தமிழகம் சமூகநீதியின் பூமி,

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:45 | Best Blogger Tips
Image may contain: 1 person, smiling, standing and outdoor

எளிய மனிதரும் அதிகாரத்தை அடைய வேண்டும், எல்லோரும் இந்நாட்டின் மன்னர் என்றெல்லாம் பேசிய தலைவர்களை கொண்ட தமிழகத்தில் மோடி எதன் தரப்பு என்று புரிந்துகொள்ள முடியாதது ஏன்?
இவர்கள் உண்மையிலேயே
ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாமானிய மக்களின் சமூகநீதியை பற்றி பேசுபவர்கள் என்றால் இவர்கள் எல்லாம் மோடி அவர்களை ஆதரித்து நின்று இருக்க வேண்டும்
சர்வாதிகார அரசாங்கம் நடக்கும் எஃகு கோட்டையாக காங்கிரஸ் எழுந்து நின்ற போது
அந்த காங்கிரஸ் பரம்பரை அதிகாரத்தை எதிர்த்து...
காங்கிரஸின் எஃகு கோட்டையை உடைக்க திமுக கம்யூனிஸ்ட் எல்லாம் போர்பூண்டு தோற்றது...
இவர்கள் தோற்ற இடத்தில் தாக்குதல் நடத்தி காங்கிரஸ் எஃகு கோட்டையை தூள் தூளாக்கி
சமூகத்தின் பலவீனமான மக்கள் பக்கத்தின் பிரதநிதியாகத்தான் மோடி வெற்றி நாயகராக எழுந்து வந்திருக்கிறார்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களை வீழ்த்தி... அதிகாரத்தை அடையாதவர்களுக்கு அதை வழங்கவுமே பாஜக ஏற்பாட்டில் மோடி வந்திருக்கிறார்.
துருப்பிடித்து தேங்கி நிற்கும் அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாநிலத்தையும் அவரவர் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைத்து மோடி அரசியல் செய்கிறார்.
பெரியார் இருந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார் என்று அரசியல் ஆய்வாளர் திரு.ரவீந்திரன் துரைசாமி சொல்லி வருகிறார்.
அதன் பொருள் அப்பட்டமாக சொல்வது ஒரு அடையாள அரசியலை காமராஜரை ஆதரித்ததற்கு பெரியார் சொன்ன நியாயம் என்ன இருந்ததோ அதே நியாயம் மோடிக்கும் இந்திய அளவில் உள்ளது.
ஆனால் திமுகவின் குரலாக ஊடகங்கள் விவாதங்களில் ஒலிக்கிற பத்திரிக்கையாளர் பிரியன் பேசுகிறார் ஸ்டாலின் மோடி தலைமையில் கூட்டணியில் என்றும் இணையமாட்டோம் என்று கடிதம் எழுதுவதன் காரணம் என்ன?
மோடியை புறக்கணித்து பாஜக கட்காரியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் அப்படியோரு நிலை வந்ததால் பாஜக திமுக கூட்டணி உருவாகும் என்று சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பேசுகிறார்....
இதன் பொருள் என்ன?
ஆக பிற்படுத்தப்பட்ட மோடியை ஏற்க முடியாது. பிராமணர், காயஸ்த்து, ராஜ்புத்தர்களாக இருந்தால்தான் சமூகநீதியை காக்க முடியும் என்று இவர்கள் எண்ணுகிறார்களா?....
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நான் பூணூல் போட்ட பிராமணர் என்று பெருமையாக சொல்லும் ராகுல் காந்திக்கு எதிராக அறிக்கை விட திக, திமுக, மதிமுக கம்யூனிஸ்ட், தயாராக இல்லை
ஒரு சமயம் இவர்களின் கொள்கைகளின் பிதாமகர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி இவர்கள் உயிரோடு இருந்தால் நிச்சயமாக ராகுலை கண்டித்து பேசியிருப்பார்கள் அல்லவா....
அதனால்தான் சொல்கிறோம் வீரமணிக்கோ, சுப வீரபாண்டியனுக்கோ திமுக கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கோ சமூகநீதியை பற்றி பேசவோ, மோடியை பற்றியோ, பாஜக பற்றியோ விமர்சனம் செய்யவோ எந்த நியாயமும் இல்லை....
ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாமானிய மக்களை அதிகாரத்தில் அமர வைக்கத்தான் பாஜக இயங்கி கொண்டு இருக்கிறது....
அதன் அடையாளம் தான் மோடி
இதை எதிர்ப்பதுதான் தமிழகத்தில் உள்ள அரசியல் அபத்தங்களை வெளிக்கொண்டு வருகிறது..


நன்றி இணையம்