ஏன் பாஜகவை பிடித்திருக்கிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips
Image result for advani atal big imageImage result for advani atal big imageRelated imageImage result for advani atal big imageImage result for advani atal big imageImage result for பாஜகவை பிடித்திருக்கிறதுImage result for advani atal big image

பபி....Quora இணையதளத்திலிருந்து..
நல்ல கருத்தாழம் மிக்க கேள்வி.
அடல்ஜி, மூன்று முறை பாரத பிரதமராக இருந்திருக்கிறார். அவரின் குடும்பம் பற்றி ஏதாவது தெரியுமா?
தன் நண்பரின் மகளான நமிதா கவுல் என்பவரை வளர்ப்பு மகளாக தத்தெடுத்துக் கொண்டார். இந்த பெண் தான் அடல்ஜி சிதைக்கு நெருப்பூட்டினார். பிஜேபியில் நமிதா கவுல் எந்த பதவியும் இதுவரை வகிக்கவில்லை. இனிமேலும் வகிக்கப் போவதில்லை.
2. மறைந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அம்மா. அவரின் குடும்பம் பற்றி ஏதாவது தெரியுமா?
அவரின் சொந்த மகள் பெயர் பன்சுரி, ஆக்ஸ்போர்டில் சட்டம் பயின்று, இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். பிஜேபியில் பன்சுரி எந்த பதவியும் இதுவரை வகிக்கவில்லை. இனிமேலும் வகிக்கப் போவதில்லை.
3. மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி. அவருக்கு ரோஹன் என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உண்டு. இருவரும் வழக்கறிஞர்கள். பிஜேபியில் எந்த பதவியும் இதுவரை வகிக்கவில்லை. இனிமேலும் வகிக்கப் போவதில்லை.
4. மகேந்திர பாகுபலி, சே! நரேந்திர தாமோதரதாஸ் மோதி.
மனைவியை சிவ சம்போவென்று விட்டு விட்டு, நாடு முழுவதும் சுற்றித் திரிந்தவர்.
இரண்டாம் முறையாக பிரதமராகி, தமிழக மக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியவர். இதுவரை வாரிசு இல்லை, இனிமேல் யாரையும் தத்தெடுப்பாரா? என்றும் தெரியவில்லை.
அப்படி ஒரு சம்பவம் நடந்தாலும், அது அவரது தனிப்பட்ட குடும்ப விஷயம். அவ்வளவு தான்.
5. சோனியா குடும்பத்தை பற்றி உங்களுக்கே தெரியும். எல்லோருமே ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்று, "காங்கிரஸ் கட்சி தலைவர்" என்ற 'முள் கிரீடத்தை' சுமந்த தியாகிகள்.
6. பிஜேபியில் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும், ஒருவரிடம் திறமை இருந்தால், தலைமையால் கண்டுகொள்ளப்பட்டு படிப்படியாக உயர் நிலைக்கு முன்னேற முடியும்.
7. ராஜா விட்டு கன்னுக்குட்டியாகத் தான் பிறக்க வேண்டும் என்றோ சிறந்த ஜால்ரா கருவி இசை விற்பன்னராக இருக்க வேண்டும் என்றோ நிபந்தனைகள் இல்லை.
8. திறமையும், சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறன் இருந்தால் அவர் எந்த மதமானாலும், பிஜேபி ஆட்சியில் மத்திய அமைச்சராக முடியும்.
K J அல்போன்ஸ், முஃதர் அப்பாஸ் நக்வி போன்றோர் உதாரணம்..
9. பிரதான் மந்திரி முத்ரா யோஜ்னா என்ற திடடத்தின் கீழ் 2016–2017 அதிகமான பலன்களை பெற்ற மாநிலம் எது தெரியுமா? தமிழ் நாடு தான். என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் ...
10. காங்கிரஸ் முன்மொழிந்து, வழி மொழிந்து, ராஜ்ய சபையில் ஆதரவும் தந்து,[1] 2017ம் ஆண்டு தான் ஜிஎஸ்டி அமுல் படுத்த வேண்டும். ஏனெனில் அப்பொழுது தான் 2019 தேர்தலில் தனக்கு சாதகமாக அமையும் என்ற காங்கிரஸ் நிபந்தனையையும் ஏற்று, தைரியமாக ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தை ஒரே நாடு, ஒரே வரி என்பதற்காக கொண்டு வந்த அந்த தில் இருக்கே!
11. தனக்கென்று சொந்தமாக ஒரு செய்தி சேனலும் கிடையாது, இருக்கும் எல்லா சேனலும் அரசுக்கு எதிரான போக்கை கொண்டவை. இப்படிபட்ட நிலையில் ஒரு தலைவர் என்ன செய்து இருக்கணும்: இலவசமாக டிவியோ, ஸ்கூட்டியோ குடுத்து மக்களை கவர்த்திருக்கணும். செய்தார்களா இந்த கஞ்சப் பிசினாறிகள்?
12. கடந்த ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ரஃபேல் ரஃபேல் என்று கூட்டத்தில் உளறிக் கொட்டிய ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு முறை நறுக்கென்று கொட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் தந்த நிகழ்வுகள்[2] எத்தனை தமிழ் சேனல்களில் வந்தது யுவர் ஆனர்?
தன் சொந்த பந்தங்களின் நலன்களை மட்டும் பார்க்காமல், நாட்டு நலனில் அக்கறை கொண்ட தலைவர்களை, கட்சியை எவருக்குமே பிடிக்கும்.
அது பிஜேபியாகத் தான் இருக்க வேண்டும் என்றோ, அவர்கள் பிராமணர்களாகத் தான் இருக்க வேண்டும் என்றோ அவசியமில்லை.
லோகா ஸமஸ்த சுகினோ பவந்து!
-
இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும்.
அடிக்குறிப்புகள்
[1] Why Congress would want GST to be implemented by BJP only after 2017
[2] Rahul Gandhi tenders unconditional apology to Supreme Court for Rafale jibe | India News - Times of India


நன்றி இணையம்