
🌴சித்திரை
அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்கி வந்து அதற்கு சந்தனம், குங்குமம், பொருட்டு
ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
🌴குடும்ப
சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும்.
🌴பூஜை
முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார்.
🌴அதன் மூலம்
அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும்
நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
🌴இது
தொன்றுதொட்டு தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வழக்கமாகும்.
🌴சித்திரை
மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார்.
🌴ஆகையால்
அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
🌴ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும்
புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

🌴தமிழ்
புத்தாண்டு நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப்
பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும்.
🌴இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என
அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
🌴அன்று
சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும்.
🌴வேப்பம் பூ
கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு
நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.
🌴சித்திரை
மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
🌴மனித
வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்து காட்டுகிறது.
🌲நன்றி!
நலமுடன்!🌲
🌲தங்கள் நலன்
விரும்பி 🌲
நன்றி இணையம்