உடல்பருமன் என்பது இன்றைக்கு அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகிவிட்டது. பாஸ்ட் புட் காலமாகிவிட்டதால் உண்ணும் உணவானது தேவையற்ற கொழுப்பாக மாறி ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு உடலானது பருமனடைகிறது. இதனால் ஏராளமானோர் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடக்கின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். பட்டினி கிடந்தாலே, மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலோ உடல் எடை குறையாது. உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும். கொழுப்பை கரைப்பதில் கொடாம்புளி முக்கிய பங்கு வகிக்கிறது.
கொடாம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது. இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடாம்புளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் கொடாம்புளி அதிகம் பயன்படுத்துகிறார்கள்
கொழுப்பு குறையும்
கொடாம்புளியின் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெருமளவில் உதவுகிறது.
உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.
உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடாம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
மூட்டுவலி குணமடையும்
கொடாம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த நோய்களை சீராக்கும்.
சீரணமண்டலம் பலப்படும்
புளிக்குப் பதிலாக கொடாம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும். கொடாம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.
நன்றி ஆரோக்கியமான வாழ்வு